Sharmila Mandre – Kalki (Tamil Magazine) Interview
மிரட்டல் ஷர்மிளா
பீச்சில உட்கார்ந்து லவ் பண்ணணும்…
ராகவ்குமார்

மிரட்டல் பட ஹீரோயின் ஷர்மிளா நமது கேள்விகளுக்கு மிரட்டலாக பதில் சொல்கிறார்:
மிரட்டல் கதாநாயகியை யாராவது மிரட்டியிருக்காங்களா?
நான்தான் மத்தவங்களை மிரட்டியிருக்கேன்.”
படிப்பு…?
பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்.”
நடிப்பு…?
சின்ன வயதிலிருந்து ஏற்பட்ட காதல்.”
தமிழ் சினிமா மீது காதல் ஏன்…?
குழந்தையிலிருந்து நிறைய தமிழ் சினிமா பார்த்து காதலை வளர்த்துக்கிட்டேன்.”
ஸ்கூல் டேஸில் யாரையாவது லவ் பண்ணியிருக்கீங்களா?
ஸ்கூல் டேஸில் நான் ரொம்ப குண்டாயிருப்பேன். அதனால யாரும் என்னை லவ் பண்ணலை.”
இப்போ?
காலேஜில் ஒரு பையனை மனதுக்குள் லவ் பண்ணேன். என் லவ்வை கன்வே பண்றதுக்கு முன்னாடி அந்தப் பையன் என்கிட்ட ஃபிரெண்ட்லியா பழகறேன்னு சொல்லிட்டான்.
ஸோ, ஐடியாவை கைவிட்டுட்டேன். ”
எதிர்காலத்தில்?
தெரியாதுங்க.”
லவ் மேரேஜ் அரேஞ்ச் மேரேஜ் எது பெட்டர்?
லவ் மேரேஜ்தான் பெஸ்ட்.”
சந்தோஷமாயிருந்தா?
‘ஊ’ன்னு கத்திடுவேன். மிரட்டல் டைரக்டர் மாதேஷ், ‘என் படத்துக்கு நீதான் ஹீரோயின்’னு சொன்னப்ப இப்படித்தான் கத்திட்டேன்.”
கோபமாயிருந்தா?
சம்பந்தப்பட்டவங்களோட சண்டை போட்டுட்டு சில மணி நேரத்தில் ஃபிரெண்டாயிடுவேன்.”
தமிழ் ரசிகர்கள்…
அன்பானவங்க. (நாங்க அழகானவங்ககிட்ட அன்பாதான் இருப்போம்).”
நடிக்க வர்றதுக்கு முன்னாடி?
அனுபம்கேர்’ நடத்திய நடிப்புப் பள்ளியில் நடிப்பு கோர்ஸ் படிச்சேன். மும்பையில் மேடை நாடகங்கள் நடிச்சிக்கிட்டிருந்தேன்.”
க்ளாமர்…?

சாப்பாட்டுக்கு ஊறுகாய் மாதிரி.”
கடவுள் உங்க முன்னாடி வந்தா?
எப்போதும் சந்தோஷத்தைக் கேட்பேன்.”
சிரிப்பு?
எப்போதும் நம்மகிட்ட இருக்க வேண்டிய சொத்து.”
பிடிச்ச நாவல்?
“”Nicholas Sparkகின் நோட்புக், படிக்கப் படிக்க ரொமாண்டிக்கா இருக்கும்.”
பிடிச்ச ரொமாண்டிக்?
பீச்சில் உட்கார்ந்து லவ் பண்ணணும்.” (கொஞ்ச நாளில் உங்களை மெரினா பக்கம் பார்க்கலாம்ன்னு சொல்லுங்க.)
ஃபேஸ்புக்?
நம்ம திறமைகளையும், சந்தோஷங்களையும் பகிர்ந்துக்கிறதுக்கு நல்ல இடம்.”
ஃபேஸ்புக்கில் வழியறவங்க?
நெட்வொர்க்கிலிருந்து டெலிட் பண்ணிடுவேன்.”
எதிர்காலத் திட்டம்?
தயாரிப்பாளராய் மாறணும்.”
பிடித்த நடிகர்?
சூர்யா.”
எந்த நடிகை மாதிரி பெயர் வாங்க ஆசை?
ஜோதிகா, லக்ஷ்மி மாதிரி.”
பியூட்டி டிப்ஸ்?
எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருங்க.”
அழகை எப்படி மெயின்டெயின் பண்றீங்க?
உடம்புக்கு ஜிம், நீச்சல். மனசுக்கு யோகா.”
தமிழில் பார்த்த படங்களில் பிடித்தது?
அப்ப ‘சின்ன தம்பி’. இப்ப ‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘பையா’ “.