Sweet Sunaina’s Interview in Tamil Magazine in Kalki
ஸ்வீட் சுனேனா
விருதுகள் தேடி வரும்!
விஜய் கோபால்

‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைக் கலைத்தவர் சுனேனா. காரப்பூமியான ஆந்திராவின் ரசகுல்லா. இடையில் காணாமல் போனவர் ‘நீர்ப்பறவை’ படம் மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார் ஸ்வீட் சுனேனா. அவரோடு மாட்லாடி மகிழ்ந்த போது…
‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ படத்தில் ஓவர் கிளாமர் ஏன்?
இராசு மதுரவன், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படம் எடுப்பார். ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ படத்தில் எனக்கு வலுவான கேரக்டர். நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. மலேசியாவில் படமாக்கிய பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடித்தது உண்மை. கதைக்குத் தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பது தவறு இல்லைதானே?”
‘நீர்ப்பறவை’ உங்கள் நடிப்புத் திறமைக்கு சவாலாக இருந்ததா?
அந்தப் படத்தில் முதலில் பிந்துமாதவி நடிப்பதாக இருந்தது. திடீரென்று என்னை அழைத்தார் சீனுராமசாமி. எனக்கு இன்ப அதிர்ச்சி. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ மூலம் தேசிய விருது வாங்கிய இயக்குனர். அதனாலேயே அவரிடம் எந்த விளக்கமும் கேட்காமல் ஒப்புக் கொண்டேன். கதைக்கு நான் மிகப் பொருத்தமாயிருப்பேன் என்று அவர் நினைத்து என்னை செலக்ட் செய்திருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் பலமுறை ‘சபாஷ்’ வாங்கினேன். அவர் நடிப்பு சொல்லித்தரும் விதமே, சூப்பராக இருக்கும். எனக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கு; படத்துக்கு நிச்சயம் விருது கிடைக்கும்!”
இன்னும் பெரிய படங்கள், பெரிய நடிகர்களுடன் நடிக்கலையே?

இப்போது நான் நடிக்கும் படங்கள் எல்லாம் பெரிய படங்கள்தான். ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ இராசு மதுரவனின் பெரிய படம்தான் ‘நீர்ப்பறவை’. தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி படம். ‘சமர்’, நடிகர் விஷால், த்ரிஷாவுடன் நடிக்கிறேன். ‘திருத்தணி’ படத்தில் பரத்துக்கு ஜோடி. அஜ்மலுடன் ‘சக்திவேல்’ படத்தில் ஜோடி; நான் பெரிய இயக்குனர் சின்ன இயக்குனர் என்று பார்ப்பதில்லை. நல்ல கதை. நல்ல இயக்குனர் என்று மட்டுமே பார்க்கிறேன்.”
விஷால், த்ரிஷா இவர்களுடன் நடித்த போது ஏற்பட்ட அனுபவம்?
‘சமர்’ படம் ஊட்டியில்தான் நடைபெற்றது. விஷாலுடன் ஒரு பாடலில் நடித்துள்ளேன். நல்ல கலகலப்பாய் இருப்பார். கலாய்த்துக் கொண்டே இருப்பார். ஷூட்டிங் போலவே தெரியவில்லை. ஒரு குடும்பத்துடன் டூர் போய் வந்தது போல் இருந்தது. இப்போது த்ரிஷாவும் நானும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். பழகுவதற்கு இனிமையானவர் த்ரிஷா. படம் முடிவதற்குள் நல்லா குளோஸ் ஆயிடுவேன்.”
இடதுகையில் 14-ம் நூற்றாண்டு மோதிரம் ஏன்?
எங்கள் வீட்டுப் பூஜையறையில் பல ஆண்டுகளாக ஒரு பெட்டி இருந்தது. அதை இப்போதுதான் திறந்து பார்த்தோம். அதில் 18-ம் நூற்றாண்டு, 14-ம் நூற்றாண்டு மோதிரமும் இருந்தது. இப்போது அந்த மோதிரம் தான் அணிந்துள்ளேன்! இது ரொம்ப ராசியான மோதிரம். நல்ல சென்டிமென்டாக இருக்கிறது!”