Skip to content

Attakathi Nandita’s Interview in KALKI (Tamil Magazine)

September 2, 2012

அட்டகத்தி நந்திதா

 

”காதல் பூ இன்னும் பூக்கவில்லை!”

 

விஜய்கோபால்

கன்னடத்துப் பைங்கிளிகள் அவ்வப்போது கோடம்பாக்கத்தின் மீது படையெடுத்து ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துவிடுவார்கள். இதோ இப்போது ‘அட்டகத்தி’ மூலம் ரசிகர்களைப் பதம்பார்க்க வந்துவிட்டார் நந்திதா…

என்னோட ஒரிஜினல் பேர் ஸ்வேதா. ‘நந்தா-நந்திதா’ படத்தில் நடித்ததில் சென்டிமென்டாக நந்திதா என இயக்குனர் அந்தப் பேரை வைத்து விட்டார். நான் இயற்கையிலேயே நல்ல அழகு. அம்மா, எனக்கென்று விசேஷமாய் அழகு டிப்ஸ்களைத் தருவார். அத்தனையும் இயற்கைப் பொருட்களால் ஆனவை. மாதத்தில் இரண்டு நாட்கள் தலைக்கு ‘ஹென்னா’ போட்டுக் கொள்வேன். எனக்கு நிறைய தோழிகள். அவர்களுடன் பேசும் போது அதிகம் சினிமாவைப் பற்றிப் பேசுவேன். அவர்கள், ‘நீயும் அழகாத்தான் இருக்கிற ஏன் நடிகை ஆகக் கூடாது’ என தூபம் போட்டார்கள். எங்க வீட்டில் நடிப்பு என்றாலே வேப்பங்காய். எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று தெரியாமல் முதல் படியாக மாடலிங் செய்தேன். நிறைய விளம்பரங்களில் நடித்தேன். ஆனால் சினிமா கனவு என்னைத் தூங்கவிடவில்லை. வீட்டுக்குத் தெரிந்ததும் தாம்தூம் என குதித்தார்கள்.

அப்பாவுக்கு ரியல் எஸ்டேட் பிஸினஸ். அதனால் பணத்துக்கு ஒன்றும் கஷ்டமில்லை. அப்பாவை ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்தேன். அதன்பின் ஒரு கன்னடப் பட வாய்ப்பு வந்தது. அந்தப் படம்தான் விஜய்குமார் இயக்கத்திலே வெளிவந்த ‘நந்தா நந்திதா’. நான் கன்னடத்தில் செய்த கேரக்டரைத்தான் மேக்னாராஜ் தமிழில் செய்தார். அந்தப் பட வெற்றி என் சினிமா கதவைத் திறந்துவிட்டது.”

அட்டகத்தி?

அதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். படம் முழுவதும் மணப்பாக்கம் கிராமத்தில்தான் எடுத்தார்கள். நான் பெங்களூரில் கல்லூரியில் பி.காம்., இரண்டாவது வருடம் படிக்கிறேன். படத்திலும் கல்லூரி மாணவி வேடம் என்பதால் நடிப்பு + படிப்பு என்பது இயல்பாகவே வந்து விட்டது. இயக்குனர் ரஞ்சித், பெங்களூரு வந்து என்னிடம் கதை சொல்லும்போது, ‘இது ஒரு கல்லூரி மாணவியின் வாழ்வில் நடக்கும் காதல் சம்பவம்தான்’ என அவர் சொல்லச் சொல்ல விஷுவலாகக் கற்பனை செய்து பார்த்தேன். பாவாடை தாவணியில் அப்போதே அழகாகத் தெரிந்தேன். படம் முடிந்து நந்திதா மறைந்து ‘பூர்ணி’தான் என்னுள் இருக்கிறாள்.”

உங்கள் நிஜவாழ்வில் காதல் பூ பூத்திருக்கிறதா?

படத்தில் நடிக்கவே விட மாட்டேன் என்று சொன்ன குடும்பத்தில் இது எப்படிங்க சாத்தியம்? காதல், கீதல் என்றால் அவ்வளவு தான். தொலைந்தேன். நிஜத்தில் அப்படி எல்லாம் எந்தப் பூவும் பூக்கவில்லை.”

அடுத்த கமிட்மென்ட்?

இப்போதைக்கு வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கிறேன். நல்ல கதை. முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. மீண்டும் கன்னடப் படங்களிலும் வாய்ப்பு வருகிறது. நல்ல படமாகத் தேர்வு செய்து நடிக்க வேண்டும்.”

கவர்ச்சியாக நடிப்பீர்களா?

மாட்டவே மாட்டேன். வீட்டில் நடிக்கவே விடமாட்டார்கள்.”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: