Skip to content

Dir Myyskin’s Interview in Kalki (Tamil Magazine)

September 2, 2012
increase font size
 

 

exclusive

 

 

 

பிளாட்பாரத்தில் இருந்து ஒரு சூப்பர்மேன்!

 

எஸ்.சந்திரமெளலி

நான் இதுவரை எடுத்திருக்கும் அனைத்துமே சுவாரஸ்யமான டிராமாககள்; இனிமேல்தான் சினிமா எடுக்கணும்” என்கிறார் இயக்குனர் மிஷ்கின். ஜீவாவுக்கு ‘முகமூடி’ மாட்டி சூப்பர்மேன் ஆக்கிய பெருமிதத்தில் இருக்கிறார். அதுவும் பிளாட்பாரத்திலிருந்து உருவான சூப்பர்மேன் ” என்கிறார் மிஷ்கின்.

‘யுத்தம் செய்’ க்ரைம் திரில்லர்… ‘முகமூடி’யில் ஃபான்டஸி சப்ஜெக்ட் ஏன்?

எனக்கு சிறு வயது முதலே இரும்புக் கை மாயாவி, ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், ஃபேந்தம்… போன்ற ஃபான்டஸி கதாபாத்திரங்கள் மீது ஈர்ப்பு உண்டு. இவர்களின் சாகஸங்கள் எனக்குள்ளே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அதனால்தான் அந்த மாதிரி ஒரு கேரக்டரை வைத்து கதை பண்ண வேண்டும் என்று திட்டமிட்டேன். அது நனவாகி இருக்கிறது. ‘முகமூடி’ ஃபான்டஸிதான். தமிழில் எல்லாப் படங்களுமே ஃபான்டஸிதானே? நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள்தான் திரையில் கதை சொல்லும் டெக்னிக்கைச் சொல்லிக் கொடுத்தன.”

எப்படி?

காமிக்ஸ்களில் ஒவ்வொரு படமும் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போகும். கதாபாத்திரங்கள் பேசுவது ரொம்பக் குறைவு. அதே போலத்தான் நான் படங்களில் ஷாட் பிரித்து வைக்கிறேன். மேலும், சினிமா என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது என்பதை உலக சினிமாவின் மூலம் கற்றிருக்கிறேன்.”

‘முகமூடி’யின் ஹீரோ மாயாவியா? சூப்பர்மேனா?

என் ஹீரோ, ஹாலிவுட் சூப்பர் ஹீரோவும் இல்லை; நம் ஊர் அதிரடி ஆக்ஷன் ஹீரோவும் இல்லை. ஆனால் அவர்களைவிட சூப்பரானவன். காரணம் அவனுக்கு எந்தவிதமான அசாதாரணச் சக்தியும் கிடையாது. ஆனால் அவன் சாதாரண மனிதர்களால் முடியாதவற்றைச் செய்வான். தமிழ் நாட்டுச் சூழ்நிலைக்கு ரொம்ப பொருத்தமாக அவனைப் படைத்திருக்கிறேன்.”

அப்போ படத்தில் லவ் கிடையாதா?

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க.. என் ஹீரோ ஓர் இளைஞனாயிற்றே? இளம்வயதில் ஒருவனுக்குக் காதலைவிட சுவாரஸ்யம், சவால்… வேறு என்ன? என் ஹீரோவும் காதலியைத் தேடி ஒரு அட்வென்சர் செய்கிறான். ஆனால், அவன் அதற்கும் அடுத்த கட்டத்துக்குப் போய் இன்னும் பலவித சவால்களையும் சந்திக்கும்படி ஆகிறது. நிச்சயமாக ‘முகமூடி’ ஒரு வித்தியாசமான படம். தவிர, இது முழுமையான குடும்ப பொழுதுபோக்குப் படம்.”

ஏன் சூப்பர் ஹீரோ ஆகிறான்?

அவன் முதலில் சாதாரணமாகத்தான் இருக்கிறான். ஒருநாள் பிளாட்பாரத்தில் ஓர் ஏழைக் குடிமகனுக்கு, நடக்கும் அநீதியைப் பார்த்துத் தட்டிக் கேட்கிறான். அதுதான் சூப்பர்மேனின் தொடக்கம். அவனுடைய ஒரு ஸ்பெஷாலிடி இரவில்தான் அவன் நடனமாடுவான்.”

ஹீரோவாக ஜீவா ஏன்?

இந்தக் கதை, இன்றைக்கு இருக்கும் எல்லா ஹீரோக்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும். தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஜீவாவை சஜஸ்ட் பண்ணினபோது, அவரோடு பேசினேன். ஆனால், நான் ரொம்ப இம்ப்ரஸ் ஆகவில்லை. ‘அவரிடம் இந்தப் படத்துக்காக ஆறு மாதம் குங்ஃபூ பயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, அவர் ‘நான் எட்டு வருஷமாய் குங்ஃபூ டிரெயினிங் எடுத்துக்கறேன்’ என்றார். எனக்கு ஆச்சர்யம். அவரோடு நன்றாகப் பழக ஆரம்பித்த பிறகு ‘இவரைவிட இந்த கேரக்டருக்குப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது’ என்று இப்போது தோன்றுகிறது.”

ஜீவா என்ஜாய் பண்ணினாரா?

ஜீவாவுடைய நிஜ கேரக்டருக்கு ரொம்பப் பொருத்தமாக வந்திருக்கிறது. படம் பார்க்கிற எல்லாருக்கும் ஜீவாவைப் பிடிக்கும். ஜீவாவின் ப்ளஸ் பாயின்டே அவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பர்ஃபெக்ட்டாக ஃபிட் ஆகிவிடுவார். தன்னை எல்லோரும் ஒரு நல்ல, திறமையான ஹீரோ என்று சொல்ல வேண்டும் என்பதே அவருடைய ஆசை. அதை இந்தப் படம் மூலம் சாதித்திருக்கிறார்.”

உங்க ஃபேவரிட் நரேன்?

‘முகமூடி’யில் நரேன் முக்கியமான, டிராகன் மாஸ்டர். அவருடைய அங்குச்சாமி நெகடிவ் கேரக்டர்தான். முதலில் தயங்கினாலும், பிறகு சம்மதித்துவிட்டார். அவருடைய திறமை அபாரமானது. சுருக்கமாய் சொல்லணும்னா நரேன் ஒரு கேணி மாதிரி. அவருக்குள்ளே இருந்து நாம நிறைய தோண்டி எடுக்கலாம். அவர் குங்ஃபூ மாஸ்டராக நடிக்கும் ஸ்டைலைப் பார்த்துவிட்டு, அவருடைய குங்ஃபூ டிரெயினரே அசந்து போயிட்டார். இந்தப் படத்தில் ஜீவாவும், நரேனும் என்னை தூக்கிப் பிடித்திருக்கிறார்கள்.”

பூஜா ஹெக்டே?

பூஜா, ரொம்ப பாபுலர் மாடல். மிஸ் இந்தியா போட்டியில இரண்டாம் இடம் பெற்றவர். விளம்பரங்கள்ல நடிச்சிருந்தாலும், சினிமாவுக்குப் புதுசு. ரொம்ப நாளாய் நல்ல கேரக்டர் வந்தால் தான் நடிக்கிறதுன்னு காத்திருந்தார். அவருக்கு நடிப்பு வருமான்னு முதல்ல எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால், புதுமுகம் மாதிரி இல்லாமல், ரொம்ப அனுபவசாலி மாதிரி பர்ஃபார்ம் பண்ணி இருக்காங்க.” 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: