Skip to content

“நயன்தாராவை இப்போ ரொம்பப் பிடிக்குது!”

September 27, 2012

னுஷ்காவிடம் தொனிப்பது சினிமா ஹீரோயின்களுக்கே உரித்தான கிளாமர் அழகு அல்ல; இமை முதல் இதழ் வரை இடை முதல் உடை வரை அழகின் சௌந்தர்யம்!

” ‘தாண்டவம்’ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் படம். விக்ரம், விஜய்னு எனக்கு ஹோம்லி ஃபீல் கொடுக்கும் யூனிட். லண்டன்ல ரெண்டு மாசம் ஷூட்டிங். ஆனா, எப்படா வீட்டுக்குத் திரும்புவோம்னு ஒருநாள்கூடத் தோணலை. அந்த அளவுக்கு எங்களுக்குள்ள செட்டில் ஆகிட்டோம். ஐ மிஸ் மை ஃப்ரெண்ட்ஸ்!”

”ரொம்ப சீக்கிரமே விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஆர்யானு எல்லார்கூடவும் நடிச்சிட்டீங்க… ஒவ்வொருத்தர்கிட்டேயும் என்ன பிடிக்கும்?”

”விஜய் டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். சின்ன ஸ்டெப்லகூட நம்மளைக் காலி பண்ணிட்டுப் போயிடுவார். டைரக்டர் ‘ஷாட் ஓ.கே.’ சொன்னாலும் மானிட்டர்ல போய்ப் பார்த்தால்தான் எனக்குத் திருப்தியா இருக்கும். அதில் சத்தமே இல்லாம ஸ்கோர் பண்ணிட்டுப்போயிடுவார். விஜய்க்கு டான்ஸ்னா, விக்ரமுக்கு ஆக்ட்டிங். ஃப்ரேம்ல சும்மா நிக்கிற சீன்லகூட விக்ரம் ஏதாச்சும் ட்ரை பண்ணிட்டே இருப்பார். சின்ன ரியாக்ஷன்ல நம்மளோட ஒட்டுமொத்த பெர்ஃபார்மன்ஸையும் காலி பண்ணிடுவார். அவர்கிட்ட ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். இல்லைன்னா, பளிச்னு நம்ம வீக்னெஸ் தெரிஞ்சிடும். சூர்யா ரொம்ப ஜென்டில். நாம ஸ்கோர் பண்றதுக்கும் ஸ்பேஸ் கொடுத்துட்டு நிப்பார். கார்த்திகூட இப்பதான் நடிக்கிறேன். ஆர்யா செம கலாட்டாவா இருப்பார்னு சொன்னாங்க. ஆனா, செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப சின்சியரா இருந்தார். செல்வா சொல்றதைக் கேட்டுக் கேட்டு அப்படியே நடிச்சுட்டு இருந்தார்.”

”உங்களைப் பற்றிய கிசுகிசுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்குனு சொல்ல முடியுமா?”

”இப்ப சினிமால இருக்கிறது ஃப்ரெண்ட்ஷிப் ட்ரெண்ட். யார்கிட்டயும் பொறாமை, கோபம் கிடையாது. எல்லாரும் ரொம்ப சகஜமா பழகிக்குறோம். நிறைய வேலைகள் ஒண்ணா எடுத்துக்கிட்டு செய்ய வேண்டி இருக்கு. நடிப்புங்கிறது பெரிய கேன்வாஸ். அதுவும் பல கோடிகள் விளையாடும் பிசினஸ். அதில் ஒரு ஹீரோவுடன் நடிக்கும்போது பரஸ்பரப் புரிதல் ரொம்ப முக்கியம். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் எப்படி ஒரு பெண் தன் டீமில் இருக்கிற எல்லாரோடவும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கிறாங்களோ, அப்படித்தான் ஒரு ஹீரோயினும் சினிமாவில் நடந்துக்க வேண்டி இருக்கு. அதைத் தப்பா புரஜெக்ட் பண்ணா, எதுவும் பண்ண முடியாது. பேசுறது, சிரிக்கிறது, பழகுறது எல்லாம் காதல் ஆகாது. நான் எல்லாருடனும் மனசு விட்டுப் பழகுவேன். மத்த எந்த விஷயத்துக்காகவும் என் ரிலேஷன்ஷிப்பை நான் காயப்படுத்திக்க மாட்டேன். சில செய்திகள் என் குடும்பம் வரை போறப்ப, வருத்தமாத்தான் இருக்கும். ஆனா, கைவசம் இருக்கவே இருக்கு யோகா. மனசு சங்கடமா இருக்கிறப்ப, யோகா வில் மூச்சைப் பிடிச்சு உட்கார்ந்து மனசை ஒரு நிலைப் படுத்த வேண்டியதுதான்!”

”உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் யார்?”

”ஹீரோயின்ஸ்னு கேளுங்க. தமன்னா ரொம்ப ஃப்ரெண்ட். கொஞ்ச நேரம் கிடைச்சாலும் அரட்டைதான். காஜல் ரொம்ப அழகா இருக்காங்க. எல்லாப் பிரச்னைகளையும் தாண்டி போல்டா இருக்கிற நயன்தாராவை இப்ப ரொம்பப் பிடிக்குது. அவங்களுக்கு இப்ப இருக்கிற க்ரேஸ்… சூப்பர்!”

”நடிப்பில் இவங்களை மிஞ்ச முடியலைனு நீங்க நினைக்கிற ஹீரோயின்ஸ் யாராவது இருக்காங்களா?”

”இருந்தா சொல்லிடுவேனே?”

அதுதான் அனுஷ்கா!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: