Skip to content

அனுஷ்கா, நயன்தாராவுக்கு ஆர்யாவை ஏன் பிடிக்கிறது?

October 11, 2012

“இந்தி ஒரிஜினலில் ஹீரோ இம்ரான் தன் நண்பர்களோட பேசுற வசனத்தில் கொஞ்சம் ‘பச்சை’ இருக்கும். இயல்பா நண்பர்கள் என்ன பேசிக்குவாங்களோ, அப்படியே ராவா இருக்கும். ஆனா, அதை அப்படியே நாம இங்கே வைக்க முடியாதே. அதான் குறும்புச் சேட்டைகளை மட்டுமே வெச்சுக்கிட்டோம். ஆனா, கிளாமருக்குப் பஞ்சமே வைக்கலை. ஒரிஜினலைக் காட்டிலும் ‘ஆஹா… ஓஹோ’னு சொல்ற அளவுக்கு விளையாடி இருக்கோம். ஹன்சிகா, அஞ்சலினு ரெண்டு ‘மேட்ச் வின்னர்’களை வெச்சுக்கிட்டு, சிக்ஸர் அடிக்காம இருக்க முடியுமா?”- குறும்பாகச் சிரிக்கிறார் ‘சேட்டை’ பட இயக்குநர் கண்ணன்.

 ”அப்ப ஆர்யா, சந்தானத்துக்குப் படத்துல என்னதான் வேலை?”

”அவங்க ரெண்டு ஹீரோயின்களுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிப்பாங்க. ஆர்யா, பிரேம்ஜி, சந்தானம்… மூணு பேரும் சேர்ந்து 5,000 ரூபாய் வாடகையை ஷேர் பண்ணிட்டுக் குடியிருக்கிற பேச்சிலர்ஸ். தினமும் குடி, கூத்துதான். பத்திரிகையில வேலை பார்க்குற சந்தானத்துக்கு ‘நடுப் பக்கம் நாகராஜ்’னு பேரு. ‘அந்த நடிகர் அப்படி… இந்த அரசியல்வாதி இப்படி’னு உட்டாலக்கடிக்  கிசுகிசுக்களை எழுதி பரபரப்பு பண்ணிட்டே இருப்பார். பிரேம்ஜி ஒரு கார்ட்டூனிஸ்ட். ஆர்யா ரிப்போர்ட்டர். அச்சுபிச்சுனு காமெடி பண்ணி அசால்ட்டா சிரிக்கவெச்சுருவாங்க.”

”ஆர்யா இப்ப நல்ல ஃபார்மில் இருக்கார். அவரை எப்படி அச்சுபிச்சு காமெடி பண்ணவெச்சீங்க?”

”ஆக்ஷன், ரொமான்ஸ்னு எல்லாத்துலயும் கலந்துகட்டி அடிக்கிறார் மனுஷன். ஆனா, இந்தப் படத்துல அவர் ஒரு சராசரி ரிப்போர்ட்டர். பஞ்ச் டயலாக் கிடையாது. எகிறிப் பறந்து சண்டை போட மாட்டார். சொல்லப்போனா, வில்லனைப் பார்த்துட்டு தலைதெறிக்க ஓடுவார். அவரை மத்த எல்லா விதத்திலும் பார்த்திருப்பீங்க. ஆனா, இந்தப் படத்துல அவர் நடிச்ச ஸ்டைலை வேற எங்கேயும் பார்த்திருக்க முடியாது.”

”அஞ்சலி, ஹன்சிகா… ரெண்டு பேரும் எப்பிடி?”

” ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ அளவுக்கு இந்தப் படமும் அஞ்சலிக்கு அடையாளமா இருக்கும். ஆனா, அது கொஞ்சம் போல்டா இருக்கும். ஹன்சிகா வழக்கமா அழகா சிரிச்சுட்டே இருப்பாங்க… ஆடுவாங்க… பாடுவாங்க. ஆனா, இதுல பயங்கரமான ‘ஆக்ஷன் அத்தியாயம்’ல நடிச்சிருக்காங்க. அந்த ஆக்ஷன் நடக்கிற இடம் பெட்ரூம். இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்லை. படத்துல பார்த்து ரசிக்கிற துலதான் விஷயம் இருக்கு.”

”ஆர்யா நடிச்சா ஹீரோயின்களிடம் அன் லிமிடெடா அழகை அள்ளிக்கிறது ஈஸியா இருக்கோ?”

”அவரை யாருக்குத்தாங்க பிடிக்காது? அனுஷ்காகூடத்தான் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் வெச்சிருக்கார்னு நினைச்சா, நயன்தாராவுக்கு ரொம்பச் செல்லமா இருக்கார். எப்படி இப்படி எல்லாரையும் கவர்றார்னு நானும் யோசிச்சேன். நண்பர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்குறார். தன் எல்லை மீறியும் அவங்களுக்கு உதவுறார். சின்சியரா ஆலோசனை சொல்லி, அதை எப்படிச் செயல்படுத் துறதுனு கைட் பண்றார். சிரிச்சுச் சிரிச்சுப் பேசிட்டே இருக்கார். இதோட இன்னும் அவருக்குக் கல்யாணமும் ஆகலை. வேற என்ன வேணும்கிறீங்க… சொல்லுங்க?”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: