Skip to content

“ராணாவுக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்!”

October 19, 2012

“இந்தப் பொண்ணுக்குள்ளேயும் ஏதோ இருந்துருக்கு பாரேன்” எனப் பேசவைத்துவிட்டார் ப்ரியா ஆனந்த். தமிழில் ‘வாமனன்’, ‘புகைப்படம்’ என அதிகம் பேசப்படாத படங்களில் நடித்ததோடு காணாமல்போனவர் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ பப்ளி கேரக்டர் மூலம் பளிச்செனத் திரும்பி வந்திருக்கிறார். ‘எதிர் நீச்சல்’ பட ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயனோடு டூயட் பாடிக்கொண்டு இருந்தவரைப் பிடித்தேன்.

”பாலிவுட்ல முதல் படமே ஸ்ரீதேவிகூட… யாரோட சிபாரிசு?”

”ஹலோ… என்ன முதல் கேள்வியிலேயே வம்பா? இண்டஸ்ட்ரியில யாருடைய அறிமுகமும் இல்லாமல் வந்தவள் நான். இந்த கேரக்டருக்காக பெங்களூரு, மும்பை, டெல்லி, லாஸ் ஏஞ்சலீஸ், நியூயார்க்னு பல இடங்களில் ஆடிஷன் நடந்தது. கடைசியா, என்னைப் பார்த்து ஓ.கே. பண்ணி னாங்க. மும்பையில் இருந்து தமிழுக்கு ஹீரோ யின்ஸ் வந்த காலம் போய், இப்போ இங்கே இருந்து பாலிவுட்டுக்குப் போறோம். என்கரேஜ் பண்ணுங்கப்பா.”

”கூல்… கூல்… என்ன சொன்னாங்க ஸ்ரீதேவி?”

”ஒரு உண்மை சொல்லவா? சின்ன வயசிலேயே  ஸ்ரீதேவி ஃபேன் நான். நிறைய லெட்டர்ஸ், பெயின்டிங் எல்லாம் அனுப்பி இருக்கேன் அவங்களுக்கு. அப்படிப்பட்டவங்ககூட சேர்ந்து நடிக்குறதுன்னா எப்படி இருக்கும்? ஸ்ரீதேவி மேடம் ஒரு சின்னக் குழந்தை மாதிரி… ச்சோ ஸ்வீட். படத்துல நடிக்க எனக்கு நிறைய உதவி பண்ணினாங்க. அதைவிட, தனிப்பட்ட முறையில நிறைய அட்வைஸ் கொடுத்தாங்க. ஆனா, அதெல்லாம் பெர்சனல்.”

”எப்படி இருந்துச்சு கௌரி ஷிண்டேவோட வேலை பார்த்த அனுபவம்?”

”ஸ்வீட் டீச்சர் அவங்க. சின்ன எக்ஸ்பிரஷன்ஸைக்கூட அவ்ளோ அழகா சொல்லிக் கொடுப்பாங்க. ஒரு பெண்ணா நிறைய விஷயங்களை இந்தப் படம் மூலமா கத்துக்கிட்டேன். கௌரி மேடத்துக்கு நன்றி!”

”எல்லாப் படங்கள்லயுமே பப்ளி கேரக்டர்ஸ்… நிஜத்துல ப்ரியா ஆனந்த் எப்படி?”

”சினிமால எப்படிப் பாக்கிறீங்களோ… அப்படியே தாங்க. அதே பப்ளிதான். சிரிச்சுக்கிட்டும் மத்தவங்களைச் சிரிக்கவெச்சுக்கிட்டும் இருப் பேன்.”

”சூப்பர் ஸ்டார் பேரைத் தவிர்த்து ஒரு பேர் சொல்லுங்க… எந்த ஹீரோகூட நடிக்க ஆசை?”

”சூப்பர் ஸ்டார்தான். அவர்கூட ஒரே ஒரு சீன் நடிச்சாக்கூட எனக்குச் சந்தோஷம்தான். ஒரு சந்தோஷத் தகவல் சொல்லவா? ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தை யார்கூட உட்கார்ந்து பார்த்தேன் தெரியுமா? ரஜினி சார்கூட. ரொம்ப என்ஜாய் பண்ணிப் படம் பார்த்தார். போகும்போது என்னை விஷ் பண்ணிட்டுப் போனார். ப்ரியாவோட வாழ்க்கையிலயே சந்தோஷமான தருணம் அதுதாங்க.”

”ராணாவுக்கும் உங்களுக்கும் நல்ல நெருக்கமாமே… சொல்லுங்க… ராணா – த்ரிஷா கல்யாணம் எப்போ?”

”ஆமா. ராணா எனக்கு நெருக்கம்தான். நான் அவனை வாடா போடானுதான் கூப்பிடுவேன். ஆனா, ராணா – த்ரிஷா கல்யாணத்தைப் பத்திச் சொல்ற அளவுக்கு எல்லாம் எனக்கு அவன் விஷயம் தெரியாது. அவனுக்கு  நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்னு சொல்வாங்க. அதனால, என்னால எதையும் உறுதியா சொல்ல முடியாது.”

”அப்ப உங்களோட காதல் கதையைச் சொல்லுங்க. உங்க சித்தார்த் எப்படி?”

”ஹா… ஹா… எனக்கு இதுதாங்க புரியவே இல்லை. படத்துல நடிச்சப்பல்லாம் விட்டுட்டு, படம் வந்து ஒரு வருஷம் கழிச்சுக் கிளப்பிவிடுறாங்க பாருங்க… ஆனா, இதுல ஒரு நல்ல விஷயம் இருக்கு. எங்க கெமிஸ்ட்ரி பயங்கரமா வொர்க்-அவுட் ஆயிருக்குனு நினைக்கிறேன். இல்லாட்டி படம் வந்து ஒரு வருஷம் கழிச்சு இப்படி ஒரு கேள்வி வருமா? நானும் தேடிக்கிட்டு இருக்கேன். இதைக் கிளப்பிவிட்ட புண்ணியவானை. கிடைச்சதும் அந்த ஆள் கிட்டயே கேட்டு முழுக் காதல் கதையையும் சொல்றேன். ஓ.கே-வா?”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: