Skip to content

நீத்து பேட்டி காதல் என்பது கடவுள் மாதிரி! (Neetu Interview – Love is like God!)

November 11, 2012

 

உதடுகளால் சொல்ல வேண்டிய பல விஷயங்களை கண்களால் சொல்லிவிடுகிறார் நீத்து சந்திரா. ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’க்குப் பிறகு பாலிவுட்டிலேயே முகாமிட்டிருந்த நீத்துவை ஜெயம் ரவி நடிக்கும் ‘ஆதிபகவனு’க்காக அழைத்து வந்திருக்கிறார் அமீர். தமக்குப் பிடித்தவர்கள், பிடித்த விஷயங்களை ஒன் பை ஒன்னாக பட்டியலிடுகிறார் நீத்து.

Whatever lips have to say, Neetu Chandra says them with her eyes. After “Yaavarum Nalam” & “Theeratha Vilayattu Pillai” Neetu was busy in Bollywood. She is brought to Kollywood by Dir Ameer to act opposite to Jayam Ravi in “Adhi Bhagwan”. In this interview, Neetu lists her favorite people and things one by one.

இயக்குனர்:

எனது வாழ்க்கையில் மிக அதிகமாக அழுத நாட்கள் ‘ஆதிபகவன்’ ஷூட்டிங் நடந்த நாட்கள். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நடந்த ஷூட்டிங்கில் சுமார் இருபது நாட்கள்வரை அழுதிருப்பேன். காரணம் அமீர். அமீர் என்னை அடிக்கவோ, திட்டவோ இல்லை. ஆனாலும் அவ்வப்போது அமீரின் முகத்தில் வரும் கோபமான எக்ஸ்பிரஷனைப் பார்த்து அழுது விடுவேன். எந்த ஒரு சின்ன விஷயமும் மிகச் சரியாக இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பார். அதனால் கண்டிப்புடன் இருப்பார். இன்னைக்கு ‘ஆதிபகவனை’ மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் தமிழ்நாடே எதிர்பார்க்கும்போது, அழுத அழுகைக்கும் அமீருக்கும் தேங்க்ஸ் சொல்லணும்.

Director:

In my life, the days in which I cried most were during “Adhi Bhagwan” shooting days. The shooting went on for 2 years.. and I cried for at-least 20 days. The reason was Dir Ameer. He never raised his voice or hands. As soon as I saw this angry expression in his face whenever he was not happy with my performance in a shot — I started to cry. He is a perfectionist. He wants even a small thing to come out perfectly. That’s why he was strict. Today, when I see the expectations in Tamil Nadu for “Adhi Bhagwan”, I feel it’s all worth the crying. Also I have to thank Dir Ameer.

 

கதாநாயகன்:

ஜெயம் ரவி ரொம்ப கூல் guy. ரொம்ப சூடா இருப்பாங்களான்னு கேட்காதீங்க. ரொம்ப சூடா இருக்கற நிறைய சினிமாக்காரங்களுக்கு மத்தியில் கூலாயிருக்கிறவர் ரவி. நிறைய பேர் நம்ம ரவியை சாக்லெட் பாயாகத்தான் நினைக்கிறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் ரவி ஆக்ஷன் பாய். ஆதிபகவனில் ஆக்ஷனுக்காக நிறையவே உழைச்சிருக்கிறார் ரவி.

Hero:

Jayam Ravi is a very cool guy. Don’t ask me if he is very hot. Compared to many heroes in the industry who are hot, he is very cool and relaxed hero. Most of us think of his as a Chocolate Boy. As for as I’m concerned, Ravi is an action boy! He has worked extra hard for action sequences in this movie.

காதல் கல்யாணம்:

காலேஜ் படிக்கும்போது ஒரு பையனை சின்சியரா லவ் பண்ணேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த லவ் சக்ஸஸ் ஆகலை. பல நாட்கள் அழுதேன். பட்டினி கிடந்தேன். காதல் என்பது கடவுள் மாதிரி. ஒருவேளை அந்தப் பையனோட என் லவ் சக்ஸஸ் ஆகியிருந்தா, இப்படி ஹீரோயினா வந்திருக்க முடியாது. எல்லாம் நன்மைக்கேனு எடுத்துக்க வேண்டியதுதான். அடுத்த லவ் எப்ப வரும்னு சொல்ல முடியாது. கடவுளோட பார்வை நம்மமேல் எப்ப விழும்ன்னு நமக்கே தெரியாது.

Love Marriage:

When I was studying in College, I was in love with a guy sincerely. Due to circumstances, it didn’t succeed. I cried for many days. I didn’t eat for many days. Love is like God. In case, if my love succeeded, I would not have become a Heroine. Everything happens for good. I don’t know when love will happen for me next. We never know when God’s

எனக்குப் பிடித்த பையன்:

ஜாலியாக மட்டும் இருந்தால் வாழ்க்கை புரியாது. இன்டலிஜென்டாக மட்டும் இருந்தால் வாழ்க்கை ரசிக்காது. ஸோ, இரண்டும் கலந்த கலவை பசங்கதான் என் சாய்ஸ்.

 

My Ideal Man:

Sense of humor alone is not enough for life, as it won’t help someone to understand life. If someone is just intelligent, they may not appreciate life. So I’m looking for someone who is intelligent as well as who has a good sense of humor.

 

சினிமா:

நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருஷமாச்சு. சினிமாவுக்கு நானும் ஏதாவது செய்யணும்ன்னு நினைச்சு போஜ்புரி – இந்தி மொழியில் படம் தயாரிச்சேன். இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் எனது சொந்த மாநிலமான பீஹார் மாநிலத்திலேயே நடத்தினேன். சினிமா பிரபலங்களை பீஹாருக்கு வரவழைச்சேன்.

Cinema:

Its been 8 years since I came to movies. I wanted to do something for movies. So I produced a movie in Bhojpuri – Hindi. The entire shooting was done in my native Bihar. I brought many movie celebs to Bihar.

அரசியல்:

நான் பொலிடிகல் சயின்ஸ் மாணவி. எனவே எனக்கு அரசியல் விழிப்புணர்வு உண்டு. இன்னைக்கு நாடு இருக்கிற மோசமான சூழ்நிலையில் அண்ணாஹசாரே மாதிரி நல்ல தலைவர்கள் நிறைய பேர் தேவை. எனக்கு அரசியல் விழிப்புணர்வு தான் இருக்கிறது. அரசியலில் இறங்கும் ஆர்வம் இல்லை.

Politics:

I’m a political science student. So I’m very politically aware. Today, with the bad situation our country is in, I feel we need lot of good leaders like Anna Hazaare. I have political awareness. But I have no plans to enter Politics.

ஆசை:

சினிமாவில் சிம்ரன், ஜோதிகா இருந்த இடத்தைப் பிடிக்க ஆசை.

Ambition:

I would like to reach the spot held by Simran and Jothika.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: