Skip to content

Chennaiyil Oru Naal – Kalki Article

November 18, 2012

சென்னையில் நடந்த ஒரு நாள் சம்பவம்..

 

”எப்பவும் ஸ்கிரிப்ட்தான் ஹீரோ!”

 

இயக்குனர் சாஹீது

இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவை வைத்து படம் எடுக்கவே, இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நிறைய பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். ஆனால், கேரளாவிலிருந்து வந்துள்ள டைரக்டர் சாஹீது காதர், சரத்குமார், பிரகாஷ்ராஜ், சேரன், பிரசன்னா இன்னும் ஒரு சில புதுமுகங்கள் என நிறைய ஹீரோக்களை ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தின் மூலமாக நடிக்க வைத்து, கோடம்பாக்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சாஹீது, மலையாளத்தில் ஷாஜிகைலாஷ், கே.மது, விஜிதம்பி உட்பட பல இயக்குனர்களிடம் பணியாற்றியவர். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘டிராஃபிக்’ படத்தைத்தான் தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் இயக்கியுள்ளார். மலையாளத்தில் பல படங்களில் உதவி, இணை இயக்குனராக பணியாற்றியவருக்கு தமிழில் டைரக்டராக உயர்வு கிடைத்துள்ளது. ‘டிராஃபிக்’ படத்தைத் தயாரித்த லிஸ்டின்ஸ் ஸ்டீபனும் நமது ராதிகா சரத்குமாரும் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். சாஹீது மலையாளம் கலந்த தமிழில் பேசுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மூளைச் சாவு அடைந்த 19 வயது பையன் ஒருவனின் உறுப்புகள், சில மணி நேரங்களில் வெளியே எடுக்கப்பட்டு, உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டன. இப்பையனின் தந்தை யாருக்கும் உதவியில்லாமல் போகும் தமது மகனின் உடல் உறுப்புகள், மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். இத்தகவல் இந்தியா முழுவதும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தச் செய்தியை மலையாளப் பத்திரிகை ஒன்றில் படித்த இயக்குனர் ராஜேஷ் பிள்ளை, இதை மையமாக வைத்து பாபிசஞ்சய் கதை, திரைக் கதையில் ‘டிராஃபிக்’ படமாக எடுத்தார். இப்படம் தமிழில் ரீமேக் செய்தால் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். தமிழில் எடுக்கும்போது நான்தான் இயக்குவேன். வேறு யாருக்கும் வாய்ப்பு தரக்கூடாது என்று அப்போது அன்புடன் கேட்டுக் கொண்டேன்.

இப்படத்தை மலையாளத்தில் பார்த்த சரத்குமார் இம்ப்ரஸ் ஆகி தமிழில் தயாரிக்க முன்வந்தார். இயக்குனர் ராஜேஷ்பிள்ளையும் நான் கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழில் இயக்க வாய்ப்பு தந்தார்.”

தமிழில் ஏன்?

‘டிராஃபிக்’ மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும்கூட சென்னையில் நடந்த ஒரு சம்பவம்தான் மூலகாரணம். எனவே தமிழ்நாட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும். தமிழில் இப்படத்தை டைரக்ட் செய்வது கடமையும்கூட. சென்னையில் ஒருநாள் இமோஷனல் த்ரில்லர். மொழி, இனம் தாண்டி மனித உணர்வுகளின் மீதுதான் இதன் திரைக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் உணவு, உடை போன்ற ஒரு சில விஷயங்களைத் தவிர்த்து, பெரும்பான்மையான விஷயங்கள் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.”

உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு இந்தியர்களிடையே எவ்வாறு உள்ளது?

முன்பைவிட பரவாயில்லை. அதாவது உறுப்புதானம் என்பது என்ன? என்ற அளவில் பலர் தெரிந்து வைத்துள்ளார்கள். ஆனாலும் தேவைக்கும் கிடைக்கப்பெறும் உறுப்புகளுக்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. இதுபோன்ற படங்கள் இந்தச் சூழலை ஓரளவு மாற்றும் என நம்பலாம்.”

தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களை வைத்து இயக்குவது சிரமம்தானே? எப்படி சமாளித்தீர்கள்?

சென்னையில் ஒரு நாள் படத்தில் ஸ்க்ரிப்ட் தான் ஹீரோ. மலையாளத்தில் பல ஹீரோக்கள் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பதைப் பார்த்து வளர்ந்ததால் எனக்கு கஷ்டமாகத் தெரியவில்லை. ஸ்கிரிப்ட்தான் ஹீரோ என்பதை இந்தப் படத்தில் நடித்தவர்கள் புரிந்துகொண்டதால் எனக்கு எந்தவிதச் சிரமமும் இல்லை.”

மலையாளத்தில் கலைப்படங்கள் குறைந்து போய்விட்டதா?

கலைப் படத்துக்கும், மற்ற படத்துக்கும் உள்ள வேறுபாடு எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த படம் நல்ல படம் மற்றும் கெட்ட படம். மலையாளத்தில் சமீப காலங்களில் வெளியான ‘ஒஸ் தாத் ஹோட்டல்’, ‘சால்ட் அண்டு பெப்பர்’, ‘சாந்தாக்ரூஸ்’, ‘டிராஃபிக்’ போன்ற படங்கள் கலை நேர்த்தியுடன் எடுக்கப்பட்ட படங்கள். இங்கே புதிய படைப்பாளிகளின் தலைமுறை உருவாகி வருகிறது.”

மலையாளத்தில் உள்ளது போல, நீங்கள் இயக்கும் தமிழ்ப் படங்களில் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படமாக எடுப்பீர்களா?

எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமில்லை, சிறிய செய்தி, ஒரு புகைப் படம், ஓவியம் என என்னைப் பாதிக்கும் எந்த ஒரு கலைப் படைப்பையும் சினிமாவாக எடுப்பேன்.”

உங்களுக்குப் பிடித்த ஹீரோ?

மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், தமிழில் அனைவரும்.”

உங்களின் அடுத்த படங்களுக்கு ஹீரோ யார்?

என்னுடைய அடுத்த படம் என்றில்லை, எனது எல்லா படங்களுக்குமே திரைக்கதைதான் ஹீரோ.”

ராகவ்குமார்

ராதிகா சரத்குமார்:

இந்தப் படத்தை முதலில் பார்த்துத் தயாரிக்க வேண்டுமென ஆசைப்பட்டது சரத்தான். சென்னையில் ஒரு நாளில் பேசப்படும் விஷயம், சென்னை என்பதைத் தாண்டி மனிதர்கள் வாழும் அனைத்து இடங்களுக்கும் தேவைப்படும் விஷயம். மலையாளத்தைப் பாருங்க, ஹிந்தியைப் பாருங்க என எத்தனை நாட்கள்தான் சொல்லிக் கொண்டிருப்பது? பல ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் புராஜெக்ட்டை நாமே முயற்சி எடுத்துத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் விதையை விதைத்திருக்கிறார் சரத். ஸ்கிரிப்டுக்காக பல நாயகர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் தமிழ் சினிமாவுக்கும் வந்துவிட்டது.

ஆக்ஷன் ஹீரோ, சினிமாவில் எந்த ஒன்றையும் முடியாது என்று சொல்லாமல் செய்து முடிப்பார். ஆனால் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் சரத் இது முடியும், இது முடியாது என பேசும் யதார்த்தமான ஹீரோவாக வருகிறார். இன்டலிஜென்டான, தைரியமான சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் ஹோம் மேக்கராக வருகிறேன். எனக்கு ஜோடியாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: