Skip to content

“டான்ஸ் க்ளாஸுக்குப் போ ஆர்யா!

November 22, 2012

‘சமர்’, ‘மதகஜராஜா’… விஷால் நடித்த இரண்டு படங்களுமே முடிந்து ரிலீஸுக்கு வெயிட்டிங். மாறி மாறி டப்பிங் பேசிக்கொண்டு பரபரவென இருந்தவரிடம் பேசினேன்…

 ”முன்னாடி மாதிரி இல்லை… ஒவ்வொரு படத்துக்கும் ரொம்ப நேரம் எடுத்துக்குறீங்கபோல..!”

  ”பின்னே சும்மாவா..? முன்னாடி எல்லாம் ரெண்டு மூணு சீனுக்கு ஒரு தடவை ட்விஸ்ட் இருக்கணும். ஆனா, இப்போ படம் முழுக்கவே ட்விஸ்ட் இருக்கணும். இல்லைன்னா ஒரே வார்த்தைல ‘போர்’னு சொல்லிட்டுப் பாஸ் பண்ணிடுறாங்க. ‘அவன் இவன்’ முடிச்சதும் புதுசா ஏதாவது பண்ணணும்னு ஆசைப்பட்டப்ப, திரு சொன்ன த்ரில்லர் கதை ‘சமர்’. ஊட்டியில் ஆரம்பிக்கிற கதை 15 நிமிஷத்துல பாங்காக் போயிடும். அடுத்து, நீங்க என்னலாம் கேட்பீங்களோ, என்னலாம் கேட்கக் கூச்சப் படுவீங்களோ… அது அத்தனையும் ‘மதகஜராஜா’ படத்துல இருக்கும்!”

”த்ரிஷாவோட நடிக்கணும்கிற உங்க வாழ்நாள் ஆசை ‘சமர்’ மூலமா நிறைவேறிடுச்சுபோல..!”

  ”ஆமாங்க… ‘தாமிரபரணி’யில் ஆரம்பிச்சது… இப்ப ‘சமர்’லதான் நடக்கணும்னு இருந்திருக்கு. ஒவ்வொரு படத்துக்காகவும் பேசுவோம். ஏதோ ஒரு காரணம் தள்ளிவைக்கும். ‘சமர்’ல படம் முழுக்கவே எனக்கும் த்ரிஷ§க்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். அந்த அளவுக்கு அவ எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்!”

”நீங்களே அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்திருக்கீங்க… ஒரு டைரக்டர் ஆங்கிள்ல சொல்லுங்க… ஆர்யா முதல் விஷ்ணு வரையிலான உங்க ஹீரோ நண்பர்களின் ப்ளஸ், மைனஸ் என்ன?”

  ”மாட்டிவிடப் பார்க்குறீங்க..! (யோசிக்கிறார்) என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே ரொம்ப ஓப்பன் டைப்தான். இருந்தாலும் இப்படிப் பகிரங்கமா சொன்னா, என்ன நினைப்பாங்கன்னு தெரி யலை. ஓ.கே… ட்ரை பண்ணலாம். ஆர்யா படங்கள் பார்த்துட்டு நிறைய தடவை அவன் கிட்ட நேரடியாவே, ‘தயவுசெஞ்சு டான்ஸ் கிளாஸுக்குப் போ’னு சொல்லி இருக்கேன். ஜீவாவுக்கு அவனோட திறமையை நிரூபிக்கிற அளவுக்கான கேரக்டர் இன்னும் அமையலை. ‘ஜெயம்’ ரவியைப் பொறுத்தவரை ஸ்டில் ஐ யம் வெயிட்டிங். ஆனா, அவனுக்கு இப்ப நல்ல லைன்-அப் இருக்கு. எப்படிப் பயன்படுத்திக்கி றான்னு  பார்ப்போம். பொதுவா சந்திக்கும்போது, இப்படி எல்லாம் பேசிக்க மாட்டோம். ரொம்ப ஓப்பனா சொல்றது ஆர்யாகிட்ட மட்டும்தான்!

சினிமால ஆர்யா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அவ்ளோதூரம் செல்ஃப்லெஸா இருக்க அவனால மட்டும்தான் முடியும். ஒரு போட்டியா நினைக்காம எனக்காக ‘அவன் இவன்’ சான்ஸ் வாங்கித் தந்தான். இன்னைக்கு எனக்குக் கிடைக்கிற புகழ், மரியாதைக்கு எல்லாம் அவன்தான் காரணம். தேங்ஸ்டா ஆர்யா!”  

”உங்கள் தோழிகள் த்ரிஷா, நயன் தாரா காதல்ல தடுமாறுறாங்களே… எதுவும் அட்வைஸ், டிப்ஸ் கொடுப்பீங்களா?”

”எந்த அட்வைஸும் பண்ண மாட்டேன். பெர்சனலா  நிறைய பேசிப்போம். ஆனா, அதை எல் லாம் வெளிய சொல்ல முடியுமா என்ன!”

”ஒரு ஹீரோயினுடன் காதல்ல இருந்தீங்களே… இப்போ என்ன  ஸ்டேட்டஸ்?”

”வேணாமே! நான் திரும்ப அதைப் பத்தி எதுவும் சொன்னா, ஏதோ பப்ளிசிட்டிக்காக பேசுற மாதிரி இருக்கும். அவங்ககூட காதல் இருந்ததும் உண்மை. அது பிரேக்-அப் ஆனதும் உண்மை. ‘அவங்களா… இவங்களா?’னு ஆளாளுக்கு பட்டிமன்றம் நடத்தினதுலயே, அந்த லவ் பிரேக்-அப் ஆகிருச்சு!”

”அப்ப இப்ப யாரையுமே காதலிக்கலையா…  வரலட்சுமி உட்பட?”

”குழந்தைல இருந்து வரூ என் ஃப்ரெண்ட். அவ எனக்கு ரொம்ப்…..ப க்ளோஸ். 20 வருஷப் பழக்கம். மத்தபடி வேற ஒண்ணும் இல்லை!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: