Skip to content

“நயன்தாரா திட்டி எஸ்.எம்.எஸ். அனுப்புவாங்க!”

November 22, 2012

”ஏடாகூடக் கேள்விகள்னா, பதில்களும் ஏடாகூடமா இருக்கும்… பரவாயில்லையா?” – எனக்கு வார்னிங் கொடுத்துவிட்டுப் பேட்டிக்கு அமர்ந்தார் ஆர்யா. இடம்: ‘சேட்டை’ பட ஷூட்டிங் ஸ்பாட்.  

 ”எத்தனை பொண்ணுங்ககிட்ட காதல் சொல்லி இருக்கீங்க?”

”என்கூடப் பழகின பொண்ணுங்கள்ல, நான் புரொபோஸ் பண்ணாதவங்கன்னு யாருமே கிடையாது. ஆனா, என் காதலை ரிஜெக்ட் பண்ணவங்கதான் பாஸு ஊர்ல அதிகம்.”

”அதுல மறக்க முடியாத கேர்ள் ஃப்ரெண்ட் யாரு?”

”ஆஹா… சிக்கவைக்கிறீங்களே! சினிமால யாரும் இல்லை. காலேஜ்மேட்ஸ் நிறையப் பேரு இருக்காங்க. ஆனா, பேர் எல்லாம் சொல்ல மாட்டேன். அப்புறம் அவங்க புருஷன்ஸ் வந்து பளார்னு அறைஞ்சுரு வாங்க. பேஸிக்கா… நமக்கு எப்பவும் சண்டை பிடிக்காது. அன்பு… அன்பு… அன்பு மட்டுமே!”

”அது என்ன அமலா பால்ல இருந்து அஞ்சலி வரை உங்களை கிஸ் பண்ணணும்னா மட்டும் ஓ.கே. சொல்றாங்களே… என்ன ரகசியம் அது?”

”நான் கிஸ் மட்டும்தானே கேக்குறேன். அதுனால இருக்குமோ? ஒருவேளை அதுக்கும் மேல எதுவும் கேட்டிருந்தா, அடி விழுந்து இருக்குமோ?”

” ‘இரண்டாம் உலகம்’ ஷூட்டிங்ல யோகா மாஸ்டர் அனுஷ்காகிட்ட என்னல்லாம் கத்துக்கிட்டீங்க?”

”அதுக்குக் கொஞ்சம்கூட ஸ்கோப் கொடுக்கலை செல்வா சார். படத்துல கிஸ் ஸீன்கூட இல்லை. வழக்கமாக் கிடைக்கிறதும் கிடைக்காமப்போச்சு.”

‘அது எப்படி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வெளியிலும் எல்லா ஹீரோயினையும் கரெக்ட் பண்ணிடுறீங்க?”

”நேர்மையா இருக்கேன் நண்பா… அவ்வளவுதான். ஃப்ரெண்ட்ஷிப் தான் என் மோட்டிவ். பிடிச் சிருந்தா, ‘உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு’னு ஓப்பனா சொல் லிடுவேன். மனசுல எதையோ வெச்சுட்டுப் பேசறதோ, நல்லவன் மாதிரியே சீன் போடுறதோ கிடையாது. காதலோ, நட்போ எந்தப் பொண்ணுகிட்டயும் ஓப்பனா சொல்லிடணும். அவங்களுக்கு நம்மளைப் பிடிக் கலைன்னா, தொந்தரவு பண்ணாம நம்ம வேலையைப் பார்த்துட்டுப் போயிரணும். ஒரு பொண்ணுக்காகத் தேவை இல்லாம எதுக்கு ரிஸ்க் எடுத்து நிஜ வாழ்க்கையில நடிக்கணும்!”

”ஒவ்வொரு ஹீரோயினுக்கும் நீங்க வெச்சிருக்கிற செல்லப் பேர் சொல்லுங்க?”

”அந்தத் தப்பை மட்டும் பண்ணிடவே கூடாது நண்பா. பசங்க ரொம்ப கவனமா இருக்க வேண்டிய விஷயம் இது. எல்லா கேர்ள் ஃப்ரெண்ட்ஸுக்கும் ஒரே செல்லப் பேர்தான் வெச்சுக்கணும். ஏன்னா, ஒருத்தர் பேரை இன்னொருத்தருக்கு மாத்திக் கூப்பிட்டுட்டா… அவ்வளவுதான் அம்பேல். அதனால, நான் ‘பேபி’னுதான் எல்லாரையும் கூப்பிடுவேன். எல்லா ஹீரோயின்களும் எனக்கு பேபிதான்!”

”சமீபத்துல சந்தானத்துகிட்ட என்ன மொக்கை வாங்கினீங்க?”

” ‘சேட்டை’ ஷூட்டிங். பேச்சிலர் ரூமுக்கு என்னைப் பார்க்க ஹன்சிகா வருவாங்க. அப்போ ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணி கிஸ் அடிப்போம். (மறுபடியும் பார்டா…) அப்போ அதை திடீர்னு உள்ளே வர்ற சந்தானம் பார்த்துட்டு, ‘செய்றதைத்தான் செய்றீங்க… ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள்’னு ஒரு போர்டு எழுதிவெச்சுட்டு செய்யுங்கடா’னு டைமிங்கா அடிச்சார் பாருங்க ஒரு பஞ்ச். சிரிப்பை அடக்க முடியாம விலகிட்டாங்க ஹன்சிகா. சந்தானத்தைக் கொல்லணும்!”

”மறக்க முடியாத எஸ்.எம்.எஸ்?”

”திட்டி வர்ற எஸ்.எம்.எஸ்-தாங்க. எல்லாம் உங்களை மாதிரி பத்திரிகைக்காரங்களாலதான். கிசுகிசு வர்றப்போலாம் என் தலைதான் உருளும். நயன்தாரா, ஸ்ரேயா எல்லாம் செமத்தியாத் திட்டுவாங்க. ‘எல்லாம் உன்னாலதான். நீ ரொம்ப மோசமானவன். இதுக்குத்தான் உன்கூட வெளியே வர மாட்டேன்னு சொன்னேன். இனிமே என் மூஞ்சிலயே முழிக்காதே…’ அப்படி இப்படினு நிறைய பேட் வேர்ட்ஸ் கலந்து வரும். உங்களால பல சமயம் ‘வட போச்சே!’னு நின்னுருக்கேன் தெரியுமா… அந்த வலி, வேதனை எல்லாம் உங்களுக்கு எப்படிப் புரியும்!”

”உங்க நண்பன் சந்தானம் மாதிரி பவர் ஸ்டார்கூட நடிப்பீங்களா?”

”அவர் என்ன டைனோசரா? கூட சேர்ந்து நடிக்கிறதுக்குப் பயப்பட? சந்தானம், பிரேம்ஜி கூடவே நடிக்கும்போது பவர் ஸ்டார்லாம் ஜுஜுபி!” என்று ஆர்யா சதாய்க்க, அவர் மீது சரமாரித் தாக்குதல் துவக்குகிறார்கள் சந்தானமும் பிரேம்ஜி யும்!  

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: