Skip to content

அமலாபால் பேட்டி

November 24, 2012

விஜய் பேசறதே அபூர்வம்!

ராகவ்குமார்

அமலாபால் பார்ப்பதற்கு முன்பைவிட அழகாகவும், இளமையுடனும் இருக்கிறார். சமீபத்திய போட்டோ ஷூட்களில் கிளாமராகவும், மாடர்னாகவும் இருக்கிறார். கொஞ்ச காலமாக மீடியாக்களில் பேசப்படாமல் இருந்தவர் மறுபடியும் கோடம்பாக்கத்தில் முகாமிட்டிருக்கிறார். பேச ஆரம்பித்தால் சின்னப் பொண்ணா இது என்று ஆச்சர்யப்படும் அளவுக்குப் பேசுகிறார்.

வாய்ப்பு குறைவதால் கிளாமர் பக்கம் திரும்பிட்டீங்களா?

கிளாமரா நடிக்கறதால மட்டும் எந்த ஒரு இயக்குனரும் வாய்ப்பு தரமாட்டார். இந்த நடிகையால் இந்த கேரக்டரை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தால் மட்டும் தான் வாய்ப்பு கிடைக்கும். மைனாவில் வில்லேஜ் கேரக்டரில் வந்ததால், அந்தப் பாதிப்பில் நிறையபேர் ‘அமலா நீங்க கிளாமரா பண்ணுவீங்களா’ன்னு ஆச்சர்யமா கேட்கறாங்க. நான் சினிமாவில் வர்றதுக்கு முன்னாடி மாடலிங்கில் இருந்தேன். எனது லைஃப் ஸ்டைல் மாடர்னாகத்தான் இருக்கும். அடிப்படையில் நான் மாடர்னான பொண்ணு. ஒரு நடிகையாக எல்லாவித கேரக்டரிலும் செய்யணும்ன்னு நினைக்கிறேன். இதில் கிளாமரும் ஒன்று. மத்தபடி வாய்ப்புக்காக கிளாமர் பக்கம் திரும்பலை.”

அப்புறம் ஏன் இந்த இடைவெளி?

இந்த வருஷ ஆரம்பத்தில் நிறைய படங்கள் நடிச்சதால, ஏற்பட்ட ஸ்ட்ரெசில் உடம்பு சரியில்லாம போச்சு. ஸோ, நிறைய படங்களில் கமிட் பண்ண முடியலை. சினிமாவில் நடிச்சாலும் படிப்புமேல எனக்கு ஈடுபாடு அதிகம். நான் படிச்சுக்கிட்டிருந்த பி.ஏ. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் கடைசி செமஸ்டர் எக்ஸாமை சமீபத்தில்தான் எழுதினேன். நடுவில் படிக்கப் போய்ட்டேன். தெலுங்கில் ராம்சரண், அல்லுஅர்ஜுன், மலையாளத்தில் மோகன்லால் இவங்களோட நடிச்சிட்டு, இப்போது ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’, விஜய்யுடன் பெயரிடப் படாத படங்களிலும் நடிக்கிறேன். என்னை நடிகையா உலகத்துக்குக் காட்டிய தமிழ் சினிமா எனக்கு தாய்வீடு மாதிரி.”

ஏன் மீடியாவை விட்டு ஒதுங்கியே இருக்கீங்க?

சும்மா பப்ளிசிட்டிக்காக மீடியாவில் வந்து பேசறதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் படங்கள் வரும் போது கண்டிப்பாக மீடியாவில் வருவேன். இப்ப எனது படங்கள் வரப் போகுது. உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். மீடியாவை விட்டு ஒதுங்கி இருக்க முடியாது. மீடியா இல்லாமல் நான் இல்லை.”

விஜய்கூட என்ன பேசுனீங்க…

விஜய் பேசறதே அபூர்வம். பேசினாலும் கொஞ்சமாத்தான் பேசுவார். இளையதளபதின்னு நிறைய பேர் கொண்டாடற ஒரு ஸ்டார் இவ்வளவு அமைதியா, ஆர்ப்பாட்டம் இல்லாம இருக்கறதை பிரமிச்சுப் பார்த்தேன்.”

சமீபத்தில் காலேஜ் முடிச்சிருக்கீங்க… காலேஜ் லைஃப் எப்படியிருந்தது?

நான் படிச்சது லேடிஸ் காலேஜ். அதனால கேம்பஸில் காதல் அனுபவங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் எனக்கு லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதெல்லாம் குழந்தைத்தனமா சின்ன வயது லவ். இப்ப சினிமாவை மட்டும்தான் லவ் பண்றேன். இந்த வருஷ வாலண்டைன்ஸ் டே அன்னைக்கு என் வீட்டுக்கு நிறைய கிஃப்ட் அயிட்டங்கள் எனக்கு லவ்வைச் சொல்லி வந்தன. ஒரு நடிகையாக வந்த பின்பும், பிரமிப்பா பார்க்காம ஒரு சாதாரண பொண்ணுக்கு வர்ற மாதிரி இத்தனை லவ் லெட்டர் வந்தது சந்தோஷமாக இருந்தது.”

ஒரு நடிகையாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கறது சரியா?

நடிகையாகவும், சாதாரண பொண்ணாகவும் இது மாதிரி சோஷியல் நெட்வொர்க்கில் இருக்கறது தப்பு கிடையாது. பொண்ணுங்களுக்கு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியுது. என் நடிப்பைப் பத்தி சொல்லக்கூடிய கமெண்ட்ஸ் எனக்கு பயனுள்ளதாக இருக்கும். நான்காவது படிக்கிற பசங்ககூட சோஷியல் நெட்வொர்க்கில் இருக்காங்க. சின்னக் குழந்தைகள் இதை யூஸ் பண்றப்ப பேரண்ட்ஸோடு கன்ட்ரோல் கண்டிப்பாக இருக்கணும். சின்மயிக்கு நடந்தது மோசமான கசப்பான அனுபவம். சைபர்கிரைம் சட்டங்கள் இன்னும் கடுமையாக இருக்கணும். என்னிடம் ஆபாசமாகவோ, மோசமாகவோ யாரும் கமெண்ட் பண்ணியதில்லை.”

உங்களுக்குப் பிடிச்ச பையன் எப்படி இருக்கணும்?

பெண்களை மதிக்கக்கூடியவனா இருக்கணும்.”

சாப்பாட்டில் உங்களுக்குப் பிடிச்சது?

‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ ஷூட்டிங்குக்காக வெளிநாடு போனப்ப நிறைய சாப்பிட்டு உடம்பு முடியாம போயிடுச்சு. சாப்பாட்டில் இது அதுன்னு பாரபட்சம் பார்க்கமாட்டேன். ஹைதராபாத் போனா பிரியாணி, சென்னை வந்தா பொங்கல்னு எல்லாத்தையும் ஒரு பிடி பிடிப்பேன்.”

உங்களிடம் எது அழகு?

நீங்க எல்லோரும் சொல்ற மாதிரி என் கண்கள்!”

எப்ப கல்யாணம்?

இப்பதான் எனக்கு 21 வயசு. கல்யாணத்துக்கு மெதுவா பையனைப் பார்க்கலாம்.”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: