Skip to content

அம்மாவின் கைப்பேசி

November 24, 2012

‘நான் ஆறேழு படங்களை இயக்கியிருந்தாலும், ‘அம்மாவின் கைபேசி’யைத் தான் முதல் படம்னு சொல்வேன். மற்ற படங்களில் எல்லாம் தயாரிப்பாளர்களுக்காகவும் வியாபாரத்துக்காகவும் நிறைய சமரசம் பண்ணிக்கிட்டேன்’ என்ற தங்கர்பச்சானின் சமீபத்திய பேட்டியைப் பார்த்ததும் ‘அம்மாவின் கைபேசி’யைப் பார்த்தாக வேண்டுமே என என் ஈரக்குலை துடிதுடித்தது… ஓங் குத்தமா, எங் குத்தமா, யாரை நானும் குத்தம் சொல்ல?

‘அய்யய்யோ, தங்கர்பச்சானா? அநியாயத்துக்கு அழவைப்பாரே’ என்று கதறிய நண்பனையும் கட்டாயப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றால்… முதல் காட்சியிலேயே மனைவியுடன் சேர்ந்து அழு அழு என்று அழுதார் தங்கர். ‘சரி, முதல் காட்சிதானே, போனால் போகட்டும்’ என்று நினைத்தால், அலாரம் வைத்ததுபோல அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை யாரையாவது கதறவைத்துக் கொண்டே இருந்தார் இயக்குநர், மன்னிக்கவும்… நெறியாளுனர்.

படம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் தங்கர் ஜட்டியோடு குளிக்கிற  ஒரு காட்சி. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், வட மாநில நடன மங்கைகளின் ரசிக்கவே முடியாத கவர்ச்சி நடனம் ஒன்று. மற்றொரு பாடல் காட்சியில், தங்கர்பச்சானின் முழங்கால் முதல் கழுத்து வரை உதட்டாலேயே வருடும் மீனாள், கிக்காக அவரின் காதைக் கடிக்கிறார். அடுத்து கில்மா காட்சி. அதை அப்படியே காட்டியிருந்தால்கூட பரவாயில்லை. குறிப்பால் உணர்த்துகிறேன் பேர்வழி என்று, ஒரு மாட்டின் மீது இன்னொரு மாடு டபுள்ஸ் போகும் காட்சியைக் காட்டுகிறார் தங்கர். இன்னொரு காட்சியில் தொப்புள் தெரிய ஆட்டம் போடும் இனியாவுக்கு இங்கிலீஷ் முத்தம் கொடுக்கிறார் சாந்தனு. தங்கர்பச்சான் அவர்களே, என்ன சார் நடக்குது இங்க?

இடைவேளைக்குப் பிறகுதான் அம்மாவுக்கு செல்போனே வாங்கிக் கொடுக்கிறார் சாந்தனு. நான்கு முறைதான் அவர்கள் பேச முயற்சிக்கிறார்கள். ஒருமுறை கூட ஒழுங்காகப் பேசியதாகத் தெரியவில்லை. கடைசியில் சாந்தனுவைக் குத்துவதற்காகத் துரத்தும் காட்சியில் ‘குத்துடா குத்துடா’ என்று வில்லன் கத்தும்போது, தியேட்டரில் இருப்பவர்களே எழுந்து நின்று, ‘யாண்டா இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக் கொல்றீங்க. முதல்ல எங்களைக்  கொலைக் குத்துக் குத்துங்கடா’ என்று புலம்புவதே படத்தின் வெற்றிக்குச் சாட்சி. மதுரை சோலைமலை தியேட்டரில் 15.11.12 மாலைக் காட்சியில் இந்தத் திரைக் காவியத்தைக் கண்டேன். என்னோடு படம் பார்த்தவர்கள் எல்லாம் கதறியதை வீடியோ மட்டும் எடுத்திருந்தால், யூ டியூப்பில் லட்சம் லைக்குகளை அள்ளும்!

தன் பேட்டியில் தங்கர் சொன்னதில் முக்கியமான வரிகள் இவை. ‘இது ஒரு திரைப்படம் இல்லை. மூணு மணி நேரத்துல அதை மறந்திட்டு வேற வேலை பார்க்க முடியாது. படம் பார்க்கிற அத்தனை பேரையும் ஒரு குற்றவாளியா உணரவைக்கும் இந்தப் படம்’. அவர் சொன்னது மாதிரியே உடல்நலமின்றி இருந்த நண்பனையும் இந்தப் படத்துக்குக் கூட்டிட்டுப் போய் வதைச்சிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி என்னைப் பாடாய்ப்படுத்துகிறது. தீபாவளி நேரம் என்பதால் நிறையப் புதுமணத் தம்பதிகள் தியேட்டருக்கு வந்திருந்தார்கள். குதூகலமாக இருக்க வேண்டிய அவர்கள், பேய் பிசாசு அறைந்ததுபோல் உட்கார்ந்திருந்த காட்சி என் மனதைப் பாதித்தது.

பவர் ஸ்டார் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. ஒரு நடனம், சில வித்தியாசமான பாடிலாங்குவேஜ்கள்  என்று பின்னி யெடுத்துள்ள தங்கர், பவரின் ரசிகர்களை கூண்டோடு கவர்ந்துகொள்ளும் வாய்ப்பு (ஆபத்து?) இருக்கிறது.

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: