Skip to content

Review Raja’s Interview in Timepass Vikatan

November 24, 2012
”தமன்னா பத்திப் பேசாதீங்க!”

ன்டர்நெட்டின் புது வைரல் ரெவ்யூ ராஜா. ‘இந்த மருந்தைக் குடித்தால் இரண்டு நாட்களுக்குத் தொடர்ச்சியாக உச்சக்கட்டம்தான்’ என்று மிட்நைட் டி.வி. டாக்டர்கள் அட்ராசிட்டி பண்ணுவதுபோல, யூ டியூபில் பில்லா  கணக்காக கோட் சூட் போட்டு வந்து ”இந்தப் படத்தைப் பாருங்க மக்காஸ். இரண்டு நாட்களுக்கு ஒரே உணர்சிக் கொந்தளிப்புதான்” என சித்தப்பு பண்ணும் அதகளத்தால் அரண்டு போய்க்கிடக்கிறது யூ டியூப். ‘சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்று ரெவ்யூ ராஜா ரெகமண்ட் செய்யும் படங்களைப் பார்க்கத் தயார் ஆகிறார்கள் வெளிநாட்டுத் தமிழர்கள்.

”யாரு பாஸ் நீங்க…?”

”வயசு 24. பிறந்தது கனடாவில் பெல்லிவில்லி எனும் நகரத்தில். அப்புறம் டொரன்ட்டோவில் குடியேறினேன். படித்தது பி.காம். இப்போது ஐ.டி. துறையில் பிசினஸ் அனலிஸ்ட். சுமார் ஒரு வருஷம் முன்னாடி எனது தமிழ் நண்பர்கள் ‘தமிழ் சினிமா பார்க்கலாம்’னு கூப்பிட்டாங்க. விஜயகாந்த் பற்றிக் கேள்விப்பட்ட எனக்கு முதலில் பயமாக இருந்தது. அவர்கள் என்னை வற்புறுத்திப் பார்க்கவைத்த முதல் படம் அஜித் நடித்த ‘பில்லா’. ஒரு தேசத்தின் எங்கேயோ ஒரு மூலையில் இவ்வளவு உலகத் தரமாக படம் எடுக்க முடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. தமிழ் சினிமா ஹாலிவுட்டுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. ஆங்கிலப் படங்கள் பார்க்கும்போது கை தட்டி விசில் அடித்தால், பக்கத்தில் இருப்பவர்கள் ஒரு மார்க்கமாகப் பார்ப்பார்கள். ஆனால் தமிழ் சினிமா பார்க்கும்போது ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!”

”தமிழ் சினிமாவை விமர்சனம் செய்து, அதை வீடியோவாக்கிப் போட வேண்டும் என்ற ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது..?”

” ‘பில்லா’ பார்த்ததில் இருந்து தமிழ் சினிமா பார்க்க வேண்டும் என்ற வெறி என்னைப் பிடித்து ஆட்டத் தொடங்கியது. தமிழ்ப் படங்களை ஆங்கிலத்தில் விமர் சிக்கும் முக்கியமான வெப்சைட்களும் இல்லை. அதனால் விமர்சனம் படித்து, படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்க முடியாததால், ‘சுறா’, ‘ஆழ்வார்’, ‘வில்லு’ என்று சில படங்களைப் பார்த்து நொந்துபோனேன். அப்பதான் நான் ஒரு முடிவெடுத்தேன். நானே தமிழ்ப் படங்களை விமர்சிப்பது என்று முடிவெடுத்து இரண்டு மாதங்களில் 11 வீடியோ எடுத்துவிட்டேன்!”

”தமிழ் சினிமாவில் பிடித்த ஹீரோ, ஹீரோயின்கள்?”

ஸ்டைல் ப்ளஸ் எனர்ஜிக்கு ரஜினி. படத்துக்குப் படம் புது மெசேஜுக்குக் கமல். ஒன் மேன் ஷோவுக்கு அஜித். ரசிகர்களைக் கட்டிப்போடும் மேனரிஸத்துக்கு விஜய். கேரக்ட ராகவே மாறிவிடும் மேஜிக்குக்கு சூர்யா. ஹீரோயின் என்றால் ஸ்ரேயா, பூஜா மற்றும் தமன்னா.

ஸ்ரேயாவின் இடுப்பு, பூஜாவின் சிரிப்பு… ஐ லைக் தெம். ஆனா பாஸ் தமன்னாதான் என் டார்லிங். அவங்களைப் பத்தி அதிகம் பேசாதீங்க. நான் ஃபீல் ஆயிடுவேன்!”

– ம.அருளினியன்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: