Skip to content

ரெடி… ஸ்டார்ட்… நோ ஆக்ஷன்!

December 14, 2012

கையைக் காலைத் தூக்கி சண்டை போடுபவர்களைப் பார்த்து, ‘பெரிய ஜாக்கி சான்னு நெனப்பு!’ என்று கிண்டல் செய்வோம். இப்போது அந்த ஜாக்கி சானின் நினைப்பே, ‘இனிமேல் கையைக் காலை தூக்கி நடிக்க மாட்டேன்!’ என்பதுதான். யெஸ்! ஜாக்கி, அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ”எனது 101-வது படமான ‘நீ க்ஷ் 12’ தான் கடைசி ஆக்ஷன் படம். இனிமேல் மனதை நெகிழவைக்கும் எமோஷனல் படங்களுக்கு மட்டுமே என் கால்ஷீட்!” – பிரஸ்மீட்டில் தேங்காய் உடைத்ததைப்போல ‘பொட்’டென உடைத்துவிட்டார் இந்த ஏசியன் சூப்பர்ஸ்டார்.

 

58 வயசு… 200-க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான காயங்கள்… ஆபரேஷன்கள்… கிட்டத்தட்ட கை கால்களின் அனைத்து மூட்டு எலும்புகளை இணைக்கும் ‘லிகமென்ட்’ எனப்படும் ஜவ்வுகள் கிழிந்து நடந்த ஆபரேஷன்கள் மட்டுமே 50-க்கும் மேலாம். ஜாக்கிக்கு நடந்ததுபோல விபத்துகள் வேறு எவருக்கேனும் நடந்திருந்தால், எழுந்து நடப்பதே சிரமமான விஷயமாக இருந்திருக்கும்.

ஹாங்காங்கில் ஒரு சமையல்காரருக்கு மகனாகப் பிறந்த சான், பிறக்கும்போதே 5,400 கிராம் எடையுடன் பிறந்தவர். அதனாலேயே அவரை அவர் பெற்றோர்கள் ‘பாவ்பாவ்’ (சீனமொழியில் பீரங்கிக் குண்டு என்று அர்த்தம்) என்று பட்டப் பெயர் வைத்து அழைத்தார்கள். பெயருக்கு ஏற்றார்போல துள்ளலோடு வளைய வந்ததவருக்கு, படிப்பு ஏறவில்லை. அதனால் அந்த ஊர் ‘ஒண்ணாப்போடு’ நிறுத்திவிட்டனர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத் துக்குச் சமையல்காரராக அவரது தந்தை சென்றபோது, கூடவே மகனையும் அழைத்துச் சென்றார். அங்கு நடந்த நாடகங்களைப் பார்த்த பாதிப்பில் நாடக நடிகராக ஆசைப்பட்டார் சான். சீனாவில் இருக்கும் ‘செவன் லிட்டில் ஃபார்ச்சூன்ஸ்’ நாடகக் குழுவில் சேர்த்துவிட்டார் அப்பா. 10 ஆண்டுகள்  சானின் குழந்தைப்பருவம் முழுவதும், கடினமான அக்ரோபாட், கராத்தே, குங்ஃபூ போன்ற கலைகளைக் கற்றுக்கொள்வதில் கழிந்தது. 1962-ம் ஆம் வருடம் ‘பிக் அண்ட் லிட்டில் வோங் டின் பாட்’ என்ற சீனப் படத்தில் முதன்முதலாக நடித்தார். அப்போது அவருக்கு வயது 8. அதற்குப் பிறகு, ஜாக்கி நடித்த ‘டைகர் ஆஃப் காண்டூன்’,  ‘சென் யுவேன் லாங்’, ‘ஆல் இன் த ஃபேமிலி’ ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஃப்ளாப் ஆக மூட்டை முடிச்சு களோடு பெற்றோரைத் தேடி ஆஸ்திரேலியாவுக்குப் போய் விட்டார்.

இதற்கு இடையில் இவரது துள்ளல் பாணி சண்டையால் ஈர்க்கப்பட்ட வில்லி சான் என்ற தயாரிப்பாளரிடம் இருந்து ஒரு தந்தி ஆஸ்திரேலியாவுக்குப் பறந்து வந்தது. அதுதான் சானின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டது. ஜாக்கி என பெயரைச் சுருக்கி வைத்துக்கொண்டு மீண்டும் ஹாங்காங் போனவர், ப்ரூஸ்லீக்கு மாற்றாக உருவான கதை எல்லாம் வரலாறு!

இப்போது ‘நீ க்ஷ் 12’ படத்தின் கடைசி ஆக்ஷன் காட்சியில் ஜாக்கி நடித்தபோது, உலகம் முழுவதும் சப்பை மூக்கர்கள், நீள மூக்கர்கள் பாகுபாடில்லாமல் லாட்வியாவில் ஏரோடியம் ஸ்டேடியத்தில் கூடிவிட்டனர். தன் ரசிகர்கள் மத்தியில் பலத்த கைதட்டலுடன் உற்சாகத்தோடு கடைசி ஆக்ஷன் காட்சியை நடித்து முடித்தார் ‘இயக்குநர்’ ஜாக்கி.  படத்தில் நான்கு நிமிடங்கள் மட்டும் வரும் இந்த சண்டைக்காட்சிக்காக இரண்டு மாதங்கள் லாட்வியாவில் தங்கி 10 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவு செய்திருக் கிறார்.

அதான் ஜாக்கி!

ஆர்.சரண்

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
                                 
 
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் – வேண்டுகோளும்
வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல.
கருத்துக்கள் நெறியாளுகைக்கு உட்பட்டவை.
தனி நபர்கள் மீதான தாக்குதல், கட்டுரை மற்றும் செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் இணையதளத்திலிருந்து நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்த பகுதியை தவறாக பயன்படுத்துவோர் மற்றும் இணையதளத்தின் விதிகளுக்கு முரணாக செயல்படுவோர் இணையதளத்தை பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
நல்ல முறையில் ஆரோக்யமான வகையில் கருத்து சுதந்திரத்தை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.
தவறான கருத்துக்களை கண்டால் துஷ்பிரயோகம் தெரிவி (REPORT ABUSE) என்ற பட்டனை அழுத்தவும்.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: