Skip to content

எங்களுக்குள் பர்ஃபெக்ட் கெமிஸ்ட்ரி!

December 21, 2012

எஸ்.ரஜத்

இளங்காலைப் பனியாக இளைஞர் இதயங்களை வருடிக் கொண்டிருக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் பப்ளி அறிமுகம், வித்யுலேகா. சமந்தாவையும் ஜீவாவையும் சேர்த்துவைக்கும் கலர்ஃபுல் ஜெனி. சந்தானத்தின் காமெடி ஜோடி. தங்கள் காதலை வெற்றியாக்க ஜெனி மாதிரி ஒரு தோழி இல்லையே என்று யூத்களை ஏங்கவைக்கும் பாத்திரம். பிரபல நடிகர் மோகன்ராமின் மகள் வித்யு. எம்.ஓ.பி. வைஷ்ணவாவின் விஸ்காம் தயாரிப்பு. முதல் படமே கௌதம் படம். தலைகால் தெரியாமல் உற்சாகம். அவரோடு பேசியதில் இருந்து:

எப்படி இந்த வாய்ப்பு?

ஏவம் நாடகக் குழுவின் மானஸி, கௌதமிடம், ஜெனிஃபர் கேரக்டருக்கு என்னை சொன்னார். மேக் அப் டெஸ்ட்க்கு வரச் சொன்னார். கல்லூரியில் வரும் சீனில், இரண்டு நிமிடம் வசனம் பேசி நடிக்கச் சொன்னார். பத்தே நொடிகளில், ‘போதும் நிறுத்து. நீதான் என் படத்தில் ஜெனிஃபர் என்றார். ஆச்சர்ய செலக்ஷன் அது.”

சந்தானம் எப்படி?

கொஞ்சம் கூட பந்தா, அலட்டல் இல்லாத நல்ல ஃப்ரெண்ட். எழுதிய டயலாக் தவிர, கொஞ்சம் மாற்றியோ, சேர்த்தோ பேசுவோம். நன்றாக இருந்தால் டைரக்டர் ஒத்துக் கொள்வார். எங்களுக்குள் பர்ஃபெக்ட் கெமிஸ்ட்ரி இருந்தது.”

கௌதமோடு ஒர்க் பண்ணுவது?

சூப்பர் அனுபவம். சொல்லிக் கொடுக்கும்போதே மனசுக்குள்ள எல்லாம் பதிஞ்சுடும். அதை அப்படியே ரீப்ளே செஞ்சாலே போதும்.”

மறக்க முடியாத அனுபவம்?

என் பர்த்டே. அன்னிக்கும் ஷூட் இருந்தது. ‘இன்னிக்கு உனக்குப் பிறந்த நாளா? தெரிந்திருந்தால் உன்னை கூப்பிட்டிருக்க மாட்டேனே” என்றார் கௌதம். இன்னிக்கு ஒர்க் பண்றதுதான் எனக்கு மகிழ்ச்சி”ன்னு சொன்னேன். ஜீவா, சமந்தா, சந்தானம், 500 ஜூனியர் ஆர்டிஸ்டுகள் எல்லோரும் சேர்ந்து என்னை அன்னிக்கு வாழ்த்தினாங்க. மறக்கவே முடியாது.”

சந்தானத்தோடு காமெடியில் கலக்கறீங்க?

என் வாழ்க்கையில் முதல் இன்ஸ்பிரேஷன் என் அப்பா மோகன்ராம். அடுத்து, ஆச்சி மனோரமாதான். மக்களைச் சிரிக்க வைக்கிறது எவ்வளவு கஷ்டமான சீரியஸான விஷயம் என்பது எனக்குத் தெரியும். மனோரமாவோட பல மறக்க முடியாத படங்களைப் பார்த்திருக்கிறேன். அவங்கள மாதிரி தூள் கிளப்பணும்னு எனக்கு ஆசை.”

சொந்தக் குரல்ல பேசியிருக்கீங்க போல?

ஆமா. கௌதம், ‘உன் குரல் உனக்குப் பெரிய பலம். யுனீக்கா இருக்கு. நேச்சுரலா, போலித்தனமில்லாம, ரியலா உன் கேரக்டரைச் செய்ய உன் குரல் ஹெல்ப் பண்ணும்’னு அவர்தான் தைரியம் கொடுத்தாரு.”

நிஜ வாழ்க்கையிலும் நீங்க ஜெனிதா?

துடிதுடிப்பு, நிறைய பேசுவது, பிரெண்ட்ஸுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எல்லாவற்றிலும் நான் 99 சதவிகிதம் ஜெனி மாதிரிதான்! நிஜ வாழ்க்கையில் காதலர்கள் என்னிடம் சேர்த்துவைக்க உதவி கேட்டதில்லை!”

தொடர்ந்து நகைச்சுவைதானா?

‘’நகைச்சுவை, அதில் உள்ள டைமிங் எனக்கு ஓரளவுக்கு நல்லா வரும். நகைச்சுவையோடு சேர்ந்து கேரக்டர் ரோலும் வந்தா நடிக்கலாம். அவசரம் ஒண்ணும் இல்லை. இன்னும் நிறைய டைம் இருக்கு.”

முதல் படத்திலேயே நிறைய பாராட்டு?

அதுதான் பயமா இருக்கு. அதைத் தக்க வெச்சுக்கணுமே.”

செல்போன் ‘என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்’ என்று அழைக்க, வித்யு, பிஸி!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: