Skip to content

“பெண்களுக்கு இடம் கொடுங்கள் ஆண்களே!”

December 22, 2012

ரூபா… நடிகை, இயக்குநர், கொரியோகிராஃபர், களரி வீராங்கனை, சமூக சேவகி எனப் பன்முகம்கொண்ட தமிழ்ப் பெண். பெங்களூரில் ‘எங்க வீடு டிரஸ்ட்’ மூலம் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட 120 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார். எய்ட்ஸ் பாதித்தவர்களின் நலன் காக்கச் சொல்லி இவர் நடித்து இயக்கிய ‘முக்காபுடா’ படம் சர்வ தேச அங்கீகாரம் பெற்ற சினிமா. இப்போது ‘சந்திரா’ படத்துக்காக ஸ்ரேயாவை இயக்கிவருகிறார்.

 ” ‘சந்திரா’-சரித்திரம், இதிகாசம், ராணின்னு ஃபேன்டஸி சப்ஜெக்ட்டா?”  

”ஃபேன்டஸி, சரித்திரம், இதிகாசம் எல்லாம் கலந்த உண்மைக் கதை. ராஜ வம்சத்துக் கடைசித் தலைமுறை மகாராணியின் வாழ்க்கை. தன் குடிமகன்களில் ஒருத்தனோட காதலில் விழும் மகாராணி சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை!”    

”ஸ்ரேயாவை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க?”

”ரஜினி, விஜய், விக்ரம்னு ஸ்டார்களோட நடிச்ச ஹீரோயின்கிற அந்த ஒரு தகுதி போதாதா? இன்னும் சொல்லப்போனா, ஸ்ரேயா நடிக்கிறாங்கனு தெரிஞ்ச துமே படத்துக்கு தெலுங்கில் டப்பிங் ரைட்ஸ் கேட்கிறாங்க. ஸ்ரேயா மிகச் சிறந்த நடிகை. நல்ல டான்ஸர்.  கதைப்படி மகாராணி களரி சண்டை போடணும். ஸ்ரேயாகிட்ட கதை சொன்னதுமே, ‘ஷூட்டிங் எப்போ…? அதுக்கு முன்னாடி நான் களரி கத்துக்கணுமே’னு ஆர்வமாக்  கேட்டாங்க. காலைல ஆறு மணிக்கே களரி கிளாஸ் முடிச்சுட்டு அப்புறம் ஷூட்டிங்னு நாள் முழுக்கப் பரபரப்பா இருந்தாங்க. ஒரு வருஷம் தேவைப்படும் அடிப்படைக் களரிப் பயிற்சியை மூணே மாசத்துல முடிச்சுட்டாங்க.  

தவிர, ஒரு சமூக சேவகியாகவும் ஸ்ரேயா என்னை ரொம்ப ஈர்த்திருக்காங்க.  மும்பையில் ஸ்ரேயா வெச்சிருக்கும் பியூட்டி பார்லரில் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தான் வேலை பார்க் கிறாங்க. எல்லாரும் எப்பவும் நல்லாஇருக் கணும்னு நினைக்கிற மனசு ஸ்ரேயா வுக்கு. சினிமாவின் கிளாமர் தேவைகள், சமூகத்தின் தேங்க் லெஸ் சேவைகள்… எல்லாத்திலும் ஸ்கோர் பண்ணுவாங்க ஸ்ரேயா. அவங்க மனசு ரொம்ப அழகு!”

”சினிமாவில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவா இருக்கே. என்ன காரணம்?”

”எந்த ஆணும் ராத்திரி ரெண்டு மணிக்குக் கூட வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வரலாம். ஆனா, ஒரு பெண் அப்படி வர்ற சூழ்நிலை இப்பவும் இங்கே இல்லை. நல்ல திறமை, பக்குவத்தோட வந்தாலும்  கல்யாணம், குழந்தைக்குப் பிறகு குடும்ப வாழ்க்கை மட்டுமே போதும்னு செட்டில் ஆகி ஒதுங்கிடறாங்க பல பெண்கள். இதெல்லாம் தாண்டி வந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல ஏகப்பட்ட சிக்கல் கள். ஒரு ஆண் இயக்குநர் தன் யூனிட்ல இருக்கிற ஒளிப்பதிவாளர், மேக்கப் மேன், லைட்பாய்னு யாரைக் கடிஞ்சுக்கிட்டாலும், ஏதாவது திருத்தம் சொன்னாலும் ஏத்துக்கிறாங்க. ஆனா, அதே இயக்குநர் ஒரு பெண்ணா இருந் துட்டா, ‘ஒரு  பொண்ணு நம்மளைத் திட்டுதே… திருத்துதே’னு ஈகோ பார்க்க ஆரம்பிச்சுடுறாங்க. பெண்களின் வழிகாட்டுதல்களையும் தொழில் சார்ந்த அம்சமாப் பார்த்தா எந்தப் பிரச்னையும் இல்லை. பெண்கள் சொல்றதுல உள்ள ஆரோக்கியமான விஷயங்களையும் மதிச்சு மனப்பூர்வமா ஏத்துக்கிட்டு வேலை செஞ்சா, சினிமானு இல்லை… எல்லா துறையிலும் பெண்கள் இன்னும் தங்கள் திறமையை நிரூபிப்பாங்க!”  

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: