Skip to content

2012 டாப் 10 படங்கள் (Kungumam)

December 24, 2012

2012 டாப் 10 படங்கள்

Delicious Save to Delicious  Save to stumbleupon  Print Bookmark My Bookmark List

 

இந்த ஆண்டில் வெளிவந்த படங்களின் பட்டியலைப் பார்க்கும்போது ஆச்சர்யம்தான் உண்டாகிறது. மொத்தம் நூற்றி நாற்பதுக்கும் அதிகமான படங்கள் வெளியாகியுள்ளன. இதில், முன்னணி நடிகர்களின் படங்களோ ஒரு டஜனைக்கூட தாண்டவில்லை. பெரும்பான்மை படங்கள் சிறிய அல்லது புதிய நடிகர்களின் படங்கள்; அல்லது சிறிய ‘பட்ஜெட்’ படங்கள்!

இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் ‘ஓபனிங்’ என்ற மாயக் குதிரையில் பணத்தைக் கட்டிவிட்டு பதைத்தபடி இருக்கிறார்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள். மாயக்குதிரைகளோ, சரி பாதிக்குமேல் நொண்டியடித்தபடியே தம் ஓட்டத்தை முடிப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், ‘பெரிய நடிகர்களின் படங்கள்தான் வியாபார நோக்கம் கொண்டவை; மற்றவை எல்லாம் கலையின் உன்னதத்தை நோக்கிய லட்சியப் பயணம்’ என்றும் சொல்வதற்கில்லை. பட்ஜெட் படம் என்பது, பெரும்பாலும் பெரிய படங்களின் ‘சாயலில்’ செய்யப்படும் சிறிய முயற்சிகளே.

வளர்ந்துவிட்ட சினிமா தொழில்நுட்பத்தை, அதன் சாத்தியங்களை பிரமாண்டங்களாக்கி வெற்றி பெறுவோர் ஒரு பக்கம்; சினிமாவின் நுட்பமான அலகுகளை எளிமையாகக் கையாண்டு சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் சிறிய கூட்டம் இன்னொரு பக்கம். இவர்களே வணிக சினிமா கூறுகளையும் வாழ்வின் இயல்புகளையும் சரியான கலவையில் பார்வையாளர்களின் ரசனைக்குரியதாக்குகிறார்கள். இதனாலேயே இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள். இவர்கள்தான் தமிழ் சினிமாவின் இன்றைய முகம்.

இனி 2012ன் டாப் டென்
படங்கள்…
 பிரமாண்ட பள்ளியில் (ஷங்கர்) பயின்று, அதற்கு எதிர் திசையில் பயணிக்கும் படைப்பாளி பாலாஜி சக்திவேல். தன்னியல்பாக, இருவேறு உலகங்களாக அருகருகே இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்வுகள் ஒன்றையொன்று மோதிக் கடக்கும் தருணத்தில் நிகழும் விபரீதத்தை அழகாக இந்தப் படத்தில் கதைக்களமாக்கியிருக்கிறார் அவர்.

வலியும் வேதனையும் நிறைந்த வாழ்வை எளிய வார்த்தைகளில் பேசும் படம். ஈழ உறவுகளுக்கும் இந்திய மீனவனுக்குமான அறுக்க முடியாத பந்தமாகத் தொடர்ந்து வரும் உறவை, கடல் மாதாவின் மடியில் பிறந்து, அங்கேயே மடிந்துபோன அகதி ஒருவன் வாழ்வின் வழியாகச் சொல்லியிருக்கிறார் சீனு ராமசாமி.

தலைமுறைகளின் உருவாக்கத்தில் ஆற்றலுடன் செயல்பட வேண்டிய ஆசிரிய சமூகத்தின் வீழ்ச்சியை, அதன் விளைவைப் பேசும் படம். அரிதாகிவரும் ஆசிரியரின் மாதிரியாய் இப்படத்தில் வாழ்ந்திருக்கும் சமுத்திரகனியும் புது இயக்குனர் அன்பழகனும் தயாரிப்பாளர் பிரபு சாலமனும் பாராட்டுக்குரியவர்கள்.

ஒரே கதைச் சரடை எப்படி மூன்று வெற்றிப் படங்களாக்க முடியுமென இயக்குனர் ராஜேஷிடம்தான் பாடம் கற்க வேண்டும். கலைக் குடும்ப வாரிசான உதயநிதி ஸ்டாலின், நடிகர் என்ற புதிய பரிமாணத்திலும் தன்னை நிரூபித்திருக்கிறார். தனது பலம், பலவீனமறிந்து செயல்படும் இவர், நம்பிக்கையளிக்கும் புதிய வரவு.

கல்லூரி இளைஞர்களின் காதலைச் சுற்றி வரும் கதை. இன்று தியேட்டர்களுக்கு அதிகமாக வருபவர்கள் மாணவர்களே என்பதால், இப்படம் வெற்றிப் படமானதில் ஆச்சர்யமில்லை. எளிதாகவும், அதே நேரம் வெற்றிகரமாகவும் எப்படி ஒரு சினிமாவை உருவாக்க முடியும் என்பதற்கான சிறந்த மாடல் இந்தப்படம்.

உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளின் வரவால் காலாவதியாகிப் போன கலைக் கல்லூரிகள் உருவாக்கும் அட்டகத்திகளின் கதைதான் இந்தப் படம். சென்னையின் கிராமமொன்றில்(?!) பஸ்ஸில் ஃபுட்போர்டு அடித்து ரூட்டுத் தலையாகும் அட்டகத்திதான் நாயகன். நம்பிக்கையளிக்கிறார் புதிய இயக்குனர் ரஞ்சித்.

வளர்ச்சியின் பெயரால் ஆதிவாசி சமூகங்கள் தங்கள் பூர்வீக பூமிகளிலிருந்து விரட்டப்படும் பின்னணியில், காதல் கதையொன்றைச் சொல்கிறார் பிரபு சாலமன். அழிந்துவரும் காடுகளின் எழிலைக் கண்குளிரக் காட்டும் கேமரா, சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபு, அத்தனை அழகான அல்லி லட்சுமி மேனன்… இவ்வளவு இருந்தால் வெற்றிதானே.

ரஜினி மற்றும் கமலின் வாரிசுகள் கூட்டணியில் உருவான படம். காட்சியமைப்பில் ஐஸ்வர்யாவும் நடிப்பில் ஸ்ருதியும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். தனுஷும் தன் பங்கை சரியாகவே செய்திருந்தார். ஆனாலும், படம் வெற்றியடையவில்லை.

தமிழ் சினிமாவின் மிக ஆதர்சமான கதைக்களமான ‘ஞாபகமறதி’ இங்கு முழுநீள காமெடி ஆகியிருக்கிறது. அமெச்சூர்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், வெற்றி பெற்றிருக்கும் சுவாரசியமான படம்.

நியாயமாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றிருக்க வேண்டிய படம். மட்டுமின்றி, தமிழ் சினிமா வரலாற்றிலேயே பத்திற்குள் வந்திருக்க வேண்டியது. திரைக்கதை அமைப்பின் குழப்பத்தால் தடுமாறிவிட்ட நல்ல படம்.

இனி, இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டிய, ஆனால் இடம்பெறாத படங்கள்… ‘மதுபானக் கடை’ கதைக்களமே நல்ல முயற்சி; சாமர்த்தியமான கதைக்களமும் நேர்த்தியான உருவாக்கமும் இணைந்தும், நாயக பலமின்றி வெற்றியை நழுவவிட்ட படம், ‘நான்’.

நடிகர் விஜய்யின் ‘துப்பாக்கி’யும் சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியனு’ம் பெரும் வெற்றிப் படங்கள்தான். ஆனால் ‘துப்பாக்கி’ பேசிய ‘ஸ்லீப்பர் செல்’ அரசியல் மிக விபரீதமானது. பிளவுபட்டுக் கிடக்கும் சமூகங்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் நேசத்தையும் உருவாக்குவதே கலையின் உன்னதச் செயல்பாடாக முடியும். ஆனால் ‘துப்பாக்கி’, அன்றாட வாழ்வின் சுமைகளில் அமிழ்ந்து நசுங்கும் ஏழை இஸ்லாமியனை தீவிரவாதியாகக் காட்டும் வன்செயலைச் செய்கிறது. ஜனரஞ்சகத்துக்காக சாதீய மேட்டிமையை கதைக்களமாக்கிவிட்டிருக்கிறது ‘சுந்தரபாண்டியன்’. நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் சாதிய வன்முறைக்கு சாமரம் வீசும் வேலை கலைச் செயல்பாடில்லையே!

.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: