Skip to content

ஒளிப்பதிவாளர் செழியன் – ”தமிழ் சினிமா… தமிழர் வாழ்வை பிரதிபலிக்கணும்!”

December 30, 2012

ஒளிப்பதிவாளர் செழியன்

”தமிழ் சினிமா… தமிழர் வாழ்வை பிரதிபலிக்கணும்!”

ராகவ்குமார்

தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘பரதேசி’. இயக்குனர் பாலாவின் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு. ‘பரதேசி’யை தமது கேமராவில் அழகியலோடு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். ஒளிப்பதிவாளர் என்பதையும் தாண்டி உலக சினிமா தொடர்பான ஆழமான புரிதல்களையும், நூல்களையும் வெளியிட்டவர் ‘பரதேசி’யோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:

எப்படி வந்திருக்கான் ‘பரதேசி’?

சமூகத்தின் வாழ்வியல் பதிவாக வந்திருக்கான். சினிமா எமோஷனல் மீடியம். இந்த உணர்வுகள் சரியான திரைக்கதையில் வெளிப்படும் போதுதான் ஜெயிக்க முடிகிறது. பாலா சரியாக உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். இந்த எமோஷன்களை சரியான தொழில் நுட்பத்துடன் வெளிப்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது. ‘பரதேசி’ 1940களில் நடந்த கதையாக இருப்பதால், அக்காலகட்டத்தைக் காட்ட திரையில் சில குறிப்பிட்ட ‘வண்ணங்களை’ப் பயன்படுத்தியிருக்கிறேன். கிராஃபிக்ஸ், கேமரா ஆங்கிள், ஸ்பெஷல் எஃபெக்ட் என எந்த ஒரு டெக்னாலஜியும் தனியாகத் திரையில் தெரியக் கூடாது. தெரியும் இடத்தில் தொழில்நுட்பம் தோற்றுப் போய்விடும். திரைக்கதையோடு பயணம் செய்ய வேண்டும். ‘பரதேசி’யில் பயன்படுத்தியுள்ள டெக்னாலஜி, படத்தில் தனியாகத் தெரியாது.”

பாலாவுடன் பணியாற்றுவது கஷ்டமா இல்லையா?

எந்த ஒரு வேலையையும் விரும்பிச் செய்தால் கஷ்டம் தெரியாது. ‘பரதேசி’யை ஆரம்பிக்கும்போதே, பாலா சர்வதேசத் தரத்தில் ஒரு படம் எடுக்க வேண்டும் என என்னிடம் சொன்னார். எனக்கும் இந்த எண்ணம் இருந்ததால், முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட்டேன். பாலா ஒரு விஷயத்தை அவர் விரும்பியது போல சரியாக வரும்வரை விட மாட்டார். அதர்வாவிடமிருந்து நடிப்பை வாங்கியதைப் பார்த்து பிரமித்துப் பார்த்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில், ஒரு பார்வையாளனைப் போல இவ்விஷயங்களை மகிழ்வுடன் உற்று நோக்கினேன்.”

உலக சினிமா விமர்சகராக, தமிழ் சினிமாவின் தரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உலக சினிமா என கொண்டாடப்படும் படங்களெல்லாம், அந்தந்த நாடுகளின் கலாசாரப் பண்பாடுகளைப் பிரதிபலிக்கக் கூடியவை. அந்த நாடுகளைத் தவிர்த்து வேறு ஏதோ கலாசார பின்புலம் கொண்ட படங்களை உலக சினிமா என யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. உலகத் தரத்தில் தமிழ் சினிமா என்றால் தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளைப் பிரதிபலிக்கும் படங்கள் மட்டும்தான்.”

மேலைநாட்டுப் படங்களைப் பார்த்து காப்பியடிக்கிறார்களே?

ஒரு பொருளைத் திருடினாலும், படைப்பைத் திருடினாலும் திருட்டுதான். வெள்ளைக்காரனிடமிருந்து திருடினால் மட்டும் திருட்டு இல்லையா? இன்ஸ்பயர் ஆகி படம் எடுக்கலாம். ஆனால் ஒப்புக் கொள்ள வேண்டும். நம் சமூகத்தைச் சுற்றி ஆயிரம் விஷயங்கள் உள்ளன, சினிமாவாக எடுப்பதற்கு. இன்றைய இளைஞர்கள் நமது இந்திய இலக்கியங்களை ஆழ்ந்து வாசிப்பவர்களாகவும், நமது பண்பாட்டு, கலாசார, வாழ்வியலில் பல விஷயங்கள் பொதிந்துள்ளன என்பதை நம்புபவர்களாகவும் இருக்க வேண்டும்.”

கமர்ஷியல் சினிமாதானே இங்கு வெற்றி பெறுகிறது?

உலக சினிமாகூட கமர்ஷியல் படங்கள்தான். தரமான சினிமா, தரமற்ற சினிமா என்ற இரண்டு வகைகள்தான் இங்குள்ளன. இந்த இரண்டில் உங்கள் படம் எது என்பதுதான் கேள்வி.”

டி.டி.எச். வழியாக டி.வி.யில் சினிமா ஒளிபரப்பாவதால் சினிமா ஒழிந்து விடுமா?

ஒரு காலத்தில் டி.வி. அறிமுகமான போது, சினிமா தியேட்டர்கள் இருக்காது என்றார்கள். சில வருடங்களுக்கு முன் சி.டி. வந்த போது திரை அரங்கங்கள் காலியாகி விடும் என்றார்கள். திரையரங்கங்கள் இன்னமும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. டி.டி.எச். வந்தாலும் சினிமா அழியாது. தொழில் நுட்ப வளர்ச்சியைத் தடுக்க முடியாது. இன்று வேண்டாம் என்று சொல்லும் தொழில்நுட்பம், நாளை வரத்தான் போகிறது.”

———————————————————————————————————————————————————————-

English Translation:

Cameraman Cheziyan

“Tamil Cinema.. Should reflect the lives of Tamils!”

p90

“Paradesi” has created huge expectations in Kollywood. Since its from Dir Bala, the expectations have increased. Cameraman Cheziyan has beautifully done his job for Paradesi. Apart from being a Cameraman, he also has a deep knowledge about World Cinema and he has written books about it. In this interview, he shares his experience of working in Paradesi:

How has Paradesi shaped up?

p90a

Paradesi is a reflection how we lived as a society at certain point in time. Cinema is an Emotional medium. Only when those emotions find an excellent screenplay, the movie becomes a success. Dir Bala has recorded the right emotions in the movie. We need to use the right technology to showcase those emotions.

Was it not difficult to work with Dir Bala?

p90b

If you do any work willingly, you won’t find it difficult. While starting Paradesi, Dir Bala told me that the plan was to make a movie of international standards. Since I also had the same thing in mind, I was able to focus on it completely. Bala is particular about everything. He will not rest until whatever he has planned in mind is executed. I was really in awe of Bala by the way in which he extracted work from Atharva. At the shooting spot, I was happily observing everything like an outsider.

As a critic of World Cinema, What do you think about the quality of Tamil Cinema?

p91

Whatever that is celebrated as World Cinema is nothing but the movies which reflect the country of origins culture and society. No one will accept any movie which is alien to a country’s culture. If someone is talking about Tamil Cinema of World standards – that means it should refer to movies that reflect the culture.

People are copying movies from Other Countries. Isn’t?

Whether you steal a product or a work of art, it’s the same. Just because you are stealing from the west, that doesn’t make it right. We can get inspired and make a movie. But we have to acknowledge the inspiration. There are thousand of things in and around our society – based on which we can make a movie. Today’s youth should be well read about our Indian Literature. They also should believe that in our culture and tradition, lot of good things are available as material for movies.

p91a

Only Commercial movies are winning here. Isn’t?

Even the World Cinema is Commercial cinema. There are only two categories of movies: Good Cinema and Bad Cinema. The only question is — “Which category you movie belongs to..”

If movies are shown via DTH, do you think that will destroy Cinema?

When TV came, people said Movie Theaters would go out of business. After a few years, when VCDs came, people said again Movie Theaters would go out of business. Even now Movie Theaters are operating. Even if DTH comes, cinema won’t die. We cannot stop Technology. Today, we may oppose a particular technology, but it is going to come tomorrow.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: