Skip to content

“சிம்பு பாட நான் ஆடினேன்!”

January 5, 2013

ஓவர் டு நகுலன்

 

“சிம்பு பாட நான் ஆடினேன்!”

 

விஜய்கோபால்

நாக்கமூக்க நகுலன் இப்போ ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தின் சட்டக் கல்லூரி மாணவன். ‘கந்தக்கோட்டை’ படத்துக்குப் பிறகு நீண்ண்ண்ண்ட இடைவெளி ஏன்?

பெரிய நடிகர்களுக்குக் கூட சில காலம் பிரேக் தேவைப்படறது உண்டு. ‘கந்தக்கோட்டை’ படத்துக்குப் பிறகு நல்ல படம், நல்ல கதைக்காக வெயிட் பண்ணுனேன். அப்போ ஈரம் அறிவழகன் இயக்கும் ‘வல்லினம்’ கதை வந்தது. அதில் ஸ்போர்ட்ஸ்மேன் வேடம். அதன்பின் வெற்றிமாறன் அசிஸ்டெண்ட் பிருத்திவ் ராஜ்குமார் சொன்ன ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ கதையும் நல்லா இருந்தது. இதில் சட்டக் கல்லூரி மாணவனாகவும், காதலிக்கு ஏற்படும் பிரச்னைக்காகப் போராடும் இளைஞனாகவும் நடித்துள்ளேன். இப்படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும்.”

‘நான் ராஜாவாகப் போகிறேன்’ ஆடியோ விழாவில் தனுஷும், சிவகார்த்திகேயன் வாழ்த்தினார்களே?

தனுஷ், வாழ்த்திவிட்டுப் படத்தின் பல காட்சிகளைப் பாராட்டியும் பேசினார். அவர் நல்ல மனிதர். அதேபோல் சிவகார்த்திகேயன், ‘சிகப்பா கோட் சூட்டு போட்டு ராஜா மாதிரி இருக்க’ன்னு என்னைப் பாராட்டினார். இப்படி ஒரு நடிகனை மற்ற நடிகர்கள் வாழ்த்துவது ஆரோக்கியமான விஷயம். அதே போல் படத்தில் சிம்பு ஒரு பாடலைப் பாடியுள்ளார். அதுக்கு நான் நாக்கமூக்க கணக்கா ஆடுறேன். இயக்குனர் எழுதியுள்ள ‘கலாய்ப்போம், கலாய்ப்போம்’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும். படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் வெற்றிமாறனின் வசனம்.”

சுனேனா, பூர்ணாவுடன் என உங்களைப் பற்றி கிசுகிசு… நீங்களே கிளப்பிவிட்டதா?

சுனேனாவுடன் இரண்டு ஹிட் படம் கொடுத்தேன். ஒரு விழாவில் பார்த்தா எப்படிங்க பேசாம போக முடியும்? எங்கேயாவது பார்த்தால் ஹாய் சொல்வேன். மற்றபடி எதுவுமில்லை. அதே போல் பூர்ணாவுடன் நட்பு மட்டுமே. கிசு…கிசு… நானே பரப்புறேன்னா… எப்படி சார் செய்வேன். எங்க அக்கா தேவயானி 75 படம் நடிச்சு நல்ல நடிகைன்னு பெயர் எடுத்தவங்க. அவங்க தம்பி நல்லவன்னு பேர் எடுக்கத்தான் ஆசைப்படுவேன். அவங்க பெயரைக் கெடுக்க மாட்டேன்.”

அக்கா தேவயானி நடிக்கும் ‘திருமதி தமிழ்’?

‘முத்தாரம்’ சீரியலில் அக்கா போலீஸ் வேடத்தில் பட்டையைக் கிளப்பறாங்க. அதேபோல் அவர் நடிக்கும் ‘திருமதி தமிழ்’ படம் பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஏன்னா நான் கத்துக்குட்டி. அக்கா, மாமா, என்னிடம் ஆலோசனை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை. அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதியும் எனக்கு இல்லை.”

‘அமளி துமளி’ படத்தில் சாந்தனுவுடன் நடிக்கறீங்களே?

இதில் காமெடி கலந்த வேடம். எனக்கு ஜோடியா சுப்ரமணியபுரம் ஸ்வாதி நடிக்கிறார். சாந்தனு ரொம்ப குளோஸ் ஃப்ரெண்டாகிட்டார். இரண்டு ஹீரோ நடித்தால் பிரச்னை வரும் என்பார்கள். நாங்கள் இப்போதெல்லாம் விழாக்களுக்குச் சேர்ந்தே போகிறோம். அவ்வளவு குளோஸ்.”

இனி நகுலனை வேறு தோற்றத்தில் பார்க்கலாம்?

நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் சட்டக் கல்லூரி மாணவர் வேடம் என்றாலும், அதையும் தாண்டி, சமூக விழிப்பு உணர்வுமிக்க கதாபாத்திரம் உள்ளது. படம் வந்த பிறகு நகுலனை நீங்கள் வித்தியாசமாகக் காணலாம். எனக்குச் சின்ன வயதுதானே சார். இப்பத்தானே கல்லூரி மாணவனாக நடிக்க முடியும்.” 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: