Skip to content

பிரியாணி பிளேபாய்!

January 17, 2013

“சார்… இது அஜித் சார் சொல்லிக் கொடுத்த ஃபார்முலா. உங்களுக்காக கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்றேன். மொதல்ல பாஸ்மதி அரிசி சார்… நல்ல பிராண்ட் அரிசியா வாங்கிக்கணும். அப்புறம் செம ஸ்பைஸி மசாலா தேவைப்படும். அது கையால் அரைச்சதா இருந்தா சூப்பர். அப்புறம் அரிசியைக் களைஞ்சு போட்டு, சிக்கனைக் கழுவி….”

 ”ஹலோ… சிக்கன் பிரியாணி மேக்கிங் இல்லை… உங்க ‘பிரியாணி’ படத்தோட மேக்கிங் கேட்டேன்?”

கண் சிமிட்டிச் சிரிக்கிறார் வெங்கட்பிரபு. கோலிவுட்டின் கொண்டாட்டமான இயக்குநர். ”என் ‘பிரியாணி’ டமால் டுமீல் சிரிப்புப் பட்டாசு. டைட்டில்ல வெங்கட்பிரபு டயட்னு இருக்கும். ஆனா, அன்லிமிடெட் கொண்டாட் டம் கியாரன்ட்டி. இதுவரை கார்த்தியே பார்க்காத கார்த்தியை ‘பிரியாணி’யில் அவருக்குக் காட்டியிருக்கோம். செம ஸ்டைலிஷா ஆளை மாத்தியாச்சு. மாஸ் ஹீரோ சாயலே இல்லாம, ஏதோ தேனாம்பேட்டை சிக்னல்ல பஸ்ஸுக்குக் காத்திருக்கிற பையன் மாதிரி இருப்பார். கிட்டத்தட்ட ஒரு காஸனோவா கேரக்டர் பண்ணியிருக்கார். தாடி, கேடி, அடிதடினு திரிஞ்சிட்டு இருந்தவரை பிளேபாயா மாத்துறதுக்காக, மீசையை ட்ரிம் பண்ணி, உடம்பை டைட் பண்ணி, செம டிரில் வாங்கிட்டோம். என்னங்க… இந்த ஹன்சிகா நேர்ல இவ்ளோ பப்ளியா இருக்காங்க. ஐஸ்க்ரீம் பொண்ணுங்க. ஆனா, மனசைக் கல்லாக்கிக்கிட்டு அவங்களை வெயிட் குறைக்கச் சொல்லி இன்னும் ஸ்லிம் ஆக்கினோம். பொண்ணைப் பார்க்கிறப்பலாம் காதலிக்கத் தோணும்.

ரெண்டு பேர் எல்.கே.ஜி-யில் இருந்தே ஃப்ரெண்ட்ஸ். ரொம்ப ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ். அவங்க அப்படியே வளர்றாங்க. அவங்க பண்ற சேட்டைகள்தான் படத்தோட காமெடி, டிராஜடி, காதல் எல்லாமே. இப்பதான் முதல்முறையா ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க. ஆனா, இந்தப் படத்தில் ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி செமத்தியா பத்திக்கிச்சு. ‘வேணும்னா பாருங்க… எங்க ரெண்டு பேருக்கும்தான் இந்த வருஷத்தோட ‘பெஸ்ட் பேர்’ அவார்டு கொடுப்பாங்க’னு கார்த்தி அவ்வளவு நம்பிக்கையா இருக்கார். அந்த பெஸ்ட் பேர், கார்த்தி – ஹன்சிகா இல்லை. கார்த்தியும் ப்ரேம்ஜியும். ரெண்டு பேரும் சும்மா அள்ளு கிளப்பியிருக்காங்க!’

”ஓ… ‘மங்காத்தாவுல அஜித்தை வில்லனாக்கி அதிர்ச்சி கொடுத்த மாதிரி, இந்தப் படத்தில் ப்ரேம்ஜியை ஹீரோவாக்கி ஷாக் கொடுக்குறீங்களா?’

”ஐயையோ, இப்படி எல்லாம் யோசிச்சு எனக்கு அதிர்ச்சி கொடுக்காதீங்க நண்பா! கார்த்தித£ன் ஹீரோ. சிங்கிள் ஹீரோ படம் இது. படம் முழுக்க ப்ரேம்ஜி அவர்கூடவே டிராவல் பண்ணுவார். தன்னையும் அறியாம கார்த்தி பண்ற தப்புக்கு எல்லாம் பலியாகிட்டே இருப்பார் ப்ரேம்ஜி. கடைசியில் ரெண்டு பேரும் ஒரு பெரிய சிக்கல்ல மாட்டுவாங்க. அதுல இருந்து எப்படி வெளியே வர்றாங்கங்கிறதுதான் பிரியாணி ரெசிப்பி!

இது யுவன் மியூஸிக் பண்ற நூறாவது படமாகவும் அமைஞ்சது ரொம்ப ஹாப்பி. செம ஜாலி சவாரி!”

”அஜித், கார்த்தினு டாப் ஹீரோக்களின் ‘மோஸ்ட் வான்டட் டைரக்டரா இருக்கீங்க. ஆனா, சட்டுனு பார்த்தா ரெண்டு, மூணு படங்களில் நடிக்கிறீங்க. இன்னும் நடிப்பு ஆசை துடிச்சுட்டே இருக்கா?”

”அப்படி இல்லைங்க… ‘விழித்திரு’ படத்தில் நான் நடிக்கிறது ரொம்பச் சின்ன ரோல். ஆனா, அர்த்தம் நிறைஞ்சதா இருக்கும். இயக்குநர் மீரா கதிரவன் அந்தப் படத்தில் நான்தான் நடிக்கணும்னு சொல்லி வந்து நின்னப்போ, ‘தலைவா… தொழில் இப்பதான் நல்லாப் போயிட்டு இருக்கு. அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்கிறேனே… முடி கொட்டி, வெயிட் எல்லாம் போட்டு ஒரு மாதிரி இருக்கேன். இப்பப் போய் நடிக்கச் சொல்றீங்களே?’னு பாலீஷா சொல்லி மறுத்தேன். ஆனா, அவர் விடாப்பிடியா நின்னு கதை சொன்னார். மெல்ட் ஆகிட்டேன். நல்ல கதை. ஒரே ராத்திரியில் நடக்கிற சம்பவங்கள்தான் படம். என்னால் முடிஞ்ச சின்ன விஷயத்தை பண்ணிக் கொடுத்திருக்கேன். மத்தபடி, நம்ம பேட்டை எப்பவும் டைரக்‌ஷன்தான். என் படங்கள்லகூட நடிக்கக் கூடாதுனு தெளிவா இருக்கேன். அதுவும் போக, எங்க வீட்ல ஏற்கெனவே ப்ரேம்ஜினு ஒரு மகா நடிகன் கொடுக்கிற டார்ச்சர் பத்தாதா?”

”சமீபத்துல என்ன படம் பார்த்தீங்க… எது பிடிச்சிருந்தது?”

”ரொம்பப் பிடிச்சது ‘வழக்கு எண் 18/9’. மத்தபடி, ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’னு ரசிகர்களோட குட் புக்ஸ்ல இருக்கும் எல்லாப் படங்களும் பார்த்தேன். ‘அட்டகத்தி’ ரஞ்சித் ‘சென்னை28’-ல என் கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தான். அந்தப் படத் துக்கு ஸ்டோரி போர்டு வரையுறதுக்காக சேர்த்துக் கிட்டேன். ஆனா, ஒரு சின்ன கார்ட்டூன்கூட அவன் வரையலை. ஏன்னா, நான் அவனுக்கு ஸ்டோரியே சொல்லலை. அந்தப் படத்துல என்னங்க ஸ்டோரி இருந்துச்சு. ஆனா, இப்போ ‘அட்டகத்தி’யில் அட்டகாசப்படுத்திட்டான். இப்போ வர்ற பசங்க மிரட்டுறாங்க. உங்களை எல்லாம் பார்த்தா பயமா இருந்தாலும், ஆல் தி பெஸ்ட் பசங்களா!”  

” ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘உன்னைச் சரணடைந்தேன்’ சமயங்கள்ல, இன்னைக்கு இருக்கிற வெங்கட்பிரபு பத்தி ஏதாவது ஐடியாவாவது இருந்ததா?’

”சுத்தமா இல்லைங்க. இப்ப நான் இப்படி இருக்கேன்னா அதுக்குக் காரணம், என் நட்பு வட்டம்தான். அதுவும் என் மேல் நானே வைக்காத நம்பிக்கையை என் நண்பன் எஸ்.பி.பி.சரண் வெச்சான். என்னை நம்பி ஒரு படம் எடுத்தான். ‘சென்னை 28’ வெற்றி என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ருச்சு. என்னதான் திறமை, வசதி எல்லாம் இருந்தாலும், உங்களைத் தாங்கித் தூக்கிவிடுறதுக்குன்னு ஒரு ஆதரவு வேணும். அது நட்பா இருக்கலாம், குடும்பமா இருக்கலாம், அப்படி உங்களைச் சுத்தி இருக்கிற நல்ல மனசுக் காரங்ககிட்ட உங்களை முழுசா ஒப்படைங்க… எல்லாமே நல்லதா நடக்கும்!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: