Skip to content

ஹீரோவும் வேண்டாம்… கதையும் வேண்டாம்!

January 17, 2013

“இப்ப தமிழ் சினிமாவின் டிரெண்ட் காமெடிதான். ” ‘மனம்கொத்திப் பறவை’ அந்த டிரெண்டுல அமைஞ்சதுதான் அந்தப் படத்துக்கு மைலேஜ். இப்போ, என் அடுத்த படமும் காமெடி எக்ஸ்பிரஸ்தான்!” – இயக்குநர் எழில் இப்போது ‘தேசிங்கு ராஜா’ என்று அடுத்த காமெடி சவாரிக்கு குதிரை பூட்டுகிறார்.

 ”அஜித், விஜய்னு இயக்கிட்டு, இப்ப சிவகார்த்திகேயன், விமல்னு செட்டில் ஆகிட்டீங்கபோல?”

”சினிமால உச்சம் என்பது என்னங்க? வெற்றிதானே! ‘தீபாவளி’ ஹிட் படம்தான். ஆனா, அந்தப் படத்துக்கு அப்புறம் நாலு வருஷம் என்ன செய்றதுனு தெரியாமக் கஷ்டப்பட்டேன். நம்புங்க சார்!

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் முடிச்ச சமயமும் அப்படித்தான் இருந்துச்சு. ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படம் பள்ளிக்கூடம் படிக்கிற ரெண்டு கேரக்டர்களோட கதை. ஆனா, பெரிய ஹீரோக்கள்தான் வேணும்னு மாயையில் சிக்கி பிரபுதேவா, சரத்குமார்னு எடுத்தது ஸ்க்ரிப்ட்டையே காலி பண்ணிருச்சு. வருஷக்கணக்கா சும்மா இருந்து யோசிச்சப்பதான், ஒரு விஷயம் புரிஞ்சது. இண்டஸ்ட்ரியில் இருக்கிற ஆறேழு ஹீரோக்களும் நாலஞ்சு ஃபார்முலாக்குள் சிக்கி அதுலயேதான் தொடர்ந்து படம் பண்றாங்க. அவங்க சூழ்நிலை அப்படி. அவங்களை மட்டுமே நம்பினா, நாமளும் லாக் ஆகிடுவோம்னு தோணுச்சு. அதை உடைக்கணும்னு என் அளவில் எடுத்த முயற்சிதான் ‘மனம் கொத்திப் பறவை’.

நான் சினிமாவுக்கு வந்து 15 வருஷம் ஆகுது. ஆனா, இப்பத்தான் திறமையா இருந்தா, புது ஆட்களுக்குக்கூட நல்ல மரியாதை கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. நான் என்னை எப்பவும் ஒரு புது ஆளா நினைச்சுக்கிறேன். விஜய், அஜித் பட இயக்குநர் அடையாளம் எனக்கு வேண்டாம். ‘மனம் கொத்திப் பறவை’யே என் அடையாளமா இருக்கட்டும்!”

”இந்த அளவுக்கு நம்பிக்கை கொடுக்கிற  ‘தேசிங்கு ராஜா’ கதை என்ன?”

”ரீலுக்கு ரீல் காமெடி மட்டுமே. விமல் கேரக்டர் பேரைக் கேட்டாலே சிரிப்பு வரும்… இதயக்கனி. பிந்து மாதவிக்குப் பேரு தாமரை. படத்துக்கு ‘தாமரைக்கனி’னுதான் தலைப்பு யோசிச்சோம். அப்புறம் எதுக்குப் பிரச்னைனு விட்டுட்டோம். ‘இதயக்கனி’ங்கிறதால எம்.ஜி.ஆர். பாட்டைப் போட்டாப் போதும். கொடுத்த கடனைக் கூடத் திருப்பிக் கேட்காமப் போயிடுவான் நம்ம ஹீரோ. பிந்து மாதவி கேரக்டர், ரஜினி படத்துக்கு தியேட்டர்ல ஏறிக் குதிச்சு டிக்கெட் எடுக்கிற அடாவடி, வாலுப் பொண்ணு. சிம்பிளாவே ஜெயிக்க முடியுங்கிறப்ப எதுக்கு உலக சினிமாவில் முதல்முறையாகன்னு எல்லாம் கூவணும்?

ஆனா, அப்படி இப்படினு படத்துல ஒரு சின்னக் கதையும், சின்ன மெஸேஜும்கூட இருக்கு. ரெண்டு கிராமங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகள்தான் படம். காமெடிக் கதைன்னாலும் படத்தோட ஓப்பனிங்லயே ரெண்டு கொலை விழும். படம் முழுக்கவே தீவிரமான சண்டை நடந்துட்டே இருக்கும். அதோட தீவிரம் தெரியாம ஹீரோ ஜாலியா சுத்திட்டு இருப்பான். அவனுக்கு எந்தப் பொறுப்பும், எந்த லட்சியமும் கிடையாது. அவனுக்கு இந்த உலகத்தில் இருக்கிற ஒரே கவலை, எவனும் அவனுக்குப் பொண்ணு தராததுதான். ஒரு பொண்ணு கிடைக்காதானு அலையுற அவனைப் பழிவாங்க ஒரு ஊரே ஃபாலோ பண்ணும். நினைச்சா, முழு ஆக்ஷன் படமாவே பண்ணலாம். ஆனா, வர்ற சின்ன ஆக்ஷன் ப்ளாக்கையும் காமெடியாவே பண்ணிட்டோம்.

எவ்வளவு பெரிய பிரச்னையா இருந்தாலும் அதைப் பேசியே சரிபண்ணிடுவான் என் ஹீரோ. சுருக்கமா சொன்னா, அவன் ஒரு லூஸுப் பையன் சார்!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: