Skip to content

“தில்லு இருந்தா ஆட வாங்க!”

January 24, 2013

‘போடா போடி’ படத்தில் போல்டாக வந்த வரலட்சுமி ‘மத கஜ ராஜா’ படத்தில் விஷாலுடன் ஜோடி போடுகிறார். ‘விஷாலும் வரூவும் ரீல்ஜோடியா… இல்லை ரியல் ஜோடியா?’ என்று கோடம்பாக்கமே குறுகுறுவெனப் பார்க்கிறது.

”அப்புறம், ‘போடா போடி’ படத்துல நடிச்சதுக்கு என்ன ரெஸ்பான்ஸ்?”

” ‘போடா போடி’ ரொம்ப எனர்ஜியான என்ட்ரி. ‘அந்த ‘நிஷா’ கேரக்டர்ல நீ மட்டும்தான் நடிச்சிருக்க முடியும்’னு நிறையப் பாராட்டுக்கள் கிடைச்சது. ‘மத கஜ ராஜா’ படத்துல காலேஜ் ஸ்டூடன்ட் ரோல் பண்றேன். கலகலன்னு காமெடிதான். ஷூட்டிங் ஸ்பாட் ஜாலியா இருக்கு. பிரேக்ல சீட்டு விளையாடு வோம். ரம்மியில் என்னை அடிச்சுக்க யாராலும் முடியாது. விஷால், சுந்தர்.சி, சந்தானம் எல்லாம் என்கிட்ட தோத்துருக்காங்க. தில்லு இருந்தா ஆட வாங்க. ஒரு கை பார்க்கலாம்!”

”மிரட்டுறீங்களே..?”

”நான் அப்பிடித்தான். இந்த நகத்துக்கு பாலீஷ் போடுறது, மேக்கப் போடுறதெல்லாம் நமக்குப் பிடிக்காத விஷயம். ஸ்கூபா டைவிங், பங்கி ஜம்ப்னு பரபரப்பா இருக்கணும். கராத்தே, கிக் பாக்ஸிங்னு கலக்குவேன். ‘பையனாப் பொறக்க வேண்டியவ பொண்ணாப் பொறந்துட்டா’னு என் சொந்தக்காரங்க இப்பவும் சொல்லிச் சிரிப்பாங்க. ‘ஹாட் ஷூ’னு டான்ஸ் கம்பெனி வெச்சிருக்கேன். பரத நாட்டியம், வெஸ்டர்ன், பாலே எல்லா டான்ஸும் தெரியும். செம பிஸியா இருக்கேன். சந்தோஷம்!”

”நேர்மையாப் பதில் சொல்லணும். உங்க ப்ளஸ், மைனஸ் என்ன?”

”நடிக்கத் தெரியும்கிறது ப்ளஸ். கொஞ்சம் படபடனு வேகமாப் பேசுறது மைனஸ். சீக்கிரமே அதையும் குறைச்சுக்கிறேன். என் நேர்மை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

”சினிமா வாரிசுகளில் உங்களுக்கு யாரெல்லாம் ஃப்ரெண்ட்?”

”எல்லாரையும் தெரியும். பட், ரொம்ப நெருக்கம் கிடையாது. ஸ்ருதிஹாசனை கல்யாணம், ஷாப்பிங், ஃபங்ஷன்ல பார்த்தா ஹாய் சொல்வேன். இளையராஜா சாரோட அண்ணன் பொண்ணு வாசுகி காஸ்ட்யூம் டிசைனரா இருக்காங்க. அவங்க என் பெஸ்ட் ஃப்ரெண்ட். ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யாவும் பிஸியா இருக்க£ங்க. அதனால சமீபமாப் பேச முடியலை. இப்போ அர்ஜுன் அங்கிள் பொண்ணு ஐஸ்வர்யாவும் நடிக்க வந்துட்டாங்க. எல்லாமே நல்ல துக்குத்தான். ஆல் ஆர் வெல்கம்!”

”உங்க கூடப் பிறந்தவங்க பத்தி சொல்ல மாட்டேங்கிறீங்களே?”

”நீங்க கேட்டா எப்பவோ சொல்லியிருப்பேன். என் தங்கச்சி பூஜா நல்லா சமைப்பா. ஸ்டெல்லா மேரிஸ்ல செகண்ட் இயர் பி.காம். படிக்கிறா. இன்னொரு தங்கச்சி ரேயான்… பேஸ்கட் பால் அவளுக்கு உயிர். தம்பி ராகுல் ஸ்வீட்டான வாலுப் பையன். இப்போ நாலாவது படிக்கிறான். எல்லாம் செம சேட்டை பண்றாங்க.”

”நீங்களும் விஷாலும் லவ் பண்றீங்க. இப்போ லிவிங் டுகெதரா வாழ்றீங்கனு சொல்றாங்களே?”

”அட, ஒரே ஆளோட கற்பனையிலேயே எத்தனை நாளுப்பா குடும்பம் நடத்துறது? சினிமாவுக்கு வந்தாலே கிசுகிசு வந்துரும். அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: