Skip to content

“பார்த்தவுடனே பிடிச்சது!” – கெளதம் “பார்க்கப் பார்க்கப் பிடிச்சது!” – துளசி

January 24, 2013

லைகள் ஓய்வதில்லை… ஆம், கார்த்திக் – ராதா ஜோடி சேர்ந்து நடித்து 31 வருடங்கள் கழித்து, அவர்களின் வாரிசு அலைகள் ‘கடல்’ சேர்ந்திருக்கிறார்கள். கார்த்திக் மகன் கௌதம்… ராதா மகள் துளசி… மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ பட ஹிட்ஹாட் ஜோடி!

”என்ன… எப்போ பார்த்தாலும் லேடீஸ் ஃபர்ஸ்ட். அதான் எக்ஸாம்கள்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குறீங்கல்ல. பாவம் பசங்க… அதனால நான்தான் முதல்ல பேசுவேன்” – துளசியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பேசுகிறார் கௌதம்.

”ஊட்டி கான்வென்ட்ல படிப்பு முடிச்சுட்டு ரிசார்ட்ஸ், மாடலிங், ஸ்கூபா டைவிங் பயிற்சினு சின்னச் சின்ன வேலைகள் செஞ்சுட்டு இருந்தேன். அப்புறம் ஆர்ட்ஸ், இங்கிலீஷ் பேச்சுலர் கோர்ஸ் பண்ணேன். அதோட சைக்காலஜியும் படிச்சேன்!” என்று கௌதம் சொல்ல,

”கௌதம் அளவுக்கு எனக்கு வயசாகலை. நான் குட்டிப் பொண்ணு. மும்பையில் டென்த் படிக்கிறேன். புத்தகப் பைத்தியம். ஆனா, பாடப் புத்தகம் தவிர, மத்த எல்லாப் புத்தகத்தையும் படிப்பேன்” என்று சிரித்துவிட்டுத் தொடர்ந்தார் துளசி.

”ஒண்ணு தெரியுமா… எங்க ரெண்டு பேரையும் சேர்த்து நடிக்கவைக்கலாம்னு மணி சாருக்குத் தோணியிருக்கு. அவர் சுஹாசினி ஆன்ட்டிகிட்ட சொல்ல, அவங்க என் அம்மாகிட்ட கேட்டிருக்காங்க. அம்மா ஓ.கே. சொல்லிட்டாங்க. ஆனா, மணி சார் என்னைப் பார்க்க வந்தப்ப நான் செம குண்டா இருந்தேன். ஃபாஸ்ட் ஃபுட், மத்தி யான தூக்கம்னு வந்த வெயிட். அவ்ளோ வெயிட்டா என்னைப் பார்த்ததும் மணி சாருக்கு செம ஷாக். ‘என் படத்தில் நீ நடிக்கிறே… என்ன பண்ணுவியோ தெரியாது. வெயிட்டைக் கம்மி பண்ணு’னு சொல்லிட்டார். நானும் கஷ்டப்பட்டு வொர்க் அவுட் பண்ணி வெயிட் குறைச்சு ஸ்லிம் ஆனேன். ஆனா, ஷூட்டிங் ஆரம்பிக்க லேட் ஆகவும் வாயை கன்ட்ரோல் பண்ண முடியாம சாப்பிட்டு மறுபடி குண்டாகிட்டேன். மணி சார் திரும்ப என்னைப் பார்த்தப்போ, ரொம்ப டென்ஷன் ஆகிட்டார். பயத்துல நான் அழுதுட்டேன். திரும்ப வொர்க் அவுட் பண்ணி ரெண்டே மாசத்தில் 84 கிலோவில் இருந்து 64 கிலோவா குறைஞ்சேன். அப்புறம்தான் சார் சின்னதா சிரிச்சார்!” என்று துளசி சொல்ல, ”ஐயையோ… ஒரு குண்டம்மாகூடவா நான் நடிச்சேன்!” என்று தலையில் கை வைத்துக் கொண்டார் கௌதம். ‘வெவ்வெவ்வே’ என்று பழிப்புக் காட்டிய துளசியைக் கண்டுகொள்ளாமல் தனது ஷூட்டிங் அனுபவம் சொன்னார் கௌதம்.

”முதல் நாள் ஷூட்டிங். ஸ்பாட்டுக்கு ராதா ஆன்ட்டி வந்திருந்தாங்க. அவங்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். ஆனா, அவங்க என்னைக் கண்டுக்காம தாண்டிப் போயிட்டாங்க. ‘மேடம்… இந்தப் பையன்தான் கௌதம்’னு ஒரு உதவி இயக்குநர் அவங்ககிட்ட சொன்னதும்தான் அடையாளம் தெரிஞ்சு ஓடி வந்து கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க. அவ்ளோ பாசமான ஆன்ட்டி.

அப்புறம் துளசியைப் பார்த்து டென்ஷன் ஆன மாதிரிலாம் என்னைப் பார்த்து மணி சார் டென்ஷன் ஆகலை. என்னைப் பார்க்க வரச் சொன்னார். போய் நின்னேன். பார்த்துட்டே இருந்தார். ஏதோ யோசிச்சார். எதுவுமே பேசலை. எனக்குத்தான் செம டென்ஷனா இருந்துச்சு. அப்புறம் கதை சொன்னார். ‘நடிக்கச் சம்மதமா?’னு கேட்டதும் நான் தலையாட்டினேன். ‘ஒரு ஆடிஷன் இருக்கு. அதுல கலந்துக்கோ’னு கிளம்பிப் போய்ட்டார். நானும் அதுல கலந்துக்கிட்டேன். ஆனாலும், எந்த முடிவும் தெரியலை.

ஒருநாள் மணி சார் அப்பாகிட்ட, ‘உங்க பையனை எனக்குப் பிடிச்சிருக்கு. என் படத்தில் நடிக்கவைக்கப்போறேன்’னு சொன்னார். என்னைவிட அப்பாவுக்குப் பெரிய சந்தோஷம்!” என்று நெஞ்சில் கை வைத்துக்கொள்கிறார் கௌதம்.

”உங்க அப்பாவுக்குச் சந்தோஷம். ஆனா, என் அம்மாவுக்கு நான் மணி சார் படத்தில் நடிக்கிறதுல டென்ஷன்தான் அதிகமாச்சு. ‘ஒழுங்கா நடிக்கணும். நல்ல பேர் வாங்கணும். அம்மா, அக்கா பேரைக் காப்பாத்தணும்’னு தினமும் ஏகப்பட்ட அட்வைஸ். நான் நடிக்கப் போற சீன் பேப்பர்லாம் முன்னாடியே எனக்கு மெயில்ல வந்துரும். நான் வீட்ல நடிச்சு பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேன். அப்போ அம்மா வந்து நின்னுப்பாங்க. ‘என்கிட்ட நடிச்சுக் காமி’னு முன்னாடி உட்கார்ந்திருவாங்க. நான் வேணும்னே ஓவர் ஆக்ட் பண்ணுவேன். வசனத்தை இழுத்து இழுத்துச் சொல்வேன். ‘இப்படியே பண்ணிட்டு இருந்தா நீ வேஸ்ட்’னு சொல்லிட்டு ரொம்ப கோபமாகி எந்திரிச்சுப் போயிருவாங்க. நான் சிரிச்சுக்குவேன். தியேட்டர்ல என் நடிப்பைப் பார்க்கும்போது, அம்மாவுக்குப் பெரிய ஆச்சர்யம் காத்திருக்கு!” என்று சிரிக்கிறார் துளசி.

”அடப் பாவமே… பார்க்கப் பூனை மாதிரி இருந்துட்டு என்ன வேலையெல்லாம் பண்ணியிருக்கே” என்று துளசியின் தலையில் செல்லமாகத் தட்டிய கௌதம், ”மணி சார் படத்துல கமிட் ஆனதும், ‘எல்லாத்தையும் கத்துக்கோ. சினிமாவுல கஷ்டப்பட்டாதான் எதுவும் கிடைக்கும்’னு அப்பா ஒரே அட்வைஸ். ஜெயந்தி, பிருந்தா மாஸ்டர்கள்கிட்ட டான்ஸ், கனல் கண்ணன்கிட்ட சண்டை, கலைராணிகிட்ட நடிப்புனு செம டிரெயினிங் எடுத்துக்கிட்டேன். நிறையப் படங்கள் பார்த்தேன். மெரினா பீச்ல மீனவர்களோட கொஞ்ச நாள் சுத்திட்டு இருந்தேன். அவங்ககூடவே இருந்து கட்டு மரம் ஏறுறது, மீன் பிடிக்கிறது, பாடிலாங்குவேஜ், பேசுற ஸ்டைல்னு எல்லாம் கத்துக்கிட்டேன். அதனால் ஸ்பாட்ல டென்ஷன் இல்லாம ஜாலியா இருந்தேன்!” என்றவர், ”நீயும் நடிக்க வந்துட்ட… அதுவும் மணி சார் படத் துல அறிமுகம்னு உங்க அக்கா கார்த்திகா எதுவும் டென்ஷன் ஆனாங்களா?” என்று கௌதம் கேட்க,

”ஏன் பொறாமைப்படணும்? அவளும்தான் பாரதிராஜா சார் படம் பண்றா. ஸோ… கணக்கு டேலி. ஷூட்ல இருக்கும்போது அடிக்கடி எனக்குப் பேசுவா. ‘இன்னைக்கு என்ன ஷாட்? மணி சார் என்ன சொல்றார்?’னு ரொம்ப அக்கறையா விசாரிப்பா. ‘சார் இன்னைக்கு என்னைப் பாராட்டினாரே… தம்ஸ் அப் சைன் காமிச்சாரே’னு சொல்லி அவளுக்கு வெறியேத்துவேன். ஆனா, அவ எதுக்கும் அலட்டிக்க மாட்டா!” என்று தோள் குலுக்கியவர், ”எங்க வீட்டுல எல்லாரும் நடிக்க வந்துட்டோம். உங்க வீட்டுல எப்படி?” என்று கௌதமிடம் கேட்டார்.

”உங்க வீட்ல ரெண்டு பொண்ணுங்க. எங்க வீட்ல ரெண்டு பசங்க. தம்பி பேரு காயென். காலேஜ் சேரப் போறான். நியாயமாப் பார்த்தா நான் கார்த்திகாவுக்கு ஜோடி சேர்ந்திருக்கணும். நீயும் காயெனும் ஜோடி சேர்ந்திருக்கணும். என் தலையெழுத்து… உன்னை மாதிரி பப்ளிமாஸ்கூட ஜோடியா நடிக்க வேண்டியிருக்கு” என்று கௌதம் கண்ணடித்துச் சிரிக்க, ”உனக்கு நானே ரொம்ப ஓவர். இதுல என் அக்கா வேறயா? பிச்சுப்புடுவேன் பிச்சு” என்று கௌதம் தோளில் தடதடவென ஜாலி பாக்ஸிங் ஆடுகிறார் துளசி.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: