Skip to content

A Scene from Bhoologam

February 14, 2013

படம்: ‘பூலோகம்’

இயக்குநர்: கல்யாண கிருஷ்ணன்

இடம்: டிபன் கடை/ பகல்/ உள்புறம்

நடிகர்கள்: பூலோகமாக ‘ஜெயம்’ ரவி, சிந்துவாக த்ரிஷா.

சூழல்: எங்கோ வெளியே சென்றுவிட்டு டிபன் சென்டருக்குத் திரும்பும் சிந்து, ‘சாப்பிட வா’ என சைகை மூலம் பூலோகத்தை அழைக் கிறார். பூலோகம் கடைக்கு வருகிறார். வழக்க மான வாடிக்கையாளர்கள் சாப்பிடும் இடத்தில் அமராமல், ஃபேமிலி ரூம் போன்ற இடத்தில் அமர்கிறார். சிந்து பரோட்டா, பாயா பரிமாறு கிறார்.

பூலோகம்: எதுக்கு இவ்ளோ சீக்கிரம் சாப்பிட வரச் சொன்னே?

சிந்து: இனிமே சீக்கிரமா சாப்பிட வா. உன்னால எனக்கு காலேஜுக்குப் போக லேட் ஆகுது.

பூலோகம்: சரி… சரி… எங்கே போய்ட்டு வர்ற?

சிந்து (குரலில் குழைவு சேர்த்துக்கொண்டு): டாட்டூ வரைஞ்சுட்டு வர்றேன். உன்னோட ஒவ்வொரு பாக்ஸிங் போஸையும் என் உடம்புல டாட்டூவா வரைஞ்சுக்குவேன்.

பூலோகம்: எங்கே டாட்டூ வரைஞ்சிருக்கே?

சிந்து: அதெல்லாம் காட்ட மாட்டேன்பா…

பூலோகம்: சும்மா காட்டு.

சிந்து: எங்கே எல்லாம் இருக்குன்னு கரெக்டா சொன்னா, நானே காட்டுறேன். ஆறேழு இடத் துல உன் படத்தை வரைஞ்சிருக்கேன். எங்கேன்னு சொல்லு பார்ப்போம்?

பூலோகம்: என் படத்தை நான் பார்க்குறதுக்கு உன்கிட்ட ஏன் பெர்மிஷன் கேட்கணும்? நானே பார்த்துக்குறேன்!

சிந்துவை இழுத்துப் பிடித்து டாட்டூக்களைப் பார்க்க முயற்சிக்கிறார். சிந்து கைகளால் தடுக் கிறார்… சிரிக்கிறார். ‘வேண்டாம்’ என்றவாறு தள்ளி விலகி நிற்கிறார். பிறகு ஓடுகிறார்.

டூயட் பாடல்….   

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: