Skip to content

திஷா கேட்கும் கேள்வி

May 16, 2013
திஷா கேட்கும் கேள்வி 

‘தமிழ்ப் படம்’ மூலம் கோலிவுட்டில் நுழைந்த ராஜஸ்தான் மாடல் திஷா பாண்டே. இவரது பெற்றோர் அதிகாரம் மிக்க வேலையில் இருப்பதாலோ என்னவோ, சின்ன வயதிலிருந்தே அவரை மிகவும் கட்டுப்பாட்டுடனும், கண்டிப்புடனும் வளர்த்தார்களாம். அதனால்தான், சினிமாவில் நடிக்க வந்திருந்தாலும், இதுவரை பெரிய அளவில் எந்த கிசுகிசுவிலும் அவரை சம்பந்தப்படுத்திப் பேசும் வாய்ப்பை உருவாக்கவில்லை என்கிறார்.

2008ல் நடந்த ‘மிஸ்.நார்த் இண்டியா’ போட்டியில் வென்ற திஷாவுக்கு மாடலிங் நன்கு கைகொடுத்ததாம். நிறைய விளம்பரங்களில் தோன்றி நடித்துள்ள அவர், ‘தமிழ்ப் படம்’ மூலம் ரசிகர்களிடம் எளிதில் அடையாளம் காணப்பட்டார். இந்தியில் ‘போலோ ராம்’, தெலுங்கில் ‘மோக்ஷா’ படங்களில் நடித்தார். இப்போது மேலும் ஒரு இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். 

தமிழில் வந்த ‘மயங்கினேன் தயங்கினேன்’, ‘கீரிப்புள்ள’, ‘சிக்கிமுக்கி’ படங்கள் திஷாவை காலை வாரிவிட்டன. ஸோ, தன் எதிர்பார்ப்புகள் அனைத்தும் புஸ்வாணமாகி விட்டதால், நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டாராம். பி.ஏ ஹியூமன் ரைட்ஸ் எடுத்துப் படித்த அவர், நடிப்புக்காக படிப்பை மேற்கொண்டு தொடர முடியாத நிலையில் இருக்கிறார். 

இப்போது தமிழில் பேச கடகடவென்று கற்றுக்கொண்டு வரும் திஷா, மொழியைப் புரிந்துகொண்டு பேசினால் மட்டுமே வசனத்துக்கான அர்த்தம் தெரியும் என்கிறார். ‘மனதில் மாயம் செய்தாய்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அவர், இன்னும் இளம் முன்னணி ஹீரோக்களின் கவனம் தன் பக்கம் திரும்பாதது ஏன் என்று கேட்கிறார். விடை தெரிந்தால் சொல்லுங்களேன்.

– தேவராஜ்

 

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: