Skip to content

“சினிமாவுக்காக சினிமாவை மிஸ் பண்றேன்!”

June 1, 2013

ஊப்ஸ்… ஸ்ருதியா இது?  ‘மேக்ஸிமம்’ கவர்ச்சியுடன் மினிமம் காஸ்ட்யூமுடன் சிரிக்கிறார். எந்த ஆங்கிளில் பார்த்தாலும் ஒரு தமிழ் ஹீரோயி னுக்கு இது புது எல்லை!

”நான் போலீஸ்ல சேர்ந்திருந்தா, கமாண்டோ ஆக்ஷன் ஃபோர்ஸ் டீம்லதான் சேர்ந்திருப்பேன். எந்த ஃபீல்டில் இருந்தாலும் அதில் புது லெவல் எட்டிப் பிடிக்கணும்கிற வேகம் என் ஜீன்லயே இருக்கு. சினிமாவில்… அதுவும் ஹீரோயினா இருக்கிறப்போ, நிச்சயம் அதில் ஒரு மைல்ஸ்டோன் தொடணும். ‘மேக்ஸிம்’ பத்திரிகைக்காக அந்த போஸ் கொடுத்ததில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள். என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, என்னை நம்பினால் போதும். அப்படி போஸ் கொடுத்ததுக்கு நிறைய பாசிட்டிவ் ஃபீட்பேக்ஸ் வருது. தமிழ், தெலுங்கு, இந்தினு பல மொழிகளில் நடிக் கிறப்போ, இதெல்லாம் சகஜம்!”    

”அப்போ இனிமே தமிழ்ப் பக்கம் வரவேமாட்டீங்களா?”

”எனக்கும் ஆசைதான். ஆனா, அங்கே கமிட் ஆகியாச்சே! ‘கப்பர் சிங்’ 150 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் அடிச்சதும், என் கேரியர் நானே எதிர்பார்க்காத உயரத்துக்குப் போயிருச்சு. அடுத்தடுத்து இந்தி, தெலுங்குனு வரிசையாப் படங்கள். அப்பா நடிக்கிற ஒரு படத்தில் நடிக்கவே, கால்ஷீட் கையைக் கடிக்குது. நானே லேசா தமிழ்நாட்டை மிஸ் பண்றேன். கையில் இருக்கும் ரெண்டு இந்திப் படங்கள் முடிச்சதும் நிச்சயம் தமிழ்ல ஒரு படம் பண்ணுவேன்!”

”வரவர அழகாயிட்டே இருக்கீங்களே..?”

(வெட்கச் சிரிப்பு) ”அப்படியா? ஒருவேளை நிறையப் படங்கள்ல தொடர்ந்து நடிச்சுட்டே இருக்கும் சந்தோஷமோ என்னவோ?!”

”இதுவரை நீங்க நடிச்சதில் பிடிச்ச கேரக்டர் எது?”

”இப்போ ரவிதேஜாவுடன் காமெடிப் படம் ஒண்ணு பண்றேன். அந்தக் கேரக்ட ரைப் பார்த்தா, ‘ஸ்ருதி இவ்ளோ ஹ்யூமர் பண்ணுவாளா?’னு ஆச்சர்யப்படுவீங்க, ஆனா, ‘3’ பட ஜனனி மாதிரியான கேரக்டர் அபூர்வமாகத்தான் கிடைக்கும். ஒரே படத்தில் ஸ்கூல் பொண்ணு, ஹவுஸ் வொய்ஃப், விதவைனு ரொம்ப சீக்கிர மாவே எனக்குக் கிடைச்ச லைஃப்டைம் கேரக்டர் அது. இன்னும் நான் எத்தனை படங்கள் நடிச்சாலும் ‘3’ எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்!”

”உங்க தங்கச்சி அக்ஷராவும் நடிக்க வருவாங்களா?”

”இதை அவகிட்டதான் கேக்கணும். உங்களைவிட அவ நடிப்பைப் பார்க்க நான் ஆர்வமா இருக்கேன். அவ சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்படற முதல் ஆள் நான்தான். ஏன்னா, நாங்க சாப்பிடற சாப்பாட்டுல இருந்து போட்டுக்கிற டிரெஸ் வரை எல்லாமே சினிமா கொடுத்ததுதானே? ஒரு நடிகை ஆனதுக்கு நான் பெருமைப்படறேன். அதே மாதிரி அக்ஷராவும் நடிக்க வந்தா, நல்லா இருக்கும்!”

”இப்ப வர்ற தமிழ்ப் படங்கள் பார்க்கிறீங்களா?”  

”இல்லைங்க… எந்தப் படமும் பார்க்கலை. ஒரு நிமிஷம்கூட ரெஸ்ட்டா உட்கார முடியலை. சினிமாவுக்காக சினிமாவை மிஸ் பண்றதும் சந்தோஷமாத்தான் இருக்கு!”

”திடீர்னு ஐ.பி.எல். பார்க்க வந்துட்டு சாக்ஷி, டோனி, ரெய்னா கூட செம லூட்டி அடிக்கிறீங்களே?”

”நான் எப்பவுமே சி.எஸ்.கே. ஆள்தான். சாக்ஷி ரொம்ப ஃப்ரெண்ட்லி. டோனி டவுண் டு எர்த் நண்பர். சாக்ஷியுடன் இருந்தா நேரம் போறதே தெரியாது. செம ஜாலி கிரிக்கெட் பார்க்கிறதுல!”

”சித்தார்த்துக்குக் கல்யாணமாமே?”

”இல்லைங்க. மத்தவங்க லைஃப் பத்திக் கேட்கக்கூட நேரம் இல்லை. நான் பிஸியா இருக்கேன். என்னை விட்டுடுங்க!”

 

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: