Skip to content

Actress Sana Khan’s Interview in Tamil Magazine Kalki

June 11, 2013

ஃபர்ஸ்ட் லவ் பிரேக்அப் ஆயிடுச்சு!

 

ராகவ் குமார்

சில்க் ஸ்மிதா இறந்தபோது நான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தேன். சில்க் இன்னும் என் நினைவுகளில் இருக்கிறார். ‘நடிகையின் டைரி’ படத்தில் நான் மிக நேசித்த காதலனே, என்னைக் கொல்ல வரும் காட்சியில் நடிக்கும்போது சில்க்கை நினைத்து நிஜமாகவே அழுதுவிட்டேன். நடிகையின் வாழ்க்கை என்று பத்திரிகைகளில் வரும் செய்திகளில் உண்மையும் பொய்யும் கலந்துதான் இருக்கும். நமக்குத் தெரிந்த உண்மையைச் சரியாகச் சொன்னவிதத்தில் நடிகையின் டைரி சக்ஸஸ் டைரி” என்கிறார் சானா கான். ‘நடிகையின் டைரி’ என்கிற படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை. அதில் சில்க்காக நடித்தவர் சானாகான்.

நடிகையின் டைரியில் வருவதைப்போல, சில நடிகைகள் திருமணமான ஆணை விரும்புகிறார்களே?

நடிகை மட்டுமில்லை. எந்தப் பெண்ணும் திருமணமான ஆணை நேசிப்பதும் திருமணம் செய்து கொள்வதும் தவறு. நம் கலாசாரத்துக்கு எதிரானது. வாழ்க்கையைப் பற்றிய பயம், தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும். அது அந்த ஆணின் குடும்பத்துக்குச் செய்யும் துரோகம்.”

இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்த நீங்கள், சினிமாவில் நுழைந்தது எப்படி?

என் அம்மா எனது திறமை மீதும், நான் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கும் என்று என்மீதும் நம்பிக்கை வைத்ததால் நான் சினிமாவுக்கு வந்தேன். தவிர, இங்கே யாரும் யாரோட திறமையையும் திருடிட முடியாது.”

மதம் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதா?

மதம், மொழி போன்றவை பல நல்ல விஷயங்களைச் சொல்லலாம். ஆனால் மதம், இனம், ஜாதி, நிறம் பெண்களின் வளர்ச்சிக்குத் தடை போடும்போது, அதை எதிர்த்துப் போராடி வளர வேண்டும்.”

சில நாட்களுக்கு முன்பு வடஇந்திய நடிகைகளைவிட, தென்னிந்திய நடிகைகள் அதிக அளவில் குடிக்கிறார்கள் என்றீர்களே?

இப்படி ஒரு ஸ்டேட்மென்ட்டை நான் சொல்லவேயில்லை. மும்பை, தில்லி போன்ற வடஇந்திய நகரங்களில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதைப் போலவே சென்னை, பெங்களூரிலும் உள்ளது என சொல்லியிருந்தேன். இது மோசமான விஷயம். ஆனால், நான் நடிகைகளை கம்பேர் செய்து சொன்னதாகத் தவறாகப் பத்திரிகைகளில் செய்தி பரப்பிவிட்டார்கள்.”

விட்டுக்கொடுத்தால்தான் சினிமாவில் வர முடியுமா?

விட்டுக்கொடுப்பதும், விட்டுக்கொடுக்காததும் அவரவர் இஷ்டம். ஆனால், நான் எதையும் விட்டுத் தரவில்லை. அதனால் கெட்டுப்போகவும் இல்லை.”

இப்படி படபடன்னு பேசுறீங்களே? யாராவது உங்களை லவ் பண்ணுவாங்களா?

ஏன் பண்ண மாட்டாங்க. காலேஜ் படிக்கும்போது நானும் ஒரு பையனும் லவ் பண்ணோம். நான் சினிமாவுக்கு வந்ததால லவ் பிரேக்-அப் ஆயிடுச்சு. ஒருதடவைதான் காதல் பூக்கும்ன்றதில எனக்கு நம்பிக்கை இல்லை. சரியான ஆளைப் பார்த்தா மறுபடியும் காதல் பூக்கும்.”

தமிழில் அடுத்த படம்?

சல்மான்கானின் மெண்டல் படத்தை முடிச்சிட்டு மறுபடியும் சென்னைக்கே பறந்து வந்துடுவேன். சென்னை மக்காஸ் ஐ மிஸ் யூ”.

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: