Skip to content

வெடிக்கும் விஜய்

June 12, 2013
வெடிக்கும் விஜய்
 

கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது பிறந்த​நாள் விழாவுக்கு அனுமதி மறுத்து, அவரை அரசியல் பாதையை நோக்கி இழுக்க ஆரம்பித்​துள்ளனர். விஜய்யை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். 

”என்னாச்சு?”

”எனக்கு சமூக அக்கறை உண்டு. என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கும் அதே உணர்வு இருக்கிறது. ஏழைக் குழந்தைகளைப் படிக்க​வைப்பது, பெண்களுக்குத் திருமணம்​செய்துவைப்பது, வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவிசெய்வது, ரத்ததானம் செய்வது என்று பல நல்ல காரியங்களை செய்துவருகிறேன். இனியும் செய்வேன். என் ரசிகர்களும் என்னைப் போலவே உதவிகள் செய்கிறார்கள்.

பிறந்தநாள்னா நான் மட்டும் சந்தோஷமா இருந்தால் போதாது. ஏழைகளும் சந்தோஷமா இருக்க​ணும்னு நினைக்கிறவன் நான். அதுக்காகத்தான் ஏழை மக்களுக்குப் பயன்படுற மாதிரி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகானு மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 3,900 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்க நினைச்சேன். அந்த விழாவுக்கு மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் இடம் கேட்டோம். அவங்களும் கொடுத்தாங்க. நான் இப்படி ஒரு நல்ல காரியம் செய்றது சிலருக்குப் பிடிக்கலை. நான் சொல்லாத, பேசாத, அறிவிக்காத செய்திகளை வெச்சு, வதந்திகள் கிளப்பினாங்க. என்னோட பிறந்தநாள் விழா நடந்துடக் கூடாதுங்கிற எண்ணம்தான் அதுக்குக் காரணம். பிறந்தநாளைக்கூட நிம்மதியா கொண்டாட முடியலை. ”

”போலீஸ்தானே அனுமதி மறுத்ததாகச் சொல்கிறார்கள்?”

”என்னோட பிறந்தநாள் விழாவுக்குன்னு சொல்லித்​தான் அந்த காலேஜ்ல எங்க மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த் பெர்மிஷன் வாங்கினார். அந்த நிகழ்ச்சி என்னோட அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் போடும் கூட்டம்னு சிலர் கிளம்பிவிட்டுட்டாங்க. அதை உண்மைன்னு நம்பி கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துட்டாங்க. எங்களுக்கு வேண்டாதவங்க எங்களைப் பத்தி தப்பாதான் சொல்வாங்கனு எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் காலேஜ் நிர்வாகம் அனுமதி கொடுக்கல. காவல் துறையும் அப்படி நினைச்சுதான் அனுமதியை மறுத்துட்டாங்க போல இருக்கு.”

”அடுத்து என்ன திட்டம்?”

”என்னோட பிறந்தநாள் விழாவுக்காக மாநில நிர்வாகிகள்ல ஆரம்பிச்சு ஒன்றிய நிர்வாகிகள் வரை ராத்திரி பகல்னு பார்க்காம பலர் வேலை செஞ்சிருக்காங்க. எல்லாமே அவங்களோட சொந்தக் காசு. அந்த நிகழ்ச்சியில கொடுக்கிறதுக்காக ஆட்டோ, கம்ப்யூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டிகள், தையல் மிஷின்னு லட்ச லட்சமாப் போட்டு வாங்கிட்டாங்க. ரசிகர்களை நினைச்சாதான் எனக்கு வேதனையா இருக்கு. அவங்க செலவு செஞ்ச பணத்தை நான் திருப்பிக் கொடுத்துடுவேன். அது பிரச்னை இல்லை. ஏமாற்றம், மனவேதனைக்கு என்னால் எப்படி மருந்து போட முடியும்? இதுக்கு யார் பதில் சொல்லப்போறாங்க?”

”நீங்க எப்போ அரசியலுக்கு வரப்போறீங்க?”

”இந்தக் கேள்வியை இன்னும் கேட்கலையேன்னு நினைச்சேன். என்னோட தொழில் நடிக்கிறது. ஒரு படம் முடிச்சிட்டு அடுத்த படத்துக்கு இடையில ரெஸ்ட் இல்லாம ஓடிட்டு இருக்கேன். கடவுளும் ரசிகர்களும் என்னோட இருக்காங்க. கிடைச்ச வெற்றியை தக்கவெச்சிக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லே. அதுக்காக நான் போராடிட்டே இருக்கேன். இப்போ அரசியலைப் பத்திப் பேசக்கூட எனக்கு நேரம் இல்லைங்கண்ணா…

ஒரு விஷயம் மட்டும் நான் எல்லோருக்கும் சொல்லிக்க விரும்புறேன். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்னு பேரறிஞர் அண்ணா சொன்னார். என்னோட பிறந்தநாள் விழா நடந்திருந்தா, 3,900 ஏழைகள் சிரிச்சிருப்பாங்க. ஏழைகளோட சிரிப்பை அழிச்சவங்களுக்கு நன்றி. நான் வேற என்ன சொல்ல முடியுங்ணா!”

வெறுப்பாக சிரித்த விஜய் முகத்தில் ஆயிரம் அர்த்தங்கள்.

– எம்.குணா

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: