Skip to content

Dir Bharathi Raja on Dir Manivannan

June 15, 2013

எஸ்.குரு, சிதம்பரம்.      

”இயக்குநர், நடிகர் மணிவண்ணன் உங்களை எப்பவும் கடுமையாக விமர்சிக்கிறாரே… ஏன்?”

”இங்கே ஒரு ஃப்ளாஷ்பேக் கட் பண்றேன்… என் முதலாளி கே.ஆர்.ஜி-யும் நானும் வேலை விஷயமாக அடிக்கடி ஒரு ஆபீஸுக்குப் போவோம். அங்கே அக்கவுன்ட் செக்ஷன்ல வேலை பார்க்கிற ஒரு ஆள் என்னைப் பார்க் கிறப்பலாம் எந்திரிச்சு வணக்கம் வைப்பான். நான் அதை ஆச்சர்யமா பார்க்கிறப்ப, ‘பாரதி… உன் மேல அவன் ரொம்பப் பிரியமா இருக்காம்பா… அதான் வணக்கம் வைக்கிறான்’னு சொல்வார் கே.ஆர்.ஜி.  

கொஞ்ச நாளுக்கு அப்புறம் பார்த்தா, அந்த ஆள் யோகாம்பாள் தெருவில் நான் குடியிருந்த வாடகை வீட்டு வாசலுக்கு வந்து தினமும் நிக்க ஆரம்பிச்சுட்டான். வீட்டு வாசல்ல என்னைப் பார்க்கிறப்பலாம் வணக்கம் வைப்பான். இப்படியே ஒரு 15 நாள் போச்சு. ஒரு நாள் அவனை அழைச்சுட்டு வரச் சொன்னேன். வந்து உக்காந்தவனுக்கு உயிர் கண்ணுல இருந்தது. எதுவும் கேக்காம அவனுக் குக் குடிக்கத் தண்ணியும் கொஞ்சம் டீயும் கொடுக்கச் சொன்னேன். குடிச்சான். அவனுக் குள்ள ஏதோ ஒரு திறமை இருக்குன்னு எனக்குள்ள தோணுச்சு. ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அவனை வேலை பார்க்கச் சொன்னேன். அப்போ என்கிட்ட இருந்த பலர், ‘அவன் மூஞ்சியே சரியில்லையே’னு சொல்வாங்க. ‘போங்கடா… அவன் திறமைசாலிடா’னு ‘நிழல்கள்’ படத்துல வசனம் எழுதும் பொறுப்பை அவனுக்குக் கொடுத்து, நடிக்கவும்வெச்சேன். அவன்தான் மணிவண்ணன்.

அவனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண் காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம்.

ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், ‘அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே’னு சட்டுனு கேட்டுட்டான். அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். ‘ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா… அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்’னு அவங்க சொன்னாங்க.

ஒரு வருஷம் போனது. ‘மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க’னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான். ‘சரி’னு முடிவெடுத்து, அந்தப் பொண் ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன். அப்புறம் ‘காதல் ஓவியம்’ படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன். ‘நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்’னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.

மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு… வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும்.

ஒரு ராஜா கதை இருக்குமே… வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. ‘இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க’னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க… பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: