Skip to content

ஆர்யா நயன் கல்யாண ரகசியம்!

June 20, 2013

ராஜா ராணி… ஓர் அறிமுக இயக்குநர் இயக்கும் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறுகிறது!

ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லீக்கு வயது 26. ‘எந்திரன்’, ‘நண்பன்’ என இரண்டே படங்கள் வேலை பார்த்த அனுபவத்தோடு, தான் இயக்கும் முதல் படத்துக்கு ‘ஆர்யா – நயன்தாரா’ காம்பினேஷன் பிடித்த கில்லி. இருவருக்கும் இடையில் ‘சம்திங்… சம்திங்…’ என்று கிசுகிசு உச்சத்தில் இருந்தபோது, ‘ஆர்யா – நயன்தாராவுக்குக் கல்யாணம்’ என்று, தன் படத்துக்குப் பரபர பப்ளிசிட்டி அடித்த உற்சாகமும் உத்வேகமுமான அட்லீயுடன் பேசியதிலிருந்து…  

”பப்ளிசிட்டிதான். ஆனாலும், ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு கிளப்பிவிட்டது டூ மச்தானே?”  

”காலேஜ் சமயத்துல நாங்க ஒரு குறும்படத்தை இயக்குவதைக் காட்டிலும் அதை ரசிகர்களிடம் ரீச் பண்ணவைக்கத்தான் ரொம்ப மெனக்கெடுவோம். குறும்படத்துக்கே அப்படிப் பண்ண பழக்கம்… அதுதான் ‘ராஜா ராணி’க்கு அந்த லெவல் போகவெச்சது. ஆனா, தப்பா எதுவும் பண்ணிடலை. யார் மனசையும் வருத்தப்படவைக்கலை. இப்படி ஒரு ஐடியா க்ளிக் ஆனதுமே, நயன்தாராவுக்குத்தான் முதல் போன். தயங்கிக்கிட்டே விஷயத்தைச் சொன்னேன்… ‘அதானே கதை. அப்படியே பண்ணிடுங்க. எனக்கு டபிள் ஓ.கே!’னு சொல்லிட்டாங்க. ஆர்யாகிட்ட சொன்னப்ப, ரொம்பச் சின்னதா யோசிச்சார். ‘அதானே பிரதர் படத்தோட தீம். அப்படியே இருக்கட்டும்’னு சொல்லிட்டார். படத்தைப் பார்த்த பிறகு, அது ரொம்ப நேர்மையான புரமோஷன்னு உங்களுக்குத் தெரியும்!”  

” ‘என் சிஷ்யன் அட்லீனு ஒருத்தன் பாய்ஞ்சு வர்றான் பாருங்க’னு ‘விகடன் மேடை’யில் ஷங்கர் உங்களைப் பத்தி பில்ட் அப் கொடுத்திருக்கார். ஆனா, நீங்க ‘ராஜா ராணி’னு ஒரு காதல் கதையோடதான் வர்றீங்க?”

”ராஜா ராணி கதை கேட்டு வளர்ந்தவங்க நம்மாளுங்க. நிலாவுல ஃப்ளாட் வாங்கிக் குடியேறினாலும், அங்கேயும் கால் நீட்டிப் படுத்துட்டு ராஜா ராணி கதைதான் கேட்போம். அப்படிப்பட்டவங்களை இந்த ‘ராஜா ராணி’ ரொம்ப ஈஸியாக் கவர்ந்திடுவாங்க. ஒரு சர்ச்ல ஆர்யா – நயன்தாராவுக்குக் கல்யாணம் நடக்குது. அப்ப அவங்க மனசுல ஏதோ சஞ்சலம் இருக்கு. அவங்களோட கல்யாண வாழ்க்கையில் நஸ்ரியாவும் ஜெய்யும் வர்றாங்க. இதுக்கு மேல கதை சஸ்பென்ஸ். இதுதான் படம். காதலிச்சவங்க, காதலிக்காதவங்க, காதலிக்கிற ஐடியாவில் இருக்கிறவங்க எல்லாரையும் இந்தப் படம் ஏதோ ஒரு பதினஞ்சு நிமிஷம் டச் பண்ணும்.  

வாராவாரம் புதுப் புது படம் பார்த்தாலும் ரசிகர்கள் மனசுல டெலிட் ஆகாம இடம் பிடிச்ச படங்கள் என்னன்னு யோசிச்சேன். ‘உள்ளத்தை அள்ளித்தா’ மாதிரியான ஃபேமிலி என்டர்டெயினர்தான் சரின்னு தோணுச்சு. அதனால், இந்த சப்ஜெக்ட்டை எடுத்துக்கிட்டேன். கல்யாணம்கிறது ஒரு கசப்பான விஷயம்னு இப்போதைய இளைஞர்கள் நினைக்கிறாங்க. ஆனா, அது ரொம்ப சுவாரஸ்யமான பயணம்னு  புரிய வைக்கிற மாதிரி இருக்கும் படம்!”

”கல்யாணத்துக்குப் பிறகு ஜோடிகளை மாத்திக்கிற கதைனு நடுவுல பரபரப்பு கிளம்புச்சே?”  

”அதெல்லாம் பொய். தமிழ்க் கலாசாரத்தை மீறவோ, கெடுக்கவோ செய்யாது என் படம். நான், என் அம்மா, அக்கா, தங்கச்சிகூடச் சேர்ந்து உக்காந்து படம் பார்க்கத்தான் ஆசைப்படுவேன். இந்தப் படமும் அப்படிப்பட்ட படமாகத்தான் இருக்கும்!”

”சரி… உண்மை சொல்லுங்க. சீன் கெமிஸ்ட்ரி தாண்டி ஆர்யா – நயன்தாராவுக்கு நடுவில் எதுவும் இருக்கா?”

”சீன் கெமிஸ்ட்ரியையும் தாண்டி அவங்களுக்குள்ள ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் அவ்வளவு தூரம் நம்புறாங்க. மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்குவாங்க… உதவி பண்ணிப்பாங்க. ஆர்யாவை ‘ஜானி’னு நயன்தாரா கூப்பிடுவாங்க. ‘நயன்’னு இவர் கூப்பிடுவார். அவங்க ரெண்டு பேரும் காதலர்கள் இல்லை. ஆனா, காதலர்களிடம்கூட இல்லாத ஏதோ ஒண்ணு அவங்ககிட்ட இருக்கு!”

”ஷங்கர் கூட ரெண்டே படம்… தனியா புதுக் கடை போட அது போதுமா?”

” ‘எந்திரன்’லதான் அவர்கிட்ட சேர்ந்தேன். அவர்கிட்ட முதல் நாள் இன்டர்வியூ போனதுகூட இன்னும் ஞாபகம் இருக்கு. அவர் சினிமாவில் எனக்குக் கத்துக் கொடுத்ததுக்குக் கணக்கு வழக்கே இல்லை. ஒரு ‘எந்திரன்’ல வேலை பார்த்தது ஷங்கர் சாரோட அத்தனை படங்களிலும் வேலை பார்த்ததுக்குச் சமம். ரஜினி சாரைப் பக்கத்தில் இருந்து பார்த்தாலே, நிறையக் கத்துக்கலாம். சினிமாவில் நான் வேலை பார்க்க ஆரம்பிச்ச முதல் படத்திலேயே ரஜினி, ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான், ரசூல் பூக்குட்டினு எவ்வளவு பெரிய லெஜெண்ட்ஸ். ‘எந்திரன்’ ரஜினி டபிள் ஆக்ட்ல ஃப்ரேம்ல வராத ரஜினியா நான்தான் நிறைய சீன்ஸ் நடிச்சேன். ரஜினி சாருக்கு எதிரே நின்னுட்டு, அவர் பேசுற மாதிரி டயலாக் பேசி நடிச்சது எல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. அந்த அனுபவங்களை வெச்சுட்டே இன்னும் பத்துப் படம் பண்ணலாம்.

எனக்கு ஷங்கர் சார் அப்பா மாதிரின்னே சொல்லலாம். தாய் உள்ளத்தோட முதல் பட வாய்ப்பு கொடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் சார். ஒரே ஒரு தடவை கதை கேட்டவர், வேற எந்தக் கேள்வியும் கேக்காம, கையில் அட்வான்ஸைக் கொடுத்துட்டார். இத்தனை நல்லவங்க சுத்தி இருக்கும்போது, எனக்கு வேற என்னங்க கவலை?!’

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: