Skip to content

தீயா வேலை செய்யணும் குமாரு

June 22, 2013

காதலும் காமெடியும் தமிழ் சினிமாவின் மூத்த குடிகள். காதலியைக் கவர, ஹீரோ செய்யும் அத்தனை அசட்டுத்தனங்களும் காமெடிக்குத் தீனி. இந்தப் படத்திலும் அதே ஃபார்முலாதான். பேக் கேஜிங் மட்டும் லேட்டஸ்ட்.

குமாருக்கு (சித்தார்த்) காதல் என்றாலே அலர்ஜி. அவரையும் மயக்குபவர் சஞ்சனா (ஹன்சிகா). சஞ்சனாவிடம் தன் காதலைச் சொல்லி ஏற்க வைக்க குமார் செய்வது அத்தனையும் தகிடுதத்தங்கள். அதற்கு ஐடியா மணி வேலை செய்பவர், புரொஃபஷனல் காதல் குரு மோகியா (சந்தானம்). சித்தார்த் ஹீரோ இல்லை; சந்தானத்தை நம்பித்தானே படமே!

சித்தார்த்துக்கு சந்தானம் வைக்கும் டெஸ்டுகளில் தொடங்கி, கொடுக்கும் டிரெயினிங்குகள், போட்டுக் கொடுக்கும் திட்டங்கள் என்று காமெடி டிரீட்மென்ட் அட்டகாசம்! இரண்டாம் பாதியில் கதை கொஞ்சம் சீரியஸாகி, சந்தானம் வில்லனாவது டிவிஸ்ட். இறுதியில் ஹன்சிகா, ஆம்பிளை பசங்களை எல்லாம் ‘திருட்டுப் பசங்க’ என்று பட்டம் கொடுக்க, குஷ்பு உட்பட எல்லா நடிகர்களும் கோரஸாக ‘திருட்டுப் பசங்க, திருட்டுப் பசங்க’ என்று பாட்டுப் பாடி வாழ்த்தி அனுப்புகிறார்கள்.

சந்தானம் அறிமுக ஷாட்டில், தியேட்டரில் பயங்கர விசில். குறுகிய காலத்தில் ஹீரோ ரேஞ்சு வளர்ச்சி. இதில் அடிபட்டுப் போவது சித்தார்த்தான். பள்ளிக்கூட மாணவன் மாதிரி, ‘என்ன பாஸ் இப்படி பேசறீங்க’என்ற அப்பாவிப் பேச்சு ஹீரோவுக்கு ஆகாது! சிச்சுவேஷன் காமெடிதான், படத்துக்குப் பெரிய பலம். ஏராளமான கேரக்டர்கள். கணேஷ் வெங்கட்ராமன், தேவதர்ஷினி, வெங்கி, ஆர்ஜே பாலாஜி, வித்யுலேகா என்று ஒவ்வொருவரும் இயல்பாகவே நகைச்சுவைக்கு ரூட் போடுகிறார்கள். நலன் குமாரசாமியும் சீனியும் வரிக்கு வரி, காமெடி ரோடு போடுகிறார்கள்.

சத்யாவின் பாடல்களும் பின்னணி இசையும் அவ்வளவு இனிமை. ‘அழகென்றால்’, ‘மெல்லிய சாரல்’, ‘லவ்வுக்கு எஸ்’,‘என்ன பேச என்றே’ பாடல்கள் கட்டிப்போடுகின்றன. ஒருசில இடங்களில் ஒரு பீட்டைத் தவற விட்டு, இடைவெளி விட்டு என்றெல்லாம் சத்யா விரிக்கும் கற்பனை, பாடல்களை மெருகேற்றுகின்றன. ‘கண்களோ மன்மதக் கழக மென்றேன், இருவரிக் கவிதை தானே உன்னிதழ் ரெண்டுமென்றேன்’, ‘தேயிலைக் கண்ணைக் கண்டேன்’ – பா.விஜய் வரிகள் மிகப் புதிதாகக் கவருகின்றன. ஒருசில டான்ஸ்கள் மட்டும் சொதப்பல்.

சந்தானம் பெண்களை அழைக்கும் வார்த்தைகள் எல்லாம் கொச்சை ரகம். சிரிப்பைவிட எரிச்சலே மிச்சம். ஐ.டி. ஆண்கள் எல்லோரும் பெண்கள் பின்னால் அலைபவர்கள் என்று காட்டியிருப்பதும் என்ன லாஜிக்கோ!

இரண்டரை மணி நேரம் தொய்வில்லாமல் நான் ஸ்டாப் காமெடிக்கு திரைக்கதையே பலம். சுந்தர்.சி.யின் முந்தைய படங்களைப் போலல்லாமல், இது ஸ்டைலிஷாகவும் டிரெண்டியாகவும் இருப்பது கூடுதல் ப்ளஸ்.

தீயா வேலை செய்யணும் குமாரு – சிரிப்பு ரகளை!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: