Skip to content

Yaami Gautam’s interview in Kalki (Tamil Magazine)

July 13, 2013

சினிமா

பார்ட்டிக்குப் போகமாட்டேன்!

கார்த்தி

Here are some highlights in English:
– Dir Radha Mohan after watching Vicky Donor offered me Gouravam. I liked the character in Gouravam, so I acted in it.
– I wanted to become an IAS Officer. I was a Top rank holder in Chandigarh school.
– Next, I’m doing a movie with Nitin in Telugu. Also acting in Dir Gowtham Menon’s prestigious banner. And a Hindi movie with Dir Prabhu Deva. Sonakshi is also there.
– Even though I’m a Chandigarh gal, the South units help me with Tamil and Telugu.
– I don’t mingle with ppl easily. I don’t go to parties.
– I have done lot of TV ads.
– I really miss my Chandigarh days. Now I love my new Mumbai flat which I bought recently.
– I’m just 23 and relationships can wait for some more time.

யாமி கௌதம் – ‘கௌரவம்’ படத்தின் மூலம் ராதா மோகனால் அழைத்து வரப்பட்டவர் என்றாலும் ஏற்கெனவே விளம்பரப் படங்களில் வீட்டுக்குள் வந்த பாலிவுட் தேவதை. தேவதைகள் மென்மையாகத்தான் பேசுவார்கள்போல… யாமி உண்மையாகவே மென்மையாகப் பேசினார்…

‘கௌரவம்’ படம்?

பாலிவுட்டில் என்னோட படம் ‘விக்கிடோனர்’. அதைப் பார்த்து விட்டுத்தான் ராதா மோகன் என்னோட சில கமர்ஷியல் விளம்பரங்களையும் பார்த்துள்ளார். ‘விக்கிடோனர்’ ரிலீஸ் ஆன பின் ‘கௌரவம்’ படத்தின் கதையைச் சொன்னார். அவர் சொன்ன விதமும் என் கேரக்டரும் மிகப் பிடித்து இருந்தது. அதனால் கௌரவம் படத்தில் நடித்தேன்.”

பிடித்தது நடிப்புதானா?

என் கனவுகள் எல்லாம் ஐ.ஏ.எஸ்.தான். சண்டிகார் பள்ளியின் ரேங்க் டாப்பர் நான். மொஹாலியின் ராணுவச் சட்ட நிறுவனத்தின் என்ட்ரன்ஸில் பாஸாகி இருக்கிறேன். அதில் சட்டமும் ஒரு பாடம். படப்பிடிப்பில் ஓய்வு நேரத்தில்கூட சட்டப் புத்தகம் படிப்பேன். படிப்பு மேலே அவ்வளவு இன்ட்ரஸ்ட். ரைட்டர் காலித் ஹூசைனின் நாவலைப் படிப்பேன்.”

அடுத்து என்ன படம்?

தெலுங்கில் நிதினுடன் ஒரு படம். என்னோட லிஸ்டில் கௌதம்மேனன் டாப். அவருடைய போட்டான் கிதாஸ் பேனரில் நடிப்பது பெரிய ஹானர். அப்புறம் பாலிவுட்டில் பிரபு தேவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன். அந்தப் படத்திலே சோனாக்ஷி சின்காவும் நடிக்கிறாங்க.”

சண்டிகர் பெண் நீங்கள் தமிழ் – தெலுங்கு மொழியில் நடிப்பது சிரமமில்லையா?

மொழிகள்தான் வேற… பட் கிரியேட்டிவிட்டி எல்லாம் ஒரே மாதிரிதானே. சௌத் சினிமாவுக்கும் பாலிவுட் சினிமாவுக்கும் வேறு வேறு நிறம் கிடையாது. தமிழ் பேச கஷ்டப்பட்டது உண்மைதான். ராதாமோகன் டீம் ரொம்ப ஹெல்ப் பண்ணினாங்க.”

கதைகளை எப்படித் தேர்வு செய்யறீங்க?

‘விக்கிடோனர்’ வெற்றி மூலம் நல்ல கதைகள் வெற்றி பெறும் என்பது மீண்டும் உண்மையாகி இருக்கு. நாம செலக்ட் பண்ற கதைதான் இண்டஸ்ட்ரியிலேயே நல்ல பேரை வாங்கித் தரும். அதுக்கு ரொம்பவும் அர்ப்பணிப்போட ஒர்க் பண்ணணும். எனக்கு ஆக்டிங் பேக்ரவுண்டு கிடையாது. எந்த ஆக்டிங் ஸ்கூலும் எனக்குக் கற்றுத் தரலே. ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் எல்லாம் கத்துக்கிறேன்.”

யாமி ஜோவியலா? ரிசர்வ்டா?

அவ்வளவு ஈசியா யார்கிட்டேயும் பேச மாட்டேன். பழகிடவும் மாட்டேன். சினிமாவில் நடித்துக்கொண்டு இப்படி ஒதுங்கி இருப்பது சரியான்னு ஃப்ரெண்ட்ஸ் கேட்பாங்க. நான் என் நடிப்பை மட்டும்தான் வெளிப்படுத்த சினிமாவுக்கு வந்துள்ளேன். பார்ட்டிக்கும், பஃபுக்கும் போவதற்கல்ல. சினிமாவில் நடிப்பு நேச்சுரலாக இருக்க வேண்டுமே தவிர நிஜ வாழ்வில் நான் நடிக்க மாட்டேன். அதற்காக வரும் விமர்சனம் பற்றிக் கவலை இல்லை.”

விளம்பரம், சீரியல், சினிமா…?

முதலில் ‘மே பியார் நா யோகா’ என்ற இந்தி டி.வி. சீரியலில்தான் என்ட்டிரி ஆனேன். அதன்பின் விளம்பரங்கள். அடுத்து கன்னட படம் ‘உல்லாசா’. அடுத்து வந்த ‘விக்கிடோனர்’ நல்ல பெயர் வாங்கித் தந்தது. அது மலட்டுத் தன்மையைப் பற்றி எல்லோருக்கும் புரிய வைத்த படம். ‘ஹமாரா பஜாஜ்’ படம் நடித்தேன். இப்படி கவனமாகவே கதையைத் தேர்வு செய்கிறேன். இப்போது பிரபுதேவா இயக்கத்தில் நான் நடிக்கும் பாலிவுட் படமும் நல்ல கதைதான்.”

சண்டிகரை மிஸ் பண்றீங்களா?

உண்மைதான். சண்டிகரில் தோழிகளுடன் பள்ளி, கல்லூரி சென்ற நாட்கள், தியேட்டரில் படம் பார்த்த நாட்கள் ஞாபகம் வரத்தான் செய்கின்றன. ஆனால், மும்பையில் அந்தேரி பகுதியில் புதிதாக வாங்கியுள்ள அபார்ட் மென்ட் பெருமைப்பட வைக்கிறது.”

காதல்?

எனக்கு இருபத்து மூணு வயசு. இதற்குள் காதலா…சான்ஸே இல்லை…”

(பின்ன எந்த வயசுல காதலிப்பீங்க யாமி?)

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: