Skip to content

எல்லாம் விதிப்படிதான்…

July 20, 2013

பேட்டி

 

எல்லாம் விதிப்படிதான்…

 

விஜய் கோபால்

‘சின்ன அசின்’ என்று புகழப்பட்ட பூர்ணா இப்போதும் ஒரு கல்லூரிப் பெண் போல் காட்சி தருகிறார். இளமையில் மிளிரும் பூர்ணா, ‘தகராறு’, ‘ஜன்னல் ஓரம்’, ‘படம் பேசும்’ என ஷூட்டிங்கில் பிஸி. ‘படம் பேசும்’ படத்தில் அவரை ஒரு கால் மிதிப்பது போன்ற பரபரப்பான போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டோம்…

இப்படிப்பட்ட ‘போஸ்டர்’ பப்ளிசிட்டிக்குத்தானே?

போஸ்டர் பிளஸ்ஸா? மைனஸ்ஸா என்றால் எனக்கு பிளஸ் தான். வேறு எந்த நடிகை இந்த டிஸைன்லே நடிச்சிருந்தாலும் ஒரு டீல் இருந்திருக்கும். இந்த டிஸைன் பார்த்த பலரும் உன் எக்ஸ்பிரஷன் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு என்று சொல்றாங்க. இந்த போஸ்டர் வெளிவந்த பிறகு பாஸிடிவ்வான விமர்சனம்தான் எனக்கு வருது. என்னை மிதிப்பது யார் என்று சொல்ல மாட்டேன், சஸ்பென்ஸ்.”

‘படம் பேசும்’ படத்தில் உங்க கேரக்டர் என்ன?

அனு என்ற கேரக்டர். கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து ஐ.டி. கம்பெனியிலே வேலை பார்க்கும் பெண்ணாக நான். ஷக்திதான் நாயகன். இது எனக்கு ஏழாவது படம். இந்தப் படம் எனக்கு லைஃப். இயக்குனர் ராகவன் நல்லா இயக்கியுள்ளார். அவர் நினைச்ச மாதிரி காட்சி வரும்வரை விடமாட்டார். பெரிய பெரிய டயலாக்.”

படத்தில் ஷக்தி, சங்கர் என்ற இரண்டு ஹீரோ இருக்கும்போது நீங்க எங்கே பேசப்படுவீங்க?

இந்தப் படத்தில் இரண்டு ஹீரோக்கள் இல்லை. என்னையும் சேர்த்து மூணு ஹீரோக்கள். அந்தளவுக்கு படத்தில் எனக்கு முக்கியத்துவம் இருக்கு. படத்தில் ரொம்பவும் சேலஞ்சான விஷயம் கிளைமாக்ஸ்தான். கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஒரு காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டது. நல்ல வேளை அம்மா அன்னிக்கு ஷூட்டிங்குக்கு வரலை. வந்திருந்தா படமே வேணாம் என என்னைக் கூட்டிப் போயிருப்பாங்க. இப்படி ஒரு சேலஞ்சான கேரக்டர் கெடைச்சதில் பெருமைப்படறேன்.”

அடுத்து என்னென்ன படம் பண்றீங்க?

மலையாளத்தில் உருவான ‘மேக்கப்மேன்’ படம் கன்னடத்தில் தயாராகிறது. ‘ராதிகா கண்டு’ என்ற பெயரில் அதில் நடிக்கிறேன். தமிழில் அருள்நிதியுடன் ‘தகராறு’ ஜெயபிரகாஷோட பொண்ணா வர்றேன். அடுத்து ‘ஜன்னல் ஓரம்’ படத்தில் மெயின் கேரக்டர். நான்தான் டீச்சரா வர்றேன். விதார்த்துக்கும் எனக்கும் சரியான நடிப்புப் போட்டி. இன்னும் ரெண்டு படங்கள் பண்றேன். தெலுங்கில் ஒரு படம் பண்றேன்.”

பூர்ணா உண்மையைச் சொல்லுங்க. உங்களுக்குப் பின்னால் வந்த அமலா பால், பிற மொழிப் படங்களிலும் உயரப் பறக்கிறாரே. நமக்கு மட்டும் ஏன் என்ற ஃபீலிங் இல்லையா?

இருக்கு. பட்! நேரம்னு ஒண்ணு இருக்கே. அது வரும் போது தானா எல்லாம் அமையும். நான் யாரைப் பார்த்தும் வருத்தமோ ஏக்கமோ படுவது கிடையாது. ஏனெனில் நான் விதியை நம்புகிறவள். நடக்கும் போது நல்லது நடக்கும்.”

என்ன படிச்சிருக்கீங்க?

பி.ஏ. படிச்சிருக்கேன். மேலும் கரஸ்லே படிக்கிறேன். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கிளாஸிகல் டான்ஸ் பயின்று வருகிறேன்.”

நீங்க திடீரென ஒரு காதலரை உங்க அம்மா முன் கொண்டு போய் நிறுத்தி, இவரைக் காதலிக்கிறேன் என்று சொன்னால் அம்மா ஏற்றுக் கொள்வாரா?

எனக்கு நான்கு அண்ணன்கள். எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வோர் ஆசை உண்டு. அவர்கள் எல்லாம் வருத்தப்படுவது போல் நிச்சயம் நடந்து கொள்ள மாட்டேன். பெற்றவர்கள் மனம் வாழ்த்தினால் தான் எனது தலைமுறை நன்றாக இருக்கும் என நினைப்பவள் நான். இப்போதே காதலிக்க எனக்கொன்றும் வயசாகிடலை. நான் சின்னப் பொண்ணு. இப்பவும் அம்மா மடி தேடி உறங்கும் செல்லப் பொண்ணு. எனக்கெதற்குக் காதல்? சினிமா மட்டும் போதுமே!”

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: