Skip to content

நான் அதுக்கு சரிப்படமாட்டேன்!

August 31, 2013

சினிமா

 

நான் அதுக்கு சரிப்படமாட்டேன்!

 

விஜய் கோபால்

விஜய் டி.வி. தொகுப்பாளினி ‘ரம்யா’வுக்கு சீக்கிரம் டும்…டும்…டும்… சந்தோஷத்தில் இருந்த அவரிடம்…

எப்போ கல்யாணச் சாப்பாடு?

மும்முரமா வீட்டில் வரன் பார்த்துக்கிட்டு இருக்காங்க. சீக்கிரம் சொல்வேன் மாப்பிள்ளை யாருன்னு.”

காதல் கல்யாணம் சாத்தியமில்லையா?

என்னை மீடியாவுக்கு அனுப்பும்போதே ரெண்டு கண்டிஷன் போட்டுத்தான் அனுப்பி வெச்சாங்க. ஒண்ணு சினிமாவுக்குப் போறேன்னு வந்து நிக்கக் கூடாது. ரெண்டு காதல் கத்தரிக்காயின்னு குண்டைத் தூக்கிப் போடக்கூடாது. இந்த கண்டிஷன்களுக்கு ஒத்துக்கிட்டதாலதான் அனுப்பி வெச்சாங்க. எனக்கு 18 வயசு ஆகும்போதே தெரியும் நான் காதல் கல்யாணத்துக்கு சரிப்பட மாட்டேன்னு.”

சிவகார்த்திகேயனை மேடையில் ‘கனவுக் கண்ணன்’, ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்று ஓவரா புகழறீங்களே? ரெண்டு பேரும் சொல்லி வெச்சு செய்யறீங்களோ?

இல்லே. சிவகார்த்திகேயனை ரொம்ப நாளா தெரியும். வழக்கம்போல நடிகர் சிவகார்த்திகேயனைப் பேச அழைக்கிறேன்னு சொல்றதவிட ‘யங் சூப்பர் ஸ்டார்’, ‘இளம் நாயகர்’, ‘கனவுக் கண்ணன்’ இப்படிச் சொல்றதைத்தான் ஜனங்க ரசிக்கிறாங்க… கை தட்டுறாங்க. தனுஷ் ஃபங்ஷன் முடிஞ்சு ‘இந்த மாதிரியே பண்ணுங்க’ என்றார்.”

சிவகார்த்திகேயனைப் பார்க்கும்போது நாமும் நடிகை ஆகியிருந்தா இப்படிப் புகழின் உச்சியில் போயிருக்கலாம்னு மனசு ஏங்குதா?

இல்லவே இல்லை. அவரு அடித்தளத்தில் இருந்து வந்தவர். 6 வருஷமா அவரைப் பார்க்கிறேன். அவர் உழைப்புதான் அவரைப் புகழுக்குக் கொண்டு போயிருக்கு. எனக்கு ஒண்ணும் ஃபீலிங் இல்லை. ட்ரை பண்ணாம எப்படி ஃபீல் பண்ணலாம்?”

சமீபத்திய சிவகார்த்திகேயன் – ஹன்சிகா ஜோடி பற்றி?

போன் போட்டு, இன்னிக்கு ஓவியா. அடுத்து ஹன்சிகா, அடுத்து பிபாஷா பாசு… இப்படிப் போயிட்டே இருப்பீங்க இல்லே என்று கலாய்ச்சேன். ‘அட போங்க… முதல்லே அடுத்த படம் என்னான்னே தெரியலே’ என்றார்.”

விஜய் டி.வி.யிடம் பாவனா, அளவுக்கு உங்க நிகழ்ச்சி இல்லையே? ஒதுக்கப்படறீங்களா? ஒதுங்குறீங்களா?

நானே இப்போ அதிகம் நிகழ்ச்சி ஒத்துக் கறது இல்லே. ‘கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்’ பண்றேன். நிறைய ஸ்பெஷல் ஷோ பண்றேன். வெளிநாட்டு கலைநிகழ்ச்சி பண்றேன். இந்த வயசுக்குள் என்ன பண்ண முடியுமோ அதை செலக்ட் பண்ணி, சரியா பண்றேன். அது போதாதா?”

விஜய் டி.வி.யை விட்டு வெளியே வரவே மாட்டீங்களா?

நான்கூட 6 மாசம் கேப் விட்டேன். ஒரு தடவை திருப்பதி போயிருந்தபோது அங்கே ஒரு பெண் ‘நீங்கதானே விஜய் டி.வி ரம்யா’ன்னு கேட்டாங்க. கடவுள் சன்னிதானத்தில் நம்மை அடையாளம் தெரிஞ்சு கேட்கறாங்க. அதனால் கடவுள் விஜய் டி.வி.யிலே இருக்கச் சொல்றாருன்னு இப்போ நிகழ்ச்சி ஒத்துக்கிட்டிருக்கேன்.”

கவர்ச்சி காட்ட மறுத்து சினிமாவுக்கு வர தயங்கும் நீங்க அக்கா போன்ற வேடங்களில் நடிக்கலாமே?

நடிச்சா மெயின் ரோலில் நடிக்கலாமே. எதுக்கு அக்கா, தங்கை எல்லாம். சினிமாவுக்கு வர மாட்டேன்… வர மாட்டேன் போதுமா?”

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: