Skip to content

தன்ஷிகாவிடம் கேளுங்கள் ரசிகர் மன்றம் ரருக்கிறதா?

September 16, 2013

தன்ஷிகாவிடம் கேளுங்கள் ரசிகர் மன்றம் ரருக்கிறதா?

அன்பே! உன்னை நினைத்து, இரவெல்லாம் தூங்க முடியவில்லை. என் வாழ்க்கைத் துணையாக இருக்க, தயவுசெய்து முன்வருவாயா?
– ரவிகிருஷ்ணா, குடியாத்தம்.

முதல்ல நல்லா தூங்குங்க. அப்பதான் உடம்பு ஆரோக்கியமா இருக்கும். எந்த விஷயமா இருந்தாலும் சரி, தூங்கி எழுந்த பிறகு பேசுங்க. ஒரு தெளிவு கிடைக்கும்.
நீங்கள் நடித்ததில், உங்களுக்கு அதிக மனநிறைவு கொடுத்த படம் எது?
– எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தை என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது. டீ எஸ்டேட்டில் வேலை பார்க்கும் மரகதம் என்ற கேரக்டராகவே மாறியிருந்தேன். அப்படி மாற்றியவர், பாலா. எனக்குள் இப்படியொரு நடிப்புத்திறமை இருக்கிறது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய படம் என்பதால், ‘பரதேசி’ கேரக்டரை மறக்க முடியவில்லை.
படத்தில் நடிக்க நீங்கள் வாங்கிய முதல் சம்பளத்தில், என்ன வாங்கினீர்கள்?
– வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

சில வருடங்களுக்கு முன், ‘பேராண்மை’ படத்தில் நடிக்க நான் வாங்கிய தொகை நாலரை லட்ச ரூபாய். அதில் என் அப்பாவின் அம்மா, அதாவது, எனது பாட்டி சேசு மேரிக்கு தங்கத்தில் கம்மல் வாங்கிக் கொடுத்தேன். அவரை எனக்கும், என்னை அவருக்கும் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் அவர் காலமாகி விட்டார். ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக்கு.
உங்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கிறதா? அப்படி அமைக்க முன்வந்தால், அனுமதி கொடுப்பீர்களா?
– எச்.இஸ்மாயில், நெல்லை.

சேலத்தில் சுபா, சிதம்பரத்தில் ரமேஷ் என, ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரத்திலும் எனக்கு ரசிகர் மன்றங்கள் வைத்து இயங்குகிறார்கள். நான் நடித்த படம் ரிலீசாகும்போது, ஆங்காங்கே நற்பணிகளும் செய்கிறார்கள். யாருக்கும், எந்த சிரமமும் கொடுக்காமல் இயங்கும் ரசிகர் மன்றங்கள் என்றால், அனுமதி கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை.
ரசிகர்கள் உங்களுக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால், எந்த முகவரியை தொடர்புகொள்ள வேண்டும்?
– ஜி.மகேஷ், வேலூர் – 6.

dhan.shikaa20@gmail.com என்ற மெயிலுக்கு கடிதம் எழுதுங்கள். நல்ல கடிதங்களுக்கு உடனே பதில் கிடைக்கும்.
‘மாஞ்சா வேலு’ ஷூட்டிங்கில் பிகினி உடையணிந்து நடித்தபோது, அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்களே என்று மனம் கூசவில்லையா?
– ஜோசப், கடலூர்.

அந்த ஷூட்டிங் நடந்த இடம், பாங்காக். அங்கிருந்த எல்லா இளம் பெண்களும் இதுபோன்ற உடையில் தோன்றி, கடலிலும், கடற்கரையிலும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாம் ‘என்ன இந்தப் பெண், இவ்வளவு அதிகமாக உடையணிந்து இருக்கிறாள்’ என்று என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். நீங்கள் என்னவென்றால் இப்படி கேள்வி கேட்கிறீர்களே.
தமிழ்நாட்டில் இருக்கும் ஏதாவது ஒரு அரசியல் கட்சி, தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்தால் செல்வீர்களா?
– லூர்து, திருப்பத்தூர்.

ஏற்கனவே இரண்டு கட்சிகள் என்னை தேர்தல் பிரசாரம் செய்ய அழைப்பு விடுத்தன. ஆனால், அரசியலைப் பற்றி ஆனா… ஆவன்னா கூட எனக்குத் தெரியாது என்பதால், உடனே அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
அழகுச்சிலையே! உங்களுக்கு நான் சேலை கட்டிவிட ஆசைப்படுகிறேன். அனுமதிப்பீர்களா?
– ஏ.பாஸ்கர், கோவை.

ஹலோ… சினிமா நடிகை என்றால், என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்பீர்களா? கொஞ்சம் அமைதியாக இருங்கள்.
 நீங்கள் யாரிடம் பொய் பேசுவீர்கள்?
– ஜி.நிரஞ்சனா, சென்னை – 44.

சிறுவயதில் எதற்கெடுத்தாலும் பொய் பேசியிருக்கிறேன். நன்கு வளர்ந்த பிறகுதான், அது எவ்வளவு பெரிய தவறு என்பதைப் புரிந்துகொண்டேன். என் பாட்டி இறந்த பிறகுதான் அதை இன்னும் தெளிவாக உணர்ந்தேன். இன்று இருப்போர் நாளை இருப்பதில்லை. உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை. எனவே, இருக்கும்வரை நல்லது செய்து வாழ வேண்டும். உண்மையை மட்டுமே பேசி, யாருக்கும் எந்தவித சிரமமும் கொடுக்காமல் உலகை விட்டு அகல வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.
 உதட்டுடன் உதடு இணைத்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்து, என் ஆசையைத் தீர்த்து வைப்பீர்களா?
– நீலேஷ், சென்னை – 8.

ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போது நான் போடும் முதல் கண்டிஷன் என்ன தெரியுமா? ‘நோ கிஸ்சிங் சீன்’. ஸோ, உங்கள் ஆசை நிராசைதான்.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: