Skip to content

தன்ஷிகாவிடம் கேளுங்கள்

September 23, 2013

தன்ஷிகாவிடம் கேளுங்கள்

உண்மையிலேயே நீங்கள் யாருக்கு பயப்படுவீர்கள்?
– சுமதி ரவிச்சந்திரன், பாண்டிச்சேரி.

முதலில் இந்த உலகைப் படைத்த கடவுளுக்கு பயப் படுவேன். அடுத்து என் பெற்றோருக்கு பயப்படுவேன். காரணம், அவர்கள்தான் என்னை உருவாக்கியவர்கள். மற்றவர்களைப் பார்த்து பயப்பட்டால், அது வெறும் நடிப்பாகத்தான் இருக்கும்.

மறைக்காமல் சொல்லுங்கள், யாரைப் பார்த்து நீங்கள் ‘ஜொள்ளு’ விட்டிருக்கிறீர்கள்?
– கண்ணன், கன்னியாகுமரி.

ஒன்றா, இரண்டா, வரிசைப்படுத்திச் சொல்ல? எங்காவது வெளியிடங்களுக்குச் செல்லும்போது, கம்பீரமாக இருக்கும் ஆணைப் பார்த்தால், மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்பது வழக்கம். அதை ‘ஜொள்ளு’ லிஸ்ட்டிலா சேர்ப்பீர்கள்?

 இதுவரை எந்த ஹீரோவாவது உங்களிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லியிருக்கிறாரா?
– குணசேகரன், தரணம்பேட்டை.

இதுவரை அதுபோன்ற ஒரு சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது இல்லை. இனி எப்படி என்று தெரியவில்லை.

நீங்கள் காதலுக்கு மரியாதை கொடுப்பீர்களா?
– எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

கண்டிப்பாகக் கொடுப்பேன். காதல் என்பதே மரியாதையான ஒரு விஷயம்தானே?

உங்கள் குடும்பத்தைப் பற்றி பதில் சொல்லும்போது, அம்மாவைப் பற்றி விட்டுவிட்டீர்களே, என்ன காரணம்?
– அம்சவேணி, மதுரை.

காரணத்தை வெளியே சொல்ல முடியாது. அது ரொம்ப ரொம்ப பெர்சனல்.

திரையுலகில் உங்களுக்கு போட்டி நடிகையாக யாரை நினைக்கிறீர்கள்?
– கிருஷ்ணன், பொள்ளாச்சி.

எல்லா நடிகைகளையும்தான் நினைக்கிறேன். போட்டி என்ற ஒன்று இருந்தால்தான், ஏற்றுக்கொண்ட செயலில் ஜெயிக்க முடியும். அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். அதற்காக, என்னுடன் நடிப்பவர்களை எல்லாம் போட்டியாக நினைத்துக் கொண்டிருக்க முடியாது. நான் நானாகவும், என் திறமையை மட்டும் முழுமையாக நம்புபவளாகவும் மட்டுமே இருப்பேன்.

யாருடைய காமெடி உங்களுக்கு பிடிக்கும்? நீங்கள் காமெடி வேடத்தில் நடிப்பீர்களா?
– முருகேசன், திருத்துறைப்பூண்டி.

வடிவேலுவின் காமெடிக்கு நான் தீவிர ரசிகை. தினமும் அவரது காமெடி சீன்களை டி.வியில் பார்த்து ரசித்த பிறகுதான் தூங்கச் செல்வேன். இப்போது சந்தானத்தின் காமெடிக்கு நான் அதிபயங்கர ரசிகை. அவருடன் ‘யா யா’ படத்தில் நடித்திருக்கிறேன். முதல்முறையாக நான் காமெடி செய்யும் அல்லது காமெடி செய்ய முயற்சித்துள்ள படம், ‘விழித்திரு’. இப்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருக்கிறது.

நான் உங்கள் கன்னத்தில் முத்தமிடுவது போல் கனவு கண்டேன்! பலிக்குமா டார்லிங்?
– செல்வநாயகம், சென்னை – 6.

கனவு என்பதே மாயைதான். கனவு வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். (ரசிகர்களே, இதற்கு நான் வேறுவிதமாக பதில் சொல்வேன் என்று எதிர்பார்த்தீர்களா? நடிகை என்றால், அதிக உரிமை எடுத்துக்கொண்டு கேள்வி கேட்கலாம் என்று நினைத்து விடாதீர்கள். ப்ளீஸ்.)

உங்கள் ‘செக்ஸ் அப்பீல்’ எது?
– அந்தோணி, திருச்செந்தூர்.

கண்கள் வசீகரிக்கின்றன என்றும், உதடுகள் பரவசப்படுத்துகின்றன என்றும் மற்றவர்கள் சொல்கிறார்கள். எனக்கும் அதே கருத்துதான்.

ஹாய் தன்ஷ்! முதல் பார்வையிலேயே ஒரு பெண்ணின் மனதைக் கொள்ளையடிக்க முடியுமா?
– வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

முடியும். ஆனால், முதல் கோணல் முற்றிலும் கோணலாக ஆகிவிடக் கூடாது. அதனால், பெண்ணை சரியாகக் ‘கண்’காணிக்க வேண்டும்.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: