Skip to content

என்னோட மனசுல அஜித் இருக்கார்…

October 7, 2013

என்னோட மனசுல அஜித் இருக்கார்…

 Print Bookmark My Bookmark List

 

‘‘சந்தைக்கு போகணும்… ஆத்தா வையும்… காசு கொடு’’ என்று ‘16 வயதினிலே’ கமல் போல அடுத்தடுத்த ஷூட்டிங், லொகேஷன் சேச் என அவசரம் காட்டிக்கொண்டிருக்கிறார் நஸ்ரியா. அவரை சந்திக்கச் சென்றபோது ‘‘ஃபிளைட்டுக்கு நேரமாச்சு… ஈவினிங் போன்ல பேசலாமே’’ என செல்லமாக சிணுங்க, வழிவிட்டு நின்று மாலையில் போனிலேயே கடலை வறுத்தோம்.

‘‘ ‘நய்யாண்டி’ ஷூட்டிங்குக்காக கோவா வந்திருக்கேன். அதான் காலையில பேச முடியல. இப்போதான் தனுஷுடன் கப்பலில் காதல் பண்ணிட்டு ஃப்ரீ ஆனேன். படத்தில நான் பல் டாக்டரா வர்றேன். சூப்பரான கேரக்டர். தனுஷோட நடிச்சது வெரி நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சிருச்சு. இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறேன். ஆமா… ‘ராஜா ராணி’ செம ஹிட்டாம்ல. நிறைய போன்கால் வந்துச்சு. படத்தோட சக்ஸஸ் மீட்லகூட என்னால கலந்துக்க முடியல. நிஜமாவே அவ்வளவு பிஸியா இருக்கேன்’’ – நஸ்ரியாவின் கொஞ்சல் குரலில் தென்படுகிறது உண்மை.

பல் டாக்டரா நடிக்கிறீங்களே… உங்க சின்ன வயசு ஆசை டாக்டரா? ஆக்டரா?
‘‘எதுக்குமே ஆசைப்படாமதான் இருந்தேன். கிளாசிக் டான்ஸ், சுமாரா பாடுறது, நேரம் இருக்கும்போதெல்லாம் தமிழ் படம் பார்க்குறது, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு கேட்கிறதுன்னு என்னைச் சுத்தி ஏதோ ஒரு உருவத்தில் கலை இருந்துட்டே இருந்துச்சு. 

அதனாலதான் இங்க என்னை கொண்டுவந்து சேர்த்திருக்கார் போல கடவுள். தமிழில் ‘நய்யாண்டி’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படங்கள் ரிலீஸ் பாக்கி இருக்கு. மலையாளத்தில் மம்முட்டி மகன் பாசில் ஜோடியா ஒரு படத்திலும், நிவின் பாலி ஜோடியாக ‘ஓம் சாந்தி ஓசானா’ படத்திலும் நடிச்சிட்டு இருக்கேன். ‘நேரம்’ படத்தைத் 
தொடர்ந்து நிவினும் நானும் திரும்பவும் ஜோடி சேரும் இந்தப் படத்துக்கு ஜூட் ஆண்டனி டைரக்ஷன்.’’

நல்லா தமிழ் பேசுறீங்களே?
‘‘தேங்க்ஸ். ‘ராஜா ராணி’லகூட என் சொந்தக் குரல்லதான் பேசியிருக்கேன். நல்லாயிருந்துச்சா? தொடர்ந்து வாய்ப்பு கிடைச்சா நானே டப்பிங் பேசுவேன். பாட வாய்ப்பு கிடைச்சாலும் ரெடி. ம்… பாட்டுன்னு சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. ‘சொந்தக் குரலில் பாட ரொம்ப நாளா ஆசை ’ன்னு பாடின ஷாலினிதான் எனக்குப் பிடிச்ச நடிகை. ஷாலினி மாதிரியே ஹோம்லியா நடிக்கத்தான் ஆசை. கிளாமர் டிரஸ் போட்டு நடிக்கமாட்டேன். அப்புறம், சின்ன வயசிலிருந்தே நான் அஜித் ரசிகை. அவர் நடிச்ச படங்களை ஒண்ணு விடாம பார்த்திடுவேன். அவரோட சேர்ந்து நடிக்கிற வாய்ப்புக்காக ஆசையா காத்திருக்கேன். அவரை நேர்ல பார்த்து, ‘நான் உங்க ரசி கை’ன்னு சொல்ற நாள் கூடிய சீக்கிரம் வரும்னு நினைக்கிறேன். எனக்குப் பிடிச்சவங்க ரெண்டு பேருமே கணவன் – மனைவியா இருக்காங்க. வெரி லக்கி கப்பிள்!’’

நடிகைகளில் யார் உங்களோட க்ளோஸ் பிரண்ட்?
‘‘க்ளோஸ் ஃபிரண்டுன்னு யாருமே இல்லை. நடிகையா மட்டும் பலரையும் தெரியும்… அவ்வளவுதான்! ‘ராஜா ராணி’யில்கூட நயன்தாராவோட காம்பினேஷனில் நான் நடிக்க சந்தர்ப்பம் இல்லை. அதனால அவங்களும் எனக்கு அவ்வளவா பழக்கமில்ல. நடிப்பைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். யார்கூடவும் என்னை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பல. இந்தியில் சில கதைகள் கேட்டிருக்கேன். விரைவில் பாலிவுட்டில் நடிக்கலாம். இப்பவும் சொல்றேன்… இந்திப் பட வாய்ப்பைவிட ‘தல’ ஜோடியா நடிக்கிற வாய்ப்பைத்தான் பெரிசா நினைக்கிறேன்… பார்க்கலாம்!’’

உங்களுக்கும் ஆர்யாவுக்கும் பிரச்னையா?
‘‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே. ஏன் கேக்கறீங்க?’’
மூட் அவுட் ஆனா நஸ்ரியா மூஞ்சிய தூக்கி வச்சிக்கும்னு சொல்லியிருக்காரே?
‘‘ஓஹோ… அது உண்மைதான். உள்ள ஒண்ண வச்சிக்கிட்டு வெளில ஒண்ண காட்டுற ஆளு நான் இல்லை. சந்தோஷமா இருந்தாலும் கோபமா இருந்தாலும் உடனே என் முகத்தில் வெளிப்பட்டுடும். சின்னச் சின்ன காரணங்களால் ஆர்யா மேல கோபப்பட்டிருக்கலாம். ஆனா அவரு இதை சீரியஸா சொல்லியிருக்க மாட்டார்னு நினைக்கிறேன்.’’
ஆர்யாவோட நடிக்கிற நடிகைகள் அவர்கிட்ட ரொம்ப நெருங்கிடுவாங்களே?
‘‘மத்தவங்களைப் பத்தி எனக்கு தெரியாது. அதைத் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கல. அந்தப் படத்தில அவரோட சேர்ந்து நடிச்சேன்… அவ்வளவுதான்! மத்தபடி அவரைப் பத்திப் பேச என்ன இருக்கு?’’

– அமலன்    
படம்: புதூர் சரவணன்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: