Skip to content

நந்திதா நச்

October 28, 2013

நந்திதா நச்

 Print Bookmark My Bookmark List

 

‘‘பார்த்த நொடியிலேயே கவிதை எழுதத் தூண்டும் அளவிற்கு அழகா இருக்கீங்க’’ என்று நந்திதாவை வர்ணித்தால், அந்த ஈர்க்கும் தெற்றுப்பல்லோடு சிரிக்கிறார். ‘‘அப்படி எழுதறதா இருந்தா கன்னடத்தில் எழுதித் தாங்க. ஏன்னா எனக்கு கன்னடத்தில்தான் எழுதப் படிக்கத் தெரியும்’’ என்று கொஞ்சுகிற நந்திதாவின் உதடுகளில், தமிழ் தேன் கலந்து வருகிறது.

‘அட்டகத்தி’யில் அறிமுகமான நந்திதாவை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் இன்னொரு தளத்திற்கு உயர்த்தியுள்ளது. அடுத்த வருஷத்தின் ஆறாவது மாசம் வரை கால்ஷீட் டைட் 

என்கிற அளவில் பிஸியாக இருக்கிறார். ஷூட்டிங் பிரேக்கில் கேரவனுக்குள் நுழைந்தவரிடம் சினிமா என்ட்ரி பற்றிக் கேட்டோம்….
‘‘சின்ன வயசிலேயே எனக்கு சினிமா ஆசை ஒட்டிக்கிச்சு. ஸ்கூல் படிக்கும்போது எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் நான்தான் முக்கிய இடத்தில் இருப்பேன். எதிலும் முதல் ஆளா நிற்கணும், எல்லாக் 

கண்களும் என்னைப் பார்க்கணும், எல்லாரும் கை தட்டிப் பாராட்டணும்னு நினைப்பேன். இந்த ஆசைதான் நான் சினிமாவுக்கு வர்றதுக்கு அடிப்படைக் காரணம். கன்னடத்தில் ஒரு படம் பண்ணி ரிலீஸ் 

ஆன நேரத்தில் தமிழ் சினிமா மீது காதல் பிறந்தது’’ என்ற நந்திதா, நடிக்கும் படங்களை பட்டியலிடத் தொடங்கினார்.

‘‘ ‘அட்டகத்தி’ முடிஞ்ச கையோட கிடைச்ச வாய்ப்புதான் ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இந்தப் படங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டு பசங்களுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு 

கேள்விப்பட்டேன். அவங்களோட கனவுகள்ல நானும் வர்றேன்ங்கறது சந்தோஷம். ‘நளனும் நந்தினியும்’ படத்தில் குடும்பத்தை நடத்திச் செல்லும் பொறுப்பான டீச்சரா நடிக்கிறேன். ரொம்ப மெச்சூரிட்டியான கேரக்டர். ஷூட்டிங் முடிஞ்சி படம் ரிலீசுக்கு ரெடியா இருக்கு. ‘முண்டாசுப்பட்டி’யில் விஷ்ணு ஜோடியா நடிக்கிறேன். 80களில் நடக்கிற கதை. ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம் என்று தோற்றமே வித்தியாசமா இருக்கும். அப்புறம் விமல் ஜோடியா ‘அஞ்சனா’ என்கிற படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். இதிலும் ஒரு அருமையான கேரக்டர் எனக்கு வாய்ச்சிருக்கு!’’

தமிழ் நல்லா பேசுறீங்களே? 
‘‘நன்றி! (அட). இதுக்குன்னு டீச்சரோ, டியூஷனோ வச்சிக்கல. ‘அட்டகத்தி’ படத்துல நடிக்க வந்தப்ப, சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது. நான் பிறந்தது மைசூர், படிச்சது பெங்களூரு. ஆனாலும் என்னைப் 

பார்க்கிறவங்க எல்லாருமே, ‘தமிழ்ப் பெண் மாதிரியே இருக்கீங்களே’ன்னு சொல்றாங்க. கேட்டுக் கேட்டு மனசுக்கு சந்தோஷமா இருக்கு. அதான் எப்படியாவது தமிழ் பேசணும்ங்கற ஆர்வத்தில் 

கத்துக்கிட்டேன். ம்… இன்னொரு விஷயம் சொல்றேன்! பெங்களூருல பெரிய பெரிய விளம்பரங்களுக்கு டப்பிங் பேசியிருக்கேன். அடுத்த வருஷம் தமிழ்ப் படங்களில் நானே டப்பிங் பேசுவேன்னு 

நம்புறேன்!’’
யாரோட இடத்தை டார்கெட்டா வச்சிருக்கீங்க?
‘‘அப்படியெல்லாம் யாரும் யாரோட இடத்தையும் நிரப்பிட முடியாது. நானும் அப்படி ஆசைப்படல. அஞ்சு விரல்ல ஒண்ணு மாதிரி இன்னொண்ணு இருக்கா? அதுமாதிரிதான் ஒவ்வொருத்தருக்கும் ஒரு 

தனித்துவம் இருக்கும். த்ரிஷாவையும், ஜோதிகாவையும் ரொம்ப பிடிக்கும். ‘மொழி’ ஜோதிகா மாதிரி ஒரு கேரக்டர் பண்ணணும்னு ஆசைப்படுறேன். ஹோம்லி, கிளாமர் ரெண்டு ஏரியாவிலும் 

கலக்கியதால் த்ரிஷாவை பிடிக்கும்.’’
ஹோம்லி கேரக்டராவே தேர்ந்தெடுக்குறீங்களே?
‘‘ரஜினி சார் சொல்றது மாதிரி, அது நானா அமைச்சிக்கிட்டது இல்லை; தானா அமைஞ்சது. அடிப்படையில் நான் மாடலிங் துறையிலிருந்து வந்தவள். மாடர்ன் டிரஸ்ஸில் என்னைப் பார்த்தால், ‘அட… 

இது நந்திதாவா’ன்னு கேட்பீங்க. பொறுத்திருந்து பாருங்க… அடுத்த வருஷத்திலிருந்து நானும் கிளாமர்ல கலக்குவேன். அதே சமயம் எனக்கு கதையும் கேரக்டரும்தான் முக்கியம். அஜித், விஜய் படமா இருந்தா கதை கேட்க மாட்டேன். ஏன்னா அவங்க படத்தில் கண்டிப்பா கதைக்கு முக்கியத்துவம் இருக்கும். அவங்க ஜோடியா நடிக்கணும்… அந்த அளவுக்கு முன்னுக்கு வரணும் என்பதுதான் என்னோட இலக்கு!’’

 அமலன்

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: