Skip to content

ஆரம்பம்

November 8, 2013

துளசி

பல ஆண்டுகளுக்கு ஒரு படம் வந்தாலும் அஜித் மேஜிக்குக்கு மவுசு அதிகம். ஆரம்பத்தின் முதல் பாடல் தொடங்கினவுடனே, அஜித்தின் ஒவ்வொரு அசைவுக்கும் அப்படியொரு ஆரவாரம். எவர்கிரீன் மாஸ் ஹீரோவுக்கான கட்டிப்போடும் கவர்ச்சி அஜித்துக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. ‘பில்லா’வுக்குப் பின் விஷ்ணுவர்த்தனோடு மீண்டும் ‘ஆரம்பம்’ கூட்டணி அமர்க்களம்!

ஓப்பனிங்கில் மூன்று மும்பைக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டவுடனே படம் விறுவிறுப்பாகி விடுகிறது. அப்புறம் ஆர்யா, டாப்ஸியைக் கடத்தி, காரியங்கள் சாதித்துக் கொள்ளும்போது, இவர் வில்லனா? நல்லவனா? என்று லேசாக சந்தேகம் எழ, பின்பாதியில் அதற்கான ப்ளாஷ் பேக் கதையும், சுபமும்.

அஜித் ஸ்டைலுக்குப் புது டிக்ஷனரியே போடலாம். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை திரையை நோக்கி நடந்து வருகிறார் அஜித். தியேட்டரில் விசில் பறக்கிறது. பாடிலேங்குவேஜ், பேசும் முறை என்று கொள்ளை கவர்ச்சி. ஆக்ஷன் சீன்களில்கூட ஸ்டைல்.

வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால், அதைச் சரியான திரைக்கதையில் கோர்த்து வாங்கி, சலிக்காமல் திரையில் மெருகேற்றியிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். முதல் பாதியில் செம ஸ்பீட். இன்டர்வெல் வந்ததே தெரியவில்லை. இரண்டாம் பாதியில் அழுத்தம் அதிகம்.

நயன்தாரா, கிளாமரும் கேரக்டரும் பிசைந்தெடுத்த ராணிதேனீ. டாப்ஸியின் பளிச் சிரிப்பும், அசட்டுக் குழந்தைத்தனமும் சூப்பர். முதலில் அஜித்தோடு மோதிவிட்டு, பின்னர் ‘சீஃப்’ என்று குழையும் ஆர்யாவுக்கு, இயல்பாகவே நகைச்சுவை வருகிறது. அதுவும் கிராபிக்ஸில் அவரை பப்ளிமாஸாக காட்டி விட்டு, பின்னர் கச்சித ஹீரோவாகும்போது, ரசிகைகள் ரசிப்பது உறுதி.

எழுத்தாளர்கள் சுபாவின் வசனங்கள் பல இடங்களில் நச். பின்னணி இசையில் செலுத்தப்பட்ட கவனம், பாடல்களில் லேது! யுவனுக்கு என்னாச்சு? ஆர்யா, டாப்ஸியின் காதல் பாடலில் செய்யப்பட்டுள்ள கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இறக்கைகள், உற்சாகக் கற்பனை.

ஆரம்பத்தில் இருந்து துளித்துளியாகப் பேசிவந்த அஜித், கிளைமாக்ஸில் மொத்தமாகப் பேசிவிடுகிறார். கெட்ட அமைச்சரோடு நடக்கும் விவாதத்தில் அனல் பறக்கிறது. பொதுவாக மாஸ் ஹீரோ படங்களில் லாஜிக் ஓட்டைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆரம்பமும் அதற்கு விதிவிலக்கல்ல!

தம் ரசிகர்களை திருப்திப்படுத்த, அஜித் செய்திருக்கும் அத்தனை சாகஸங்களும் வீண்போகவில்லை.

அஜித் ரசிகர்களுக்கு – ஆ(ஹா)ரம்பம்!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: