Skip to content

பாக்யராஜ் பாணி படம்

December 2, 2013

பாக்யராஜ் பாணி படம் 

‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘கோரிப்பாளையம்’ படங்களுக்குப் பிறகு எம்.ஏ. ராமகிருஷ்ணன் இயக்குநர் அவதாரம் எடுத்து நடிக்கும் படம் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’. இதன் நாயகி ஆத்மியா. ஜெயப்பிரகாஷ், சென்றாயன், லொள்ளு சபா சுவாமிநாதன், இமான் அண்ணாச்சி, காருண்யா ஆகியோரும் இருக்கிறார்கள். பாடல்கள் அண்ணாமலை. இசை கண்ணன். 

‘‘ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஏனெனில் அந்தளவுக்கு படம் நல்லா வந்திருக்கு. என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் இப்போது ஹேப்பியாக இருக்கிறார். இது சென்னையில் வசிக்கும் சாதாரண பையனுக்கும் மாடர்ன் பொண்ணுக்குமான காதல் கதை. ஒரு வகையில் என்னுடைய கேரக்டரை தெருப்பொறுக்கின்னு கூட சொல்லலாம். இந்த அழுக்குப் பையனைத்தான் அழகு தேவதையாக வரும் ஹீரோயின் காதலிக்கிறார். 

ஆத்மியாவின் கேரக்டர் ‘மனம் கொத்திப் பறவை’ படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தில் தமிழ் சினிமா கவனிக்கத்தக்க வகையில் நடிப்பில் நவரசத்தை காண்பித்துள்ளார். படத்தில் ஹீரோ, ஹீரோயினுக்குப் பிறகு பலம் பொருந்திய கேரக்டரில் ஜெயப் பிரகாஷ் நடிக்கிறார். பெண்கள் மீது ஆண்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதையும், ஆண்கள் மீது பெண்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதையும் ஜனரஞ்சகமாக சொல்லியுள்ளேன். ஏனெனில் இது கற்பனைக் கதை அல்ல.

 நம்முடைய அன்றாட வாழ்க்கையைச் சுற்றித்தான் கதையை எழுதியுள்ளேன். எப்படி பாக்யராஜ், பார்த்திபன் படங்களில் நிமிடத்துக்கு நிமிடம் குறும்பும் விறுவிறுப்பும் கலந்திருக்குமோ அதுபோல இந்தப் படமும் ஜாலியாக இருக்கும்…’’ என்கிறார் எம்.ஏ.ராமகிருஷ்ணன்.

– See more at: http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=3255&id1=40&issue=20131202#sthash.YvYV2GPu.dpuf

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: