Skip to content

எனக்கு எதுக்குங்க பில்ட் – அப்?

December 24, 2013

சமீபத்தில் தமது ஆறாவது படத்துக்கும் அட்வான்ஸ் வாங்கிட்டார் என்று விஜய் சேதுபதி பற்றி லேட்டஸ்ட் நியூஸ். நின்று ஆடும் கிரிக்கெட்டர் போல, தொடர்ந்து வெற்றிகள்தான். ஆனாலும் மனுஷன் ரொம்பவும் எளிமை.

நிறையப் பேர் மேடையிலேயே உங்களைப் புகழறாங்களே?

ஆமாங்க எனக்கே ஒருமாதிரியா இருக்கு. எனக்கு எதுக்குங்க பில்ட்-அப்? நான் நடிக்கிற படங்கள் எல்லாம் ஹிட்டுன்னு சொன்னா அதுக்கு டைரக்டர்கள் தானே காரணம். அவர்கள் சொல்வதைச் செய்வதால் கிடைத்த பாராட்டுதானே.”

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் ஒரு சாவு வீட்டிலே நாயகி ஐஸ்வர்யா தன் அப்பாவை இழந்து அழுதுக் கொண்டிருக்க அவரை நீங்க சைட் அடிப்பது போல் வருதே? இது கொஞ்சம் ஓவர்தானே?

கிராமத்துப் பக்கம் போய்ப் பார்த்தீங்கன்னா. இப்படிப்பட்ட இளைஞர்களை நீங்கள் பார்க்கலாம். அவங்க சோகத்தில் இருந்தாலும் அதை ரசிக்கிற மாதிரி இளைஞர்கள் இன்னிக்கும் இருக்காங்க. இயக்குநர் ரொம்ப இயல்பாய் படமாக்கி இருப்பாரு. படம் வரட்டும் எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு பாருங்க. மனுஷனா பொறந்தா கண்டிப்பா சைட் அடிக்கணும் அப்பத்தான் உடலும் உள்ளமும் ஆரோக்கியமா இருக்கும். அதுக்கு எடம் ஒரு பிரச்னையா?”

உங்க படம் ஜெயிக்கறதுக்கு முக்கியக் காரணம் என்னன்னு சொல்வீங்க?

எப்பவும் சொல்றதுதான். கதை பண்ணிக்கிட்டு வராதீங்க. நல்ல கதையோடு வாங்க. நான் அதை உள்வாங்கிக்கிறேன்னுதான்.”

‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ இரண்டு படத்திலேயும் ‘அட்டகத்தி’ ஐஸ்வர்யாவே ஜோடி. அதன் ரகசியம் என்ன?

இதில் ரகசியம் எதுவும் கிடையாது. கிராமத்து கதைக்கு இயல்பான தோற்றம் கொண்ட நாயகி வேண்டும் என்பது இயக்குநரின் தேர்வு. மற்றபடி வேறு விஷயம் எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி, சிவாஜி-பத்மினி இவர்கள் தொடர்ந்து தொடர் ஜோடிகளாக நடித்து இருக்கிறார்கள்.”

உங்க படத்தில் வாலியோட பாட்டாமே?

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திலே கவிஞர் வாலி எழுதிய கடைசிப் பாட்டு இடம்பெற்றிருக்கு. இப்பவே ஏக வரவேற்பு அடைஞ்சிருக்கு. வாலி பாட்டு எழுதி கொடுத்ததோடு மட்டுமில்லாம பாடலின் ஒவ்வொரு வரிக்கும் அவரே காட்சி அமைப்பும் சொன்னார். நம்ம வீட்லே ஒரு வயதானவங்க ரொமான்ஸ் பண்ணுவதை நேரில் பார்ப்பதுபோல் ஃபீல் இருக்கும்.”

சினிமா கனவோடு வாய்ப்புத் தேடும் இளைஞர்களுக்கு…

வாய்ப்பு வர்றப்போ கதவை மூடிடாம கப்னு பிடிச்சுக்கணும். அப்போதான் அவுங்களுக்குள்ளே மறைஞ்சிருக்கிற திறமைகளை வெளிக்கொணர முடியும். நம்பிக்கையோடு போராடினால் நிச்சயம் ஒரு நாள் கதவு திறக்கும்.”

‘நடுவிலே கொஞ்சம் பக்கத்தை காணோம்’,‘சூது கவ்வும்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ என காமெடி படங்களாய் அமையுதே. நீங்க எப்படி காமெடிசென்ஸ் அதிகம் உள்ளவரா?

நான் எப்பவும் சீரியஸ்ஸான ஆளுதான். வீட்லேகூட ஏண்டா இவ்ளோ சீரியஸா இருக்கேன்னு கேட்பாங்க. ஆனா வந்த படங்களெல்லாம் காமெடி. கடவுள் அப்படித்தான் கொடுப்பாரு!”

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: