Skip to content

சென்டிமென்ட் பொங்கல்?!

December 27, 2013

கவர் ஸ்டோரி

 

சென்டிமென்ட் பொங்கல்?!

 

விஜய் கோபால்

ஜல்லிக்கட்டில் ஜில்லா, வீரம்

2014ல் தமிழ் சினிமா தன் ரூட்டை மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக மிஸ் பண்ண விஷயங்களை இனியும் மிஸ் பண்ணக்கூடாது என்ற நல்லெண்ணம் ஹீரோக்களுக்கும் இயக்குநர்களுக்கும்.

அதுவும் கடந்த சில ஆண்டுகளாக, அரைவேக்காட்டு நகைச்சுவை, டார்க் காமெடி, இரட்டை அர்த்த வசனங்கள் என்று ஒரே ரகளை செய்து கொண்டு இருந்தார்கள். இவை தாம் இன்றைய இளைஞர்களின் டேஸ்டு, அவர்களை தியேட்டருக்கு வரவழைத்து விட்டாலே போதும் என்பதே சினிமாக்காரர்களின் எண்ணம். அதன் உச்சம்தான் பல சினிமாக்களில் டாஸ்மாக் கொடிகட்டிப் பறந்தது. இதெல்லாம் எவ்வளவு நாளைக்குத் தாங்கும்?

முதலில் ஆதரவு தெரிவிப்பது போல் இருந்த இளைஞர்கள் இதையெல்லாம் இன்று ‘போர்’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதுதான் 2013 கடைசியில் கிடைத்த சினிமா பாடம்.

இதனால் இன்னொரு விஷயமும் மிஸ் ஆச்சு. பெண்கள் தியேட்டர் பக்கம் வருவதை முழுமையாகக் குறைத்துக்கொண்டு விட்டார்கள். மாஸ் ஹீரோ படங்களுக்குக்கூட லேடிஸ் கூட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது.

இதே நிலைதான் தெலுங்கிலும். அங்கே ஆக்ஷனும் அசட்டு நகைச்சுவையும் முன்பு கல்லா கட்டியது மாதிரி இப்போது கலெக்ஷன் ஆகவில்லை. ‘நான் ஈ’ மாதிரியான படங்களுக்கு வரவேற்பு கண்டு தெலுங்குத் தயாரிப்பாளர்கள் விழித்துக் கொண்டார்கள். அப்படியொரு படத்தை மீண்டும் மீண்டும் எடுக்க முடியாது அல்லவா? அதனால், எப்போதும் சக்ஸஸ் தரும் சென்டிமென்டைக் கையில் எடுத்துவிட்டார்கள். பவன் கல்யாண் ‘அத்தாரிக்கு தாரிது’ படம் பயங்கர ஹிட். குடும்ப சென்டிமென்ட் பிச்சிக் கொள்ளத் தொடங்கியது.

தமிழ் ஹீரோக்களும் அதே ரூட்டை இப்போது பிடித்துவிட்டார்கள். அஜித்தின் ‘வீரம்’, விஜயின் ‘ஜில்லா’ இரு படங்களும் இந்த (பழைய?) டிரெண்ட்டைப் பிடித்திருக்கின்றன.

கோட்சூட்டு, துப்பாக்கி, வெளிநாடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு அச்சு அசலாக கிராமத்தான் கேரக்டரில் தம்பிகள் மீது பாசம் காட்டும் வெள்ளந்தி மனிதராக அஜித் நடித்துள்ள படம் ‘வீரம்’. இதுவரை இப்படி உணர்ச்சிமிகுந்த வேடத்தில் அஜித் நடித்ததில்லை என யூனிட்டே பாராட்டுகிறது.

படம் முழுக்க வேட்டி, சட்டையுடன் ‘என்ன நான் சொல்றது’ என்ற டைலாக்கைப் பேசி, காலரைத் தூக்கிவிட்டு நடக்கும்போது தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும்” என்கிறார் படத்தின் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா.

எங்களின் 100வது படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும். அஜித்துக்கு ஒரு கதை தயார் செய்யுங்கள்” என்று நாகி ரெட்டி ஆபிஸிலிருந்து கேட்டார்கள். ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்துடன் ‘பாசமிகு அண்ணன் வேடம் அஜித்துக்கு’ என்றால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் சொன்ன கதைதான் ‘வீரம்’. அஜித் கதையைக் கேட்டு உள்வாங்கி நடித்தார். அவருக்காக 50 பஞ்ச் டயலாக் எழுதி வைத்திருந்தேன்.

எனக்காக பஞ்ச் டயலாக் எல்லாம் வேண்டாம். கதைப்படி நான் நடிக்கிறேன்” என்று நடித்துள்ளார். படத்தின் கிளைமேக்ஸ் நிச்சயம் எல்லோரையும் உருக வைத்துவிடும். அப்படி ஒரு சென்டிமென்ட் ஆக்ஷன் காட்சிகளுக்கு ரயில் சண்டையில் அஜித்சாரே டூப் போடாமல் நடித்து, ஆச்சர்யப்படுத்தி உள்ளார். படம் பார்த்தால் ‘தல’க்கு புதிய ஒரு மாஸ் கிடைக்கும்” என்றார்.

தமன்னா கிராமத்துக்கு வந்து ஆராய்ச்சி செய்யும் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். ‘திருமணமே வேண்டாம்’ என்று சொல்லும் அண்ணன் அஜித்தை தமன்னாவை வைத்து விதார்த், பாலா, முனிஸ் செய்யும் கலாட்டா செம காமெடி. முதல் பகுதியிலும் பின்பகுதியிலும் வில்லன்களுடன் ரயில் சண்டை என ஆக்ஷனில் கலக்கும் வேடத்தில் அவருக்கு உதவும் வேடத்தில் தமன்னா நடித்துள்ளார். தம்பிகளால் மனம் உடைந்து கலங்கும் அஜித்துக்கு தமன்னா ஆறுதல் கூறி அரவணைத்துத் தேற்றுபவராக நடித்துள்ளார்.

மதுரை ஜில்லாவுக்கு தாதாவான மோகன்லாலின் வளர்ப்பு மகன் போலிஸ் அதிகாரி விஜய். இவருக்கும் மோகன்லாலுக்கும் நடக்கும் யுத்தம்தான் கதைக்களம். இதில் அம்மா சென்டிமென்டுக்கு நீண்ட நாளைக்குப் பிறகு பூர்ணிமா ஜெயராம். தங்கை சென்டிமென்டுக்கு நிவேதிதா தாமஸ். பூர்ணிமா ஜெயராம், மோகன்லாலுக்கும் விஜய்க்கும் நடுவிலே சிக்கித் தவிக்கும் காட்சி பெண்களை ரொம்ப ஈர்க்குதாம்.

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு 5 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கும் விழாவில் விஜயிடம் ‘ஜில்லா’ பற்றிக் கேட்டபோது…

இந்தப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ரசிக்கும் படமாக இருக்கும். அரசியல் இருக்காது. குடும்பம், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ளது. மோகன்லால் உடன் நடித்தது மிகவும் ஜாலியாக இருந்தது. ஆக்ஷன் காட்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளேன்” என்றார்.

இப்படம் பற்றி இயக்குநர் ஆர்.டி.நேசன் கூறும்போது, படத்தின் முன்பாதியில் விஜய், ‘புரோட்டா’ சூரி, காஜல் அகர்வால் காமெடி மிகவும் பேசப்படும். பின் பாதியில் ஆர்.பே.கிஷோர், ரவி மரியா வில்லன்களுடன் விஜய், மோகன்லாலும் மோதும் சண்டைக் காட்சி மிகவும் பேசப்படும். இதுவரை விஜய் படத்தில் இல்லாத பிரம்மாண்டமும் சென்டிமென்டும் இப்படத்தில் இருக்கும்.

விஜய் ரசிகர்கள் என்னென்ன எதிர்பார்ப்பார்கள் என்பதைத் துல்லியமாகக் கணக்குப் போட்டு எல்லா அம்சமும் பொருத்தி எடுக்கப்பட்டுள்ளது பிளஸ்,” என்றவரிடம் ‘ ஜில்லாவில் சென்டிமென்ட்டைக் கூட்ட, ரீ-ஷூட் போனீர்களாமே?’ என்றவுடன், ‘படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலை தீவிரமாக நடக்கிறது. படத்துக்காக ரீ-ஷூட் எடுக்கப்படுகிறது என்ற செய்தியில் துளியும் உண்மை இல்லை. அது வதந்தி” என்று நாசூக்காக மறுத்தார் இயக்குநர் நேசன்.

ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, தமிழ்ப் படங்களின் முக்கிய இரண்டு ஹீரோக்களும் குடும்ப சென்டிமென்டுக்குத் தாவியிருப்பது 2014ன் ஹைலைட்! குடும்பப் பெண்களும் இனி தியேட்டர் பக்கம் நெருங்கலாம்!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: