Skip to content

ரேக்ளா ரேஸ் அஜித்!

January 9, 2014

தான் திருமணம் செய்துகொண்டால், மனைவி தன்னை தம்பிகளிடம் இருந்து பிரித்துவிடுவாள் என்ற எண்ணத்தில் கல்யாணம் செய்துகொள்ளாமலே இருப்பாராம் அஜித். ஆனால் அவரது தம்பிகளோ, காதலில் விழுந்து கல்யாணத்துக்குத் தவிக்கிறார்கள். அண்ணன் கல்யாணம்

செய்தால்தானே தங்கள் ரூட் க்ளியர் ஆகும் என்று அஜித்துக்குப் பெண் தேடுகிறார்கள். இதை லீடாக வைத்துக்கொண்டு பாசம், பங்காளி மோசம் என்று கிளை பிரியும் கதை.

 

‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ படங்களில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருவதற்கேற்ப அவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது. ஆனால், ‘வீரம்’ படம் ‘விநாயகம்’ கேரக்டருக்கு சின்ன வயது. அத்தனை சின்ன வயதிலேயே நரை முடி இருப்பதற்கான காரணத்தை ஒரு ஃப்ளாஷ்பேக்கில் விவரிப்பார்களாம்.

தினமும் யாருடனாவது வம்பு இழுத்து அடிதடி, சண்டை போடுவது ‘விநாயகம் பிரதர்ஸி’ன் வழக்கம். அதனால் போலீஸ், கோர்ட், ஜாமின், பெயில்… என்று அடிக்கடி அலைய வேண்டியிருப்பதால், வீட்டிலேயே ஒரு வக்கீலைப் பராமரிக்கிறார்கள். அந்த ‘வீட்டோட வக்கீல்’ சந்தானம்!

ரஜினி ‘முரட்டுக்காளை’யில், கமல் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் மாட்டுவண்டி ஓட்ட, அஜித் ‘வீரம்’ படத்தில் ரேக்ளா ரேஸ் விட்டு ஜமாய்த்திருக்கிறார்!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: