Skip to content

வீரம் – Vanna Thirai Review

January 20, 2014

வீரம் 

 

ஒரு படம் ரிலீசாகி வெற்றி பெற்ற 70வது நாளிலேயே அடுத்த வெளியீட்டுக்கு எந்த மாஸ் ஹீரோவும் ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால், அந்த சாதனையை அஜித் செய்திருக்கிறார். ‘ஆரம்பம்’ ரிலீசான 70வது நாள் ‘வீரம்’ வெளியாகி யிருக்கிறது. 

மார்க்கெட் வியாபாரியான அஜித் தன்னுடைய தம்பிகளை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். காதல் வலையில் வீழ்ந்தால் தம்பிகளை பிரிய நேரிடும் என்பதற்காகவே காதலையும், திருமணத்தையும் தன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைக்கிறார். ஆனால், தம்பிகள் இதற்கு நேர் எதிர். தங்கள் காதலுக்கு அண்ணன் சம்மதிக்கமாட்டார் என்பதற்காக அண்ணனிடம் சூழ்ச்சி செய்து தமன்னாவின் காதல் வலையில் விழ வைக்கிறார்கள். அமைதி விரும்பியான தமன்னாவும் அஜித்தை காதலிக்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை. 

அதகளம் செய்திருக்கிறார் அஜித். அதுவும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் பியூட்டிஃபுல். ரொம்ப நாளைக்குப் பிறகு சந்தானம் காட்டில் மழை. அவர் வந்து போகும் இடம் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலையை கேட்க முடிகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அருமை. 

சண்டை இயக்குநர் சில்வாவின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட். ஒளிப்பதிவாளர் வெற்றியின் கேமரா ஒர்க்கில் ஒட்டன்சத்திரமும் ஒயிலாக தெரிகிறது. காதல், சென்டிமென்ட், காமெடி என பேமிலி ஆடியன்சுக்கு எது பிடிக்கும், அஜித் ரசிகர்களுக்கு எது பிடிக்கும் என்னும் சூத்திரத்தை இயக்குநர் சிவா எங்கு படித்தாரோ தெரியவில்லை. நேர்த்தியாக கதை சொல்லி அனைவரையும் திருப்திப்படுத்தி இருக்கிறார்.

– See more at: http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=3399&id1=45&issue=20140120#sthash.VfFW5A7F.dpuf

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: