Skip to content

‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்!’

January 30, 2014

”இப்போ நிறைய காமெடிப் படங்கள் வருது. அப்பாகூட இருக்கும்போது பையன் சிரிக்க மாட்டான். ஆனா, ஃப்ரெண்ட்ஸ்கூட இருந்தா அவனே விழுந்து விழுந்து சிரிப்பான். இது ஒரு ஜெனரேஷன். சில ஜோக்ஸை அப்பா ரசிக்க மாட்டார். ஆனா, தன் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களையே ஸ்கிரீனில் காமெடியாப் பார்க்கும்போது விழுந்து விழுந்து சிரிப்பார். இது இன்னொரு ஜெனரேஷன். இந்த ரெண்டு ஜெனரேஷனையும் ஒரே இடத்தில் உட்கார வெச்சு, கைதட்டி சிரிக்கவைக்க முடியுமானு யோசிச்சேன். அந்த முயற்சிதான்… ‘வாலிப ராஜா’!” – தான் இயக்கும் முதல் படத்துக்கு வசீகர இன்ட்ரோ கொடுக்கிறார் இயக்குநர் சாய் கோகுல் ராம்நாத். கே.வி.ஆனந்தின் முகாமில் இருந்து வந்திருக்கும் அறிமுகம்.

”ஒரு துணிக்கடைக்குப் போறீங்க… பச்சை கலர் சட்டையும் பிடிச்சிருக்கு. நீலக் கலர் சட்டையும் பிடிச்சிருக்கு. ஏதாவது ஒண்ணுதான் எடுக்க முடியும். மனசைத் தேத்திக்கிட்டு, ஏதோ ஒண்ணை செலெக்ட் பண்ணிடுவீங்க. தியேட்டருக்குப் போறீங்க. அஜித், விஜய் படம் ரிலீஸ் ஆகிருக்கு. ஒரு படம்தான் பார்க்க முடியும். உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி ஏதோ ஒண்ணை செலெக்ட் பண்ணி படம் பார்ப்பீங்க. நீங்க வாங்காத சட்டைக்கோ, பார்க்காத படத்துக்கோ இதனால் பெருசாப் பாதிப்பு வந்துடாது. இந்த இடத்துல உங்க விருப்பம் ரெண்டு பொண்ணுங்களா இருந்து, அவங்களுக்கும் உங்களைப் பிடிச்சிருந்தா, யாரைத் தேர்ந்தெடுப்பீங்க? குழப்பமா இருக்கும்ல! அந்தக் குழப்பதைத் தீர்த்து வைக்கும் சைக்யாட்ரிஸ்ட், சந்தானம் மாதிரி ஒருத்தரா இருந்தா… கதை கலகலனு இருக்கும்ல. அதுதான் படம்!

சந்தானம்தான் ‘வாலிபராஜா’. பலரின் பிரச்னைகளைப் புரிஞ்சுக்கிட்டு தீர்வு சொல்ற மனநல மருத்துவர். சினிமாக்காரங்க படத்தோட ஒன்லைன் கேட்கிற மாதிரி, டாக்டர் சந்தானம் தன் பேஷன்ட்ஸ்கிட்ட அவங்க பிரச்னைகளின் ஒன்லைன் கேட்பார். பிடிச்சிருந்தா, ட்ரீட்மென்ட் கொடுப்பார். அப்படி சேதுவின் இந்த ‘டபுள் டிராக்’ ஒன்லைன், சந்தானத்துக்கு ரொம்பப் பிடிச்சுப்போகும். அவருக்கு உதவுவார். லோக்கல் காமெடியோட, புத்திசாலித்தனமான காமெடிகளையும் இதில் சந்தானம் பண்ணியிருக்கார்!”

”சந்தானம்னாலே பன்ச்தானே… சில சாம்பிள் சொல்லுங்க!”

” ‘உன் காதலைப் போரடிக்காமப் பாத்துக்கிட்டா, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்’, ‘ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’, ‘மாடு முன்னாடி போனா முட்டும்… ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா, ரெண்டையுமே மேய்க்கிறது ரொம்பக் கஷ்டம்’… இவை இப்போதைக்குச் சொல்லக்கூடிய உதாரணங்கள். படத்துல சிச்சுவேஷனோட பார்க்கும்போது, இன்னும் பல காமெடி அள்ளும்!”

”சந்தானம், சேது, விசாகா சிங்னு ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’னு அதே டீம்… ஹிட் ராசியா?”

”நிச்சயமா! அந்த டீம் எல்லாருக்கும் பிடிச்சது. அவங்க பண்ண காமெடியும் செமத்திய வொர்க் அவுட் ஆகியிருந்தது. அதே டீமை வெச்சு சந்தானம் சார் திரும்ப ஒரு படம் பண்ணணும்னு நிறையக் கதைகள் கேட்டார். என் கதையை செலெக்ட் பண்ணினார். சேது, விசாகா… ரெண்டு பேருக்குமே பக்கத்து வீட்டுப் பசங்க லுக். இதே மாதிரி ஒவ்வொரு கேரக்டரையும் சிம்பிளா டிசைன் பண்ணியிருக்கோம். பக்கத்து வீட்டுல நடக்கிற ஜாலி சேட்டைகளை ரசிச்சுப் பார்ப்போமே… அப்படித்தான் இருக்கும் இந்தப் படம்!”

”கே.வி.ஆனந்த் கேம்ப்ல என்ன கத்துக்கிட்டீங்க?”

” ‘அயன்’, ‘கோ’ ரெண்டு படங்கள் அவர்கிட்ட வேலை பார்த்தேன். ஒரே சமயத்துல கேமரா முன்னாடி 100 பேரைச் சமாளிக்கிற வித்தை தெரியும் அவருக்கு. எவ்வளவு பெரிய கூட்டத்தையும் ரொம்ப கூலா சமாளிச்சு, வேணும்கிற பெர்ஃபார்மன்ஸை வாங்கிடுவார். கதைக்குத் தேவையான ஷாட்களை மட்டும் எடுக்கிற கலையை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். அது எல்லா இயக்குநர்களுக்கும் அவசியம் தேவைப்படுற ஓர் ஆளுமை!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: