Skip to content

Thegidi – திரை விமர்சனம் (Kalki)

March 7, 2014

 

திரை விமர்சனம்

 

 

 

 

கார்த்தி

தெகிடி என்றால் சூதாட்டம். மனிதர்கள்மீது கேம் வைத்து சிலர் ஆடும் ஆட்டம்தான் சூதாட்டமான தெகிடி. தஞ்சையில் இருந்து சென்னைக்குப் படிக்க வரும் வெற்றி (அசோக் செல்வன்) எம்.ஏ. கிரிமினாலஜி துறையைத் தேர்வு செய்து படிக்கிறார். படித்து முடித்தபின் அவருக்கு சென்னையில் ஒரு தனியார் டிடெக்டிவ் அலுவலகத்தில் இருந்து வேலை வாய்ப்பு வருகிறது. வெற்றி சென்னைக்கு வருவதுபோல் படம் தொடங்குகிறது. ஆரம்பமே நல்ல எதிர்பார்ப்பு. அடுத்தது என்ன? என விழிகளை விரியவைக்கிறது. டிடெக்டிவ் கம்பெனிக்காக நான்கு நபர்களின் ஒரு மாத நடடிவக்கைகளைக் கண்காணித்து அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கிறான். அந்த நால்வரில் ஒருவர்தான் நாயகி மது என்கிற ஜனனி அய்யர். அவரைக் கண்டவுடன் காதல்கொண்ட வெற்றி நட்புடன் பழக ஆரம்பிக்கிறான். இந்தக் கதையில் திடீர் திருப்பமாக வெற்றி கண்காணித்த நால்வரில் மூவர் அடுத்தடுத்து ஆக்ஸிடென்ட்டாகி மரணிக்க…வெற்றியின் மூளை யோசிக்க ஆரம்பிக்கிறது. இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று டிடெக்டிவ் அலுவலகம் போய் கேட்க நினைக்க அங்கு அந்த அலுவலகமே இல்லை. அது பொய் என்று தெரிய வருகிறது.

அடுத்தது ஜனனி அய்யர் உயிருக்கும் ஆபத்து வரும் என்று வெற்றிக்குத் தோன்றுகிறது. அவரைக் காப்பாற்ற வெற்றியே இதன் பின்னணி என்ன? ஏன் இப்படி இவர்கள் கொல்லப்படுகிறார்கள் என இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் உடன் இணைந்து துப்பறியும் வேலையில் இறங்க… அதன்பின் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. பாதுகாப்பு இல்லாமல் நாம் எவ்வளவு பெரிய ஆபத்தான வாழ்க்கை வாழ்கிறோம் என நமக்குப் புரிய வரும்போது ஆச்சர்யப்பட வைக்கிறது. இதன் கதைகளம், அசோக் செல்வனின் துப்பறியும் நடிப்பு, ஜனனி அய்யருடன் காதல், மனிதர்கள் இறக்கும் போது காட்டும் அனுதாபம் என நல்ல வித்தியாசம்.

ஜனனி அய்யர் விழியாலே மொழி பேசுகிறார். நம்பியாக வரும் காளை நடிப்பு சூப்பர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையும் படத்துக்குப் பலம். எழுதி இயக்கியுள்ள இயக்குநர் பி.ரமேஷின் நேர்த்தியான இயக்கம் படம் முழுதும் தெரிகிறது. முடிவு முடித்திருக்கும் விதம் பாராட்ட தோன்றுகிறது.

தெகிடி – வெற்றி ஆட்டம்.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: