Skip to content

நாடகக் காதல்! (Vanna Thirai)

March 10, 2014

நாடகக் காதல்!

அச்சுத்துறை ஆரம்பிக்கப்பட்ட புதிதில் ஒரு அழைப்பிதழை அச்சடித்திருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் ‘காவியத் தலைவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அச்சடித்து கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.

 சித்தார்த், பிருத்விராஜ் வேதிகா, அனைகா, நாசர், தம்பிராமையா, சிங்கம்புலி உட்பட ஏகப்பட்ட சினிமா பட்டாளம் இதில் நடித்திருக்கிறார்கள்.  ‘அவ்வை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ புத்தகத்தை தற்செயலாக படிக்க நேர்ந்தது. அதன்பிறகு நாடகத் துறையைப் பற்றியும் அந்தத் துறையில் இருந்த ஜாம்பவான்களைப் பற்றியும் வெளிவந்த புத்தகங்களை தேடிப் பிடித்துப் படித்தேன். அதன் தாக்கம்தான் இந்தப் படம்’ என்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

‘‘இது 1940-ல் நடக்கிற கதை. அந்தக் காலகட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் உட்பட ஏராளமான நாடகக் கலைஞர்கள் தங்களுடைய கலைக்காக மட்டுமே வாழ்ந்தார்கள். அதுபோல பேரும் புகழுமாக வாழ்ந்த நாடகக் கலைஞர்களை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். கதையில் சுதந்திரப் போராட்டமும் முக்கிய பகுதியாக இருக்கும். ரொமான்ஸ் பாயாகவும், சாக்லெட் ஹீரோவாகவும் பழக்கமான சித்தார்த் இந்தப் படத்தில் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டுள்ளார். தவிர இந்தப் படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு அதிகம். படத்தில் என்னைவிட அவரிடம் எனர்ஜி லெவல் அதிகமாக இருந்தது. படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் ஸ்பெஷல் மேக்கப்பில் நடித்துள்ளார்கள்.

நடிகர்களுக்கு அடுத்து டெக்னீஷியன்களுக்கு முக்கியத்துவம் உள்ளது. முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தபோது பதட்டமாக இருந்தேன். ஆனால் அவர் என்னை ரிலாக்ஸ் பண்ணியதோடு அவரும் ரிலாக்ஸாகவும் பொறுமையாகவும் கதையை கேட்டார். சொன்னா நம்பமாட்டீர்கள்.

தனக்கு வந்த ஹாலிவுட் படத்தைக் கூட நிராகரித்துவிட்டு, இந்தப் படத்துக்காக இசையமைக்கிறார். 1940களில் உள்ள இசைக்கு ஏற்ப அனைத்துப் பாடல்களும் இருக்கும். நாட்டுப்புற இசையும், கர்நாடக இசையும் கலந்த அந்தப் பாடல்கள் இசை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். ஒரு நல்ல படத்தை பிரேம் டூ பிரேம் மிஸ் பண்ணாமல் செதுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்த வேட்கையோடுதான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்” என்கிறார் வசந்தபாலன்.  

-எஸ்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: