Skip to content

ஆல் நியூ அஜித்!

இளமை லுக்…நான்கு கெட்டப்…
சீக்ரெட்ஸ் சொல்லும் கௌதம் மேனன்

ரொம்பத் தெளிவுதான் கௌதம் மேனன். அஜித் காட்சிகள் எடுக்காத நேரம் பார்த்து, ‘‘ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுங்களேன்… பேசலாம்’’ என்றழைக்கிறார். ‘தல’ படத்தின் தலைப்பு என்னவாயிருக்கும் என ரசிகர்கள் பரபரக்க, ஓ.எம்.ஆரில் பரபரக்கிறது ஷூட்டிங். பிரேக்கில் இயக்குனருடன் அமர்கிறோம். படபடப்பு காட்டாத கௌதமின் பேச்சு, அறையின் ஏ.சியைக் காட்டிலும் கூல்!

‘‘முதல் முறையா ‘தல’ கூட்டணி… எப்படியிருக்கு?’’

‘‘ ‘காக்க காக்க’ படத்திலேயே அஜித்தும் நானும் சேர வேண்டியது. சில காரணங்களால் நடக்கல. ‘அசல்’, ‘மங்காத்தா’ படங்களின்போதும் எனக்குத்தான் தேதி கொடுத்திருந்தார். சூழ்நிலை சூறாவளி, அப்பவும் எங்களை சேர விடல. எது எப்போ நடக்கணுமோ அது அப்போதான் நடக்கும். இதோ இந்த முறை தலயுடன் கைகோர்த்துட்டேன்.

என் படத்தோட டைட்டிலை அறிவிப்பதில் இந்த தடவை கொஞ்சம் லேட். மொத்தம் மூணு தலைப்பைப் பதிவு செஞ்சிருக்கோம். அதில் எதை வைக்கிறது என நான், அஜித், தயாரிப்பாளர் எல்லாரும் கலந்து பேசிக்கிட்டு இருக்கோம். ரசிகர்கள் கொண்டாடுற மாதிரியான தலைப்பை விரைவில் வெளியிடுவோம். அது வரைக்கும் வெயிட் ப்ளீஸ்!’’

‘‘படத்தோட ஸ்டில்ஸ் அஜித்துக்கு போலீஸ் ஆபீஸர் வேடம் என்கிறதே..?’’

‘‘படம் ரிலீஸ் ஆகும் வரை அது சஸ்பென்ஸ். படம் ஆரம்பிச்சு 45 நிமிடங்கள் வரை அஜித் கேரக்டர், அவருடைய பின்னணி, என்ன வேலையில் இருக்கார்… இப்படி பல கேள்விகள் புதிராவேதான் இருக்கும். இது ஒரு கேரக்டர் பற்றிய படம். அதுதான் அஜித். அவரைப் புதிய கோணத்தில் காட்ட முயற்சி எடுத்திருக்கேன்.

அதை விரிவா சொன்னால், கதையோட மொத்த உருவமும் தெரிஞ்சிடும். இந்த கேரக்டர் வரவேற்பைப் பெற்றால், தொடர்ந்து அந்த கேரக்டரை அடிப்படையா வச்சி படம் பண்ணுவேன். அதை அஜித் சாரே பண்ணலாம். நான் இந்தப் படத்தில் கமிட் ஆனதுமே, ‘உங்க படத்துக்குள்ளே நான் இருக்கணும். ‘நான்தான்’ என்கிற மாதிரி படமே பண்ணக் கூடாது’ எனத் தெளிவாச் சொல்லிட்டார் அஜித்.

ஷூட்டிங் தொடங்கின முதல் நாளே எல்லாரிடமும் இருபது நிமிஷம் பந்தா இல்லாம பேசி, நட்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தார். ஒரு சூப்பர் ஸ்டாருடன் வொர்க் பண்றோம் என்ற பயமோ தயக்கமோ இல்லாமல், மொத்த யூனிட்டுமே அவங்களோட வேலையில் இயல்பா இருக்குற மாதிரி மரியாதை கலந்த நட்புடன் வேலை நடந்துக்கிட்டு இருக்கு!’’
‘‘பன்ச் டயலாக் போன்ற பில்டப்புகளுக்கெல்லாம் ஸ்டாப் போர்டு காட்டிட்டார் அஜித். படத்தில் வேறென்ன ஸ்பெஷலா இருக்கு?’’

‘‘அஜித் இதுவரை நடிச்ச படங்களோடு ஒப்பிட்டால் அவருடைய லுக் ரொம்பப் புதுசா இருக்கும். பெரிய ஹீரோக்களின் படங்களில் ஆடியன்ஸ் எப்போதுமே புது தோற்றத்தை எதிர்பார்ப்பாங்க. அது பிடிச்சிருந்தா குட் ஃபீலுடன் படம் பார்ப்பாங்க. அதுக்காக நிறைய நேரம் எடுத்துக்கிட்டோம்.

28 வயசிலிருந்து 35 வயசு வரைக்குமான நாலு வேற வேற தோற்றங்களில் அஜித் வர்றார். ரொம்ப மேக்கப்பெல்லாம் இல்லாமல், வயதின் அடுத்தடுத்த பருவங்களுக்கு ஏற்ற மாதிரியான சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் செய்திருக்கோம். ‘இப்படிப் பண்ணலாம்… அப்படிச் செய்யலாம்’ என்று அஜித்தும் ஆர்வமா மெனக்கெட்டிருக்கிறார்.’’

‘‘அனுஷ்கா ஹீரோயின், த்ரிஷா வில்லியா?’’

‘‘சேச்சே! அவரும் ஹீரோயின்தான். அனுஷ்கா, த்ரிஷா ரெண்டு பேருக்குமே படத்தில் முக்கியத்துவம் இருக்கு. அனுஷ்கா சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் 28 வயது மாடர்ன் பெண்ணா வர்றாங்க. அனுஷ்காவுக்கும் அஜித்துக்கும் சில சீன்ஸ் இருக்கு. அது கதைக்கு நெருக்கமா இருக்கும்.

த்ரிஷாவுக்குக்கூட படத்தில் லவ் இருக்கு. ஆனால், அஜித் யாரை லவ் பண்றார் என்பதெல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது. த்ரிஷாவுக்கு இதுவரை பண்ணாத பியூட்டிஃபுல் கேரக்டர். அனுஷ்கா இல்லைன்னா இந்தக் கதையே நகராது… த்ரிஷா இல்லைன்னா இந்தப் படமே இல்லை!’’‘‘ஹாரிஸ் ஜெயராஜுடன் மறுபடியும் சேர்ந்துட்டிங்களே?’’

‘‘ஐந்து வருடங்கள் கழிச்சி இணைஞ்சிருக்கோம். இருவரும் சேர்ந்து வொர்க் பண்ணலையே தவிர, ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டுத்தான் இருந்தோம். ஏன்னா, நாங்க ஃபிரண்ட்ஸ். ஒருபோதும் பிரிய முடியாது.

படத்தில் ஆறு பாடல்கள் இருக்கு. ரெண்டு பாடல்களை ஷூட் பண்ணிட்டோம். ‘மழை வரப்போகுது துளிகளும் தூவுது நனையாமல் என்ன செய்வேன்..’ என்ற தாமரையின் பாடல் அஜித் பாயின்ட் ஆஃப் வியூவில் அழகா வந்திருக்கு.’’‘‘ஆக்ஷனில் தல ரிஸ்க் எடுத்திருக்கிறாரா?’’

‘‘அழகான காதல், விறுவிறுப்பு கூட்டும் ஆக்ஷன், பைக், கார் துரத்தல்… எல்லாம் கலந்த எமோஷனல் படமா இது இருக்கும். 120 அடி உயரம் உள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து கீழே இறங்கி வரும் காட்சியில், டூப்பே இல்லாமல் ‘நானே பண்றேன்’ என்று நடித்தார் தல. நீங்க கேட்டதால் இதைச் சொல்றேனே தவிர, பில்டப்புக்காக சொல்லலை.

அது அஜித்துக்கும் பிடிக்காது. ஒரு டயலாக் தூக்கலா தெரிந்தாலும் ‘இது தேவையா… ஓவரா இருக்காதா?’ன்னு நிறுத்தி நிதானமா கேள்வி கேட்கிறார். சூழ்நிலைக்கு பொருத்தமா இருக்கும்னு சரியான விளக்கம் கொடுத்தா மட்டுமே சம்மதிக்கிறார். கதையைத் தாண்டி செயற்கையா எதையும் சேர்க்கணும்னு நானும் நினைக்கல; அவரும் விரும்பல!’’

‘‘சூர்யா படம் டிராப் ஆனதால்தான் அஜித் உங்களுக்குக் கை கொடுத்ததாகவும், இதனால் சிம்பு படத்தைக் கைவிட்டதாகவும் செய்திகள் உலவியதே..?’’

‘‘அப்படிச் சொல்ல முடியாது. நான் சொன்ன கதை சூர்யாவுக்குப் பிடிக்காததால்தான் அந்தப் படம் டிராப் ஆனது. என் படத்தில் நடிக்கவில்லை என்று சூர்யா அறிக்கை விட்ட அன்றைக்கே சிம்புவை போனில் கூப்பிட்டு கதை சொன்னேன். ‘நாளைக்கே ஷூட்டிங் போகலாம்’னு அவர் ரெடியாகிட்டார். ஒரு வாரம் ஷூட்டிங் போன பிறகு, அஜித் சார் கூப்பிட்டு, ‘ரொம்ப நாளா நாம் பேசிக்கிட்டு இருக்கோம். ரத்னம் சாருக்கு நான் டேட் கொடுத்திருக்கேன்.

நீங்க ஃப்ரீயா இருந்தா, படம் பண்ணலாமா’ன்னு கேட்டார். அந்த நேரத்தில் அஜித் என்னிடம் அப்படிக் கேட்டது… என் தோளில் தட்டிக் கொடுத்தது மாதிரி இருந்தது. அப்போ அவர்கிட்ட, ‘சிம்பு படம் இருக்கே’ன்னு சொன்னேன். ‘ரெண்டையுமே பண்ணுங்க’ன்னு சொன்னார். ‘அஜித் படத்தை முடிச்சிட்டு வந்திடுறேன்’னு சிம்புகிட்ட சொல்லிட்டுத்தான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். அது டிராப் ஆகலை.

ஏ.ஆர்.ரஹ்மான் எல்லா பாட்டையும் போட்டுக் கொடுத்திருக்கார். இன்னும் 30 நாட்கள் ஷூட்டிங் போனால் போதும். இதுவரை 8 கோடி ரூபாய் செலவாகியிருக்கு. அதை நான் கைவிட்டால் ஒண்ணு நான் பணக்காரனா இருக்கணும்; இல்லைன்னா சினிமா பற்றி கவலைப்படாதவனா இருக்கணும். நான் இந்த ரெண்டுமே இல்லை!’’

-அமலன்

பொறுப்பு நிறைந்த வேதிகா!

பொறுப்பு நிறைந்த வேதிகா!

பெரும்பாலான கதாநாயகிகள், தாங்கள் நடித்த படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டுவிழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அதற்காக செலவிடப்படும் நேரத்துக்கு வருமானம் கிடையாது என்பதுதான் அவர்களது பொறுப்பற்ற புறக்கணிப்புக்குக் காரணம்.

அவர்களுக்கெல்லாம் புத்திசொல்லி, பாடம் புகட்டுமள வுக்கு நடந்துகொண்டார் வேதிகா. அவரது ‘காவியத் தலைவன்’ மீடியா சந்திப்புக்காக, வேறொரு படத்தின் படப்பிடிப்புக்கு லீவு சொல்லிவிட்டு வந்து கலந்துகொண்டார்.
– See more at: http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=4308&id1=44&issue=20140901#sthash.AEDBBcYG.dpuf

ஆன்மிகம் ஃபர்ஸ்ட்… சினிமா நெக்ஸ்ட்!

இளமையின் அடையாளமாக… இன்னும் பக்குவமாக… சிம்பு. தனது திருவிளையாடல்களை நிறுத்திவிட்டு நிஜமான ஆட்டத்திற்கு இப்போதுதான் சிம்பு ரெடி. மாசிலாமணி தெரு புது வீடு, ரசனையும் அழகுமாய் கொஞ்சுகிறது. சிரிக்க மறக்காத உதடுகளோடு… இந்தப் பேட்டியில் பார்த்தது புத்தம் புது சிம்பு! ‘‘ஒவ்வொரு நாளும் ‘இது நம்ம ஆளு’ பற்றி விதவிதமாய் செய்திகள். அதில் இருக்கிற உண்மை என்ன சிம்பு?’’

‘‘பாண்டிராஜ் சார் நேஷனல் அவார்டு வாங்கினவர்… கதை கேட்டதும் சம்மதிச்சேன். திருமணமாகப் போகும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் வரைக்கும் சில விஷயங்கள் நடக்கும்ல, அதுவே முழுப்படமா இதுவரை வந்ததில்லை. நானும் நயன்தாராவும் நடிக்கப் போறோம்னு சொன்னதுமே ‘திரி’ கிள்ளிப் போட்ட மாதிரி ஆகிருச்சு.

லைட்மேன், அங்கே வந்தா நகராமல் நின்னு பார்க்கிறார். ஆடியன்ஸும் நல்லாப் பார்ப்பாங்க. எனக்கு சந்தேகமேயில்லை. எல்லாருமே பெரிய ஆர்ட்டிஸ்ட். நயனும் பிஸி. இதில் தாமதமாக நம்பத் தகுந்த காரணங்கள் இருக்கு.

கிடைச்ச 20 நாள் கேப்ல கிராப் வெட்டினேன். ‘அய்யோ! படம் அவ்வளவுதான். கன்டினியூட்டி போச்சு’ன்னு செய்திகள். அய்யா, என் ஹேர்கட்டை கொஞ்சம் திருத்தினா, அதுதான் ‘இது நம்ம ஆளு’ க்ளைமாக்ஸ் லுக். போதுமா? ‘யோவ், இது என் படம்யா… உங்களுக்கு என்னய்யா பிரச்னை?’ன்னு கத்தத் தோணுது.

‘வாலு’வும் பின்னி எடுக்கிற மாதிரி வந்திருக்கு. ‘அந்த’ சமயத்தில் எடுத்த படமா… நானும், ஹன்சிகாவும் செம கெமிஸ்ட்ரியில் இருக்கோம். சந்தானமும், நானும்… சும்மா கலகலன்னு பறக்கும் படம். எனக்கு ரெண்டு படங்களும் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு.’’‘‘ஆனாலும், ரெண்டு வருஷம் இடைவெளி விடுவதற்கு நியாயமே இல்லையே..?’’‘‘இந்த ரெண்டு வருஷத்துல எனக்கு எவ்வளவோ நடந்தது. நான் ரொம்ப மாறியிருக்கேன்.

முதலில் என்னை மற்ற நடிகர்களோடு தயவுசெய்து ஒப்பிடாதீங்க. அதற்காக ‘நான் கிரேட்’னு சொல்ல வரல. மத்தவங்க 24 வயதில் வந்திருப்பாங்க. நான் ஒன்பது மாதக் குழந்தையா இருக்கும்போதே நடிக்க வந்துட்டேன். மத்த நடிகர்கள் ஸ்கூல் போய்க்கிட்டு இருக்கும்போது, நான் இந்தப் பக்கம் எக்ஸாமுக்கும் படிச்சேன்… அப்பா டயலாக்கையும் படிச்சேன். 14 வயது வரைக்கும் தொடர்ந்து நடிச்சேன். 16 வயசிலேயே ஹீரோ. முப்பது வருஷம் தொடர்ந்து வேலை செய்திருக்கேன்.

எனக்காக ரெண்டு வருஷம் எடுத்துக்கக் கூடாதா? அவ்வளவு சீக்கிரம் மக்கள் மனசிலிருந்து என்னை எடுத்திட முடியாது. எப்படி முன்னுக்கு வந்தோம்னு தெரியாதவன், திடீர்னு பணத்தைப் பார்த்தவன், புகழைப் பார்த்தவங்களுக்குத்தான் பிரச்னை. அவன்தான் பயப்படணும்… எனக்கு அந்தப் பிரச்னையே இல்லை. நான் கஷ்டப்பட்டு, அனுபவப்பட்டு, அடிபட்டுதான் வந்தேன். எப்படி விழுந்தாலும், எனக்கு ஏறத் தெரியும். இன்னும் ரெண்டு வருஷம் ஆனாலும், இன்னும் கீழே போனாலும் திரும்ப வருவேன்!’’‘‘ஏன் திடீர்னு இமயமலைக்கெல்லாம் டிரிப்..?’’

‘‘நான் நிறைய மாறிட்டேன், ‘நான் யார்… இந்த உலகத்துக்கு எப்படி, ஏன், எதற்காக வந்தேன்’னு கேள்விகள் உள்ளுக்குள்ள எழுந்துக்கிட்டே இருக்கு. உண்மையிலேயே நான் சிம்புதானான்னு தோணுது. இமயமலையெங்கும் துளி அடையாளம் இல்லாமல் திரிஞ்சேன். அதுக்கு முன்னே நான் மெஷின் மாதிரி ஆகிப் போயிருந்தேன்.

சினிமாவே எல்லாமுமா இருந்துச்சு. சாதாரண விஷயம் எல்லாத்தையும் இழந்திருக்கேன். சுதந்திரம் இல்லை. ஒரு சிறுவனா இருந்த ஞாபகம் கூட இல்லை. பத்துப் பேரோட இருந்தாலும் தனிமையில இருந்தேன். எல்லாமே என்கிட்ட இருந்தது… கேர்ள் ஃபிரண்ட் கூட அப்ப இருந்தா. நான் ஹீரோ… அப்படியும் தனிமை.

மெல்ல ஆன்மிகத்தில் வர ஆரம்பிச்சேன். பைபிள், குரான், கீதை, மெட்டா பிஸிக்ஸ், டி.ஏன்.ஏன்னு கலந்து கட்டி படிக்க ஆரம்பிச்சிட்டேன். சமீபத்தில் 8 மணி நேரம் தியானத்தில் இருந்தேன். வீட்டில் அம்மா பயந்துட்டாங்க. இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு எனக்குத் தோணுது.

என் கடவுளுக்கு முகம் கிடையாது. ஒரு நண்பனிடம் தோளில் கை போட்டு பேசுற மாதிரி நான் கடவுள்கிட்ட பேசுறேன். எனக்கு ஒரு காலத்தில், ‘ரஜினி சார் மாதிரி வரணும்… சூப்பர் ஸ்டார் ஆகணும்’னு கனவு இருந்தது. இந்த ஆன்மிகம் கை வந்த பிறகு, சினிமா அடுத்ததுதான்!’’‘‘என்னங்க… சினிமாவை விட்டுடுவீங்களா..?’’

‘‘இதான் ஆன்மிகத்தைப் பற்றின தவறான கருத்தா இருக்கு. ஆன்மிகத்தில் வந்துட்டா கல்யாணம், தாம்பத்யம், தண்ணியடிக்கிறது, அசைவம் கூடாது என்பதல்ல. 24 மணி நேரமும் காவி உடையில் இருக்கிறதும் அவசியமில்லை. கடவுளை நோக்கிச் செல்ல அநேக வழிகள். அதனால், சினிமாவை விட மாட்டேன்.

என்னை நம்பின ரசிகர்களுக்கு என்னால ஏமாற்றம் தர முடியாது. பங்களா, கார் இருக்கு. அப்பா நல்லா சேர்த்து வச்சிருக்கார். நாளைக்கு என் குழந்தை, குட்டிகளோட ஒரு தனித் தீவில் வாழணும்னா கூட என்கிட்ட காசு இருக்கு. ஆனா, இப்ப ரீல் லைஃபில் மக்களை எப்படி சந்தோஷப்படுத்துறேனோ, அதை ரியல் லைஃபில் செய்வதுதான் எனக்கு அடுத்த முப்பது வருஷ கனவு!’’‘‘அரசியலுக்கு வரப் போறீங்களோ?’’

‘‘பார்த்தீங்களா… உடனே அரசியல்ங்கிறீங்க. எனக்கு அரசியல் தெரியாது… புரியாது… சிம்பு அரசியலுக்கு வர்றதெல்லாம் காமெடி. ‘சினிமாவை மீறி மக்களுக்கு என்ன பண்ணலாம்’னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன். அதனால சினிமா பத்தி என்கிட்ட எதுவும் கேக்காதீங்க.

‘நீ பெரியவனா, நான் பெரியவனா?’ன்னு என்னை இழுத்து விடாதீங்க. நான் நார்மல் மனுஷன். யாரும் என்னை ஃபாலோ பண்ண வேண்டாம். உங்க எல்லாருக்குள்ளும் ஒரு லீடர், குரு இருக்கார். அவர் சொல்றதைக் கேளு! உனக்கு எதுக்கு சிம்பு? ரசிகர்கள் என்னை பின்பற்ற வேண்டாம். சொல்லிட்டேன்!’’

‘‘நீங்களா பேசுறது..!’’‘‘ ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘வேட்டை மன்னன்’, கௌதம் மேனன் படம்… எல்லாம் வரும். நல்லா வரும். ரசிகர்களுக்கு வேண்டியது கிடைக்கும். எனக்கு? ‘சிவாஜி’ படத்தில் ஒரு ரூபாய் காசோட டீக்கடையில் ரஜினி சார் இருப்பாரே… அப்படியொரு மனநிலை இப்ப எனக்கு.

மதத்தை, நாட்டை, இனத்தைப் புரிஞ்சிக்கிட்டவங்க, மனுஷனைப் புரிஞ்சிக்காம போனதேன்? ஒரே நாடுங்கறோம்… தண்ணி கொடுக்க மாட்டேங்கிறான். நடு ரோட்டில் குழந்தைகளை வச்சுக்கிட்டு அரிவாளால் வெட்டுறான்! பச்சைக் குழந்தைகளின் மீது ‘பாம்’ போடுறான். மனிதர்கள் மீதான அன்பெல்லாம் எங்கே போச்சுங்க?’’

‘‘அதிகமா கிடைச்சு எல்லாம் திகட்டிடுச்சா?’’‘‘30 வருஷமா நான் வாழவே இல்லை. இப்பதான் வெளியில வந்தேன். இப்ப நான் பழைய சிம்பு இல்ல. நடிக்கிறேன்…. நான் ரேஸில் இல்லை. ஏன்னா… நான் ஆன்மிகத்தில் இருக்கேன்!’’‘‘கல்யாணம் உங்களை மாத்துமோ?’’‘‘

இப்படி கடவுள் ஞானத்தைக் கொடுத்த பிறகுதானே, கடைசியா வந்த துணையையும் வேண்டாம்னு சொன்னேன்!’’‘‘நிறைய காதல் தோல்வி காரணமா?’’‘‘கத்தியால் குத்துப்பட்டு குடல் எல்லாம் வெளியே வந்து, மீண்டும் அதை எடுத்து மறுபடியும் தச்சு, மறுபடியும் குத்துப்பட்டு… அதெல்லாம் முடிஞ்சிருச்சே. இப்பதான் தெளிவா இருக்கேன்!’’

– நா.கதிர்வேலன்

சூர்யா அட்ராக்ஷன்

சூர்யா அட்ராக்ஷன்

அவ்வளவு அன்போடு கை கொடுக்கிறார் சூர்யா. ‘அஞ்சான்’ திருப்(ப)தியுடன் வந்திருக்கும் சந்தோஷத்தில் ‘மாஸ்’ஸுக்கு தயாராகும் ஆர்வம் கண்ணில் தெரிகிறது. அச்சு வெல்லச் சிரிப்போடு, நிதானமான பேச்சு… சூர்யாவைப் பிடிக்காமலா போகும்? நடிகனாக பல படிகள் உயர்ந்ததைக் காட்டிலும் சிறந்த மனிதராக வளர்ந்திருப்பதுதான் சூர்யா ஸ்பெஷல்!
‘‘உங்க தோற்றத்தில் ஏகத்துக்கும் மாற்றங்கள். ஸ்டைலே அள்ளுது… இந்தத் தோற்றத்தோட எப்படியிருக்கும் ‘அஞ்சான்’?’’

‘‘எப்பவும் சொல்ற மாதிரி, பாலா படத்தில் ஆரம்பிச்சது தான். ஒரு கேரக்டர்னா, அதுக்குள்ளே போய் உட்கார்ந்திருக்கிறது பிடிக்க ஆரம்பிச்சது. ‘அஞ்சானி’ல் ‘ராஜு பாய்’, அப்படியொரு கேரக்டர். அள்ளி அணைப்பான், துள்ளி அடிப்பான். எனக்கு லிங்குசாமி படங்கள் பிடிக்கும். உலகத்திலேயே இல்லாத கதைன்னு இருக்காது.

ஆனால், ஒரு ஸ்பீட் இருந்துக்கிட்டே இருக்கும். கண்ணுல ஒரு வியப்பும், உதட்டில் ஒரு சிரிப்பும் படம் பார்க்கும்போது இருக்க வைக்கிற மேஜிக் அவர்கிட்ட உண்டு. எந்த சீனில் எப்படி நடிக்கணும்னு ஒரு அளவு, மீட்டர் வச்சிருப்பார். அதில் இருக்கிற நேர்த்தி ஆச்சரியப்படுத்தும். பல இடங்களில் தவறிப் போய் இப்பதான் ‘அஞ்சானி’ல் சேர்ந்தோம்!’’‘‘இரண்டு கேரக்டர் போலிருக்கு…’’

‘‘ஆமா. இது ‘பையா’வின்போது தம்பிகிட்ட சொன்ன ஸ்கிரிப்ட். நானும், அவனும் சேர்ந்து பண்ணலாம்னு அவருக்கு விருப்பம் இருந்திருக்கும் போல. நான் கதையைக் கேட்டப்போ, ‘அடடா, இதை விடக் கூடாதுடா… நாமதான் இதைப் பண்ணணும்’னு தோணிச்சி. அந்த நிமிஷமே உள்ளே இருக்கிற நடிகன் ஸ்பாட்டுக்கு நடிக்க கிளம்பிட்டான். இதில் லிங்குசாமிக்கு பெரிய பங்கு இருக்கு.

சமந்தா, சந்தோஷ் சிவன், வித்யுத்னு அருமையான டீம் கிடைச்சது. துறுதுறுன்னு பறக்கிற கேரக்டரில் என்னை அழகா கொண்டு வந்து நிறுத்தினார் லிங்கு. நல்ல என்டர்டெயின்மென்ட் பண்ணும்போது ஒரு சந்தோஷம் ஏற்படும் இல்லையா, அந்த சந்தோஷம் எனக்கும் இருக்கு. அது மக்களுக்கும் இருந்துச்சுன்னா இது ஒரு வெற்றிப் படம். இதில் பங்கெடுத்துக்கிட்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கு!’’

‘‘சம்பளம், நேர்த்தியான வியாபாரம், நல்ல அபிமானம்னு உங்களை வச்சுக்கிற விதம் எப்படி?’’‘‘நாம் மரியாதை வச்சிருக்கவங்களே நம்மிடம், ‘நீங்க நல்ல இடத்தில் இருக்கீங்க’ன்னு சொல்றப்போ, ‘ஒழுங்கா வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்’ங்கிற திருப்தி வருது. ஆனால், அதுக்கும் மேலே தலையில எதையாவது ஏத்திக்கிட்டா, அது கஷ்டம். என்கிட்ட சோம்பேறித்தனம் கிடையாது.

தந்திரம் இல்லை. என்னை அப்படி வளர்த்ததில் என் குடும்பத்திற்கும் பெரிய இடம் இருக்கு. என்னை சந்தோஷமா வச்சுக்கிறதில் மனைவி, குழந்தைகளின் பங்கும் பெருசு. கேரளாவுக்குப் போனால் ‘சூர்யாவே குடும்பத்தோடு டைம் செலவழிக்கிறார், உங்களுக்கென்ன?’ன்னு குத்தி காட்டுறதா சொல்றாங்க. கடவுள் புண்ணியத்தில் குடும்ப நலனில் நல்லா இருக்கேன். இப்போ எல்லாத்தையும் காது கொடுத்து கேட்கிறேன். என் வெற்றி முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை…’’

‘‘இப்ப சினிமா ரொம்ப மாறிடுச்சு… கவனிக்கிறீங்களா? கல்யாண குணங்கள் கொண்ட ஹீரோவுக்கு விடை சொல்ற மாதிரி படங்கள் வருதே…’’‘‘இது ஒரு வட்டம். ஆறு வருஷத்திற்கு ஒரு தடவை இப்படியான மாற்றங்கள் வந்துக்கிட்டே இருக்கும். கொஞ்சம் கவனிச்சாலே எளிதா விளங்குற உண்மைத்தான் இது. நானே கூட இனிமே இவ்வளவு சீரியஸா இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா, பொறுப்பா இருக்கணும். சில படங்கள் எனக்கே செய்ய ஆசையாக இருக்கும்.

மலையாளத்துல ‘பெங்களூர் டேஸ்’ அப்படியான ஒரு படம். மூணு ஜோடி… வேற வேற விதம். ஆனால், இப்ப அதை நான் செய்ய முடியாது. அதற்கு 25 வயசுதான் இருக்கணும். ஸ்கிரிப்ட் நம்மளை அந்த நம்பிக்கைக்குக் கொண்டு போனால் எதுவும் சாத்தியமே. அதற்கு இமேஜ் ஒரு தடையாக இருக்கக் கூடாது. எனக்கிருக்கிற வியாபாரம்…

சில முடிவுகளை விரும்பினால் கூட செய்ய முடியாது. அது எழுதப்படாத விதி. ஆனால், அமீர்கான் இதில் தெளிவாக இருக்கார். ‘தலாஷ்’னு ஒரு படம், 60 கோடிக்குப் பண்ணி, போதுமான வெற்றி கிடைத்தது. அது ‘கஜினி’ அளவுக்கு 150 கோடி படம் கிடையாது. ஆனாலும், அவர் அதில் திருப்தி அடைகிறார். அது ஒரு மனசு. இப்ப நான் நினைச்சாலும் ‘பேரழகன்’ பண்ண முடியாது. இதுக்கெல்லாம் மாற்றுதான் நான் ஆரம்பிச்சிருக்கிற 2டி’’‘‘அடுத்து இதில் பாண்டிராஜ்தானே?’’

‘‘ஆமா, அருமையான ஸ்கிரிப்ட். சில படங்களில் நாம் இருக்க முடியலைன்னாலும் தயாரிப்பதில் பங்கு பெறுவோமேன்னு வந்த திட்டம்தான். கன்ட்ரோல் பட்ஜெட்டில், புதுசான படங்கள் வருஷத்திற்கு மூணு வந்தால்கூட போதும். வித்தியாசப்பட்டு, விலகி, கொஞ்சம் கையைக் கடிச்சால் கூட பரவாயில்லை…

தயாரிக்கலாம். என்னால கமல் சார் மாதிரி, தானே எழுதி படம் பண்ண முடியாது. நான் வண்ணம்தான். யாராவது புரிஞ்சு, அறிஞ்சு என்னை வச்சுத் தீட்டணும். சினிமாவில் இருக்கோம். அதைத் தாண்டி சிந்திக்க முடியலை. இங்கே வந்ததை இங்கே போட்டுப் பார்க்கிறது நியாயம்தானே!’’

‘‘ஹரி மாதிரி கண்டிப்பு டைரக்டர்களோட இருந்துட்டு, திடீரென இப்போ வெங்கட்பிரபுவோடு ‘மாஸ்’. நம்பவே முடியலை..!’’‘‘முன்னாடியே சொன்னனே. கொஞ்சம் ஜாலி, வித்தியாசமா பண்ணுவோம்னு நினைச்சேன். ஸ்கிரிப்ட்டை கேட்ட பார்த்திபன் சார், சமுத்திரக்கனி, யுவன் எல்லாருமே பாராட்டுறாங்க. ஜாலி… அதே நேரத்தில் உழைப்பு. ஒரே இடத்தில் ஜாலியையும், வேலையையும் உணர முடிகிற மாதிரி ‘மாஸ்’ ஷூட்டிங் ஸ்பாட் இருக்கு. அதனாலேயே அது இப்ப என்னோட ஃபேவரிட் ஸ்பாட்!’’

– நா.கதிர்வேலன்

“நானும் ஜோதிகாவும் சேர்ந்து நடிக்க ஒரு கண்டிஷன்!”

நாகார்ஜுனா சார்கிட்ட பேசிட்டு இருந்தப்ப, ‘இது ஒரு சர்க்கிள்… நாங்க எல்லாருமே பாம்பே கதைகள்ல நடிச்சிருக்கோம். அப்படி ஒரு டிரெண்ட் எல்லா நடிகனுக்கும் ஒருகட்டத்தில் தன்னால அமையும்’னு சொன்னார். அப்படி எந்த பிளானும் இல்லாம, எனக்கும் தன்னால அமைஞ்சதுதான் ‘அஞ்சான்’. பல வருஷங்களாப் பேசிட்டு இருந்த ஒரு புராஜெக்ட், மும்பையில் ஷூட் போனது யதார்த்தமா நடந்தது. மத்தபடி அவங்க பாம்பே சினிமா பண்ணிட்டாங்களேனு நான் பண்ணலை!” – ” ‘மங்காத்தா’வில் அஜித்துக்கு, ‘துப்பாக்கி’யில் விஜய்க்கு ஹிட் கொடுத்த ‘மும்பை’ ராசிதான், ‘அஞ்சான்’ படப்பிடிப்பை அங்கேயே முழுக்க நடத்தியதா?” என்ற கேள்விக்கு சூர்யாவின் பதில் இது!
”இப்படி ஹிட், கலெக்ஷன், ரசிகர்கள்னு எங்கேயும் எப்போதும் அஜித், விஜய்யுடன் நீங்க ஒப்பிடப்படுவதை எப்படி எடுத்துக்கிறீங்க?”
”தமிழ் சினிமா ஹீரோக்கள் பத்தின விகடன் கட்டுரையில் கலெக்ஷன்ல அவங்களுக்குச் சமமா நான் இருக்கேன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க. ஆனா, அவங்க ரெண்டு பேருமே என்னைவிட வயசுல, அனுபவத்துல சீனியர்ஸ். இப்போ அந்த இடத்துல அவங்க எஸ்டாபிளிஷ் ஆனதுக்குப் பின்னால அவங்களோட 25 வருஷ கடின உழைப்பு இருக்கு. அதுக்கான பலன்தான், அவ்வளவு பெரிய ஃபேன் ஃபாலோயிங். அது ஒரே ராத்திரியில் நடந்துடக்கூடிய விஷயம் இல்லை. இன்னொண்ணு, இப்படியான சில விஷயங்கள்னு எனக்கு எந்த இலக்கும் இல்லை. ஒவ்வொரு படத்துலயும் புதுசா ஏதாச்சும் கத்துக்கணும்னு பார்த்துப் பார்த்து புராஜெக்ட் பிடிக்கிறேன். அது இத்தனை வருஷம் கழிச்சு இந்த இடத்துல நிறுத்தும்னு எனக்கு எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்காமத்தான் டிராவல் பண்றேன். அதனால் அந்த ஒப்பீடுகள் என்னைக் கொஞ்சமும் சலனப்படுத்தாது!”
இப்போது சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ அவரது கேரியரையும், தமிழ் சினிமா வசூல் ரெக்கார்டையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவிவரும் சூழலில் பேசினேன்…
” லிங்குசாமி சார் ஸ்கிரிப்ட்ல இது வேற வெரைட்டி. ஒரு கேரக்டருக்கே எல்லா முக்கியத்துவமும் கொடுத்துடாமல், பரபரப்பான ஸ்கிரீன்ப்ளேதான் படத்தை லீட் பண்ணும். இதுக்கு முன்னாடி நான் நடிச்ச படங்கள் ஹீரோவோட பாயின்ட் ஆஃப் வியூல இருக்கும். ஆனா, ‘அஞ்சான்’ல திரைக்கதைதான் சூப்பர் ஹீரோ. லிங்கு சார் எப்பவும் ரசிகர்களை டைட்டா வைச்சுக்க மாட்டார். ரிலாக்ஸா வெச்சிருப்பார். திடீர்னு ஒரு ஸ்பார்க் கிளம்பி, பரபரனு ஸ்பீடு எடுக்கும் படம். இந்தப் படத்துல அந்த வேகம் ரொம்ப ஜாஸ்தி!”

”லுக், மேனரிசம்ல பளிச் வித்தியாசம் காட்டியிருக்கீங்க. ‘இந்தப் படத்துக்காக இப்படித்தான் தயாரானேன்’னு ஏதாவது சுவாரஸ்யம் சொல்ல முடியுமா?”
”ஒரு புத்தகத்தை முழுசா படிச்சேன். மும்பை என் மாமியார் ஊர். நான் அடிக்கடி போற ஊர்தான். ஆனா, இந்தப் படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி லிங்கு சார், Dongri To Dubai: Six Decades of The Mumbai Mafia’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். மும்பை நிழல் உலக தாதாக்களின் வளர்ச்சி, வாழ்க்கையைப் பத்தின புத்தகம். அதைப் படிச்சதும் மும்பையை வேற கலர்ல பார்க்கத் தோணுச்சு. 1960-களில் இருந்து மும்பை யார் கன்ட்ரோல்ல இருந்தது, பஞ்சாபி, பாகிஸ்தானி, தமிழன்… இவங்க கையில இருந்து தாவூத் இப்ராஹிம் கட்டுப்பாட்டுக்கு எப்படி வந்தது, கான்ஸ்டபிள் மகன் தாவூத் இப்ராஹிம் எப்படி ஒரு டான் ஆனார்னு ஒவ்வொரு எபிஸோடுமே ஒரு ஆக்ஷன் ப்ளாக். அந்தப் புத்தகத்தின் ஃபீல் படத்தோட ஸ்கிரிப்ட்ல நிறைய இடத்தில் இருக்கும். படத்தில் என் பிரசன்ஸ் கிட்டத்தட்ட ஒரு டான் மாதிரியே இருக்கணும்னு, ஏறக்குறைய ஏழு மாசமா ரஃப் அண்ட் டஃப்பான ஒரு மூட்லயே இருந்தேன்!”
”உங்க படங்களை விநியோகம் பண்ண ஏற்கெனவே ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இருக்கும்போது, ‘2டி’னு ஏன் தனியா ஒரு தயாரிப்பு நிறுவனம்?”
”ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் முதலில் கார்த்தியின் நண்பர்; தூரத்து உறவினர். இப்போ ஒரு சம்பந்தம் மூலம் ரொம்ப நெருங்கிட்டார். இந்த 15 வருஷங்களா சினிமாவுல நாங்க எல்லாருமே வளர்ந்திருக்கோம். என் ரசனையிலான சினிமாக்களை அந்த பேனர்ல ஃபோர்ஸ் பண்ண விரும்பலை. ‘நாமளே சொந்த ரிஸ்க்ல பண்ணலாமே’னு உருவாக்கினதுதான் இந்தச் சின்ன தயாரிப்பு நிறுவனம். இதோட லாப, நஷ்டங்கள் எல்லாத்துக்கும் நானேதான் பொறுப்பு. அந்தச் சுதந்திரத்துக்காக ஆரம்பிச்சதுதான் 2டி. பசங்க பேர்… தியா, தேவ். அதுதான் 2டி”
”ஜோதிகா திரும்ப நடிக்கப்போறதா ஒரு தகவல். உண்மையா?”
”அவங்களுக்கான ஸ்கிரிப்ட் வந்தா நிச்சயம் நடிப்பாங்க. ஆனா, இப்ப வரை எந்த புராஜெக்ட்டையும் அவங்க கமிட் பண்ணலை. நிறைய பேர் ஸ்கிரிப்ட் சொல்லிட்டு இருக்காங்க. ‘எனக்கு இந்த ஸ்கிரிப்ட் பிடிச்சிருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?’னு ஒண்ணு ரெண்டு கதையை என்கிட்டயும் சொல்லியிருக்காங்க. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூடிய ஸ்கிரிப்ட் கிடைச்சா, சேர்ந்து நடிப்போம். ஆனா, ஒரு கண்டிஷன். 100 நாள் கால்ஷீட்லாம் கேக்கக் கூடாது. ஏன்னா ரெண்டு, மூணு மணி நேரம்கூட பிள்ளைங்களை விட்டுட்டு அவங்களால இருக்க முடியாது!”

”சமீபத்துல ‘எனக்கு காமெடி செட் ஆகலை’னு கார்த்தி சொன்னார். ஆரம்ப காலத்தில் நீங்கள் சந்தித்த சில சங்கடங்களை இப்போ அவர் சந்திக்கிறார். உங்க அனுபவத்துல இருந்து அவருக்கு என்ன சொல்வீங்க?”
”இது இங்கே எல்லாருக்கும் நடந்திருக்கு. எம்.ஜி.ஆர் போன்ற சூப்பர் சீனியர்கள் படங்கள்லயே சில படங்களைத்தானே நாம கொண்டாடிட்டு இருக்கோம். அவங்களுக்கே அப்படினா, இன்றைய டிரெண்டுக்கு இந்த ஏற்ற-இறக்கம் எல்லாம் சர்வசாதாரணம். இதுல கார்த்திக்கு ஸ்பெஷல் அட்வைஸ் சொல்ல எதுவுமே இல்லை. ஏன்னா, அவருக்கே சினிமாவில் நிறைய விஷயங்கள் தெரியும். அவரோட நலம் விரும்பிகள்ல ஒருத்தனா, ஒரு அண்ணனா என் சப்போர்ட் அவருக்கு எப்பவும் உண்டு!”
”சிங்கம்-3… வாய்ப்பு இருக்கா?”
”முதல் ரெண்டு பாகங்களைவிட பெரிய ஜம்ப் இருந்தால் பண்ணலாம். ஹரி சார் சில ஐடியாஸ் சொல்லியிருக்கார். அதில் யூனிஃபார்ம் இல்லாத போலீஸ் கதையும் ஒண்ணு. அதையே மூணாவது பாகமா எடுக்கலாமானு டிஸ்கஷன் போயிட்டு இருக்கு. பார்ப்போம்!”

”பொண்ணு தியா, பையன் தேவ்… என்ன பண்றாங்க?”
” ‘நல்லா படிக்கிறாங்க. ரொம்ப நல்ல பழக்கவழக்கங்களோட இருக்காங்க’னு எல்லா இடங்கள்லயும் பேர் வாங்குறாங்க. பெருமையா இருக்கு. வீட்ல செம சேட்டை, குறும்பு பண்ணுவாங்க. ஆனா வெளியே போனா, ‘அட… சமத்துப் பிள்ளைகளா இருக்காங்களே!’னு வெரிகுட் வாங்கிடுறாங்க. இதுக்கான முழு கிரெடிட்டும் ஜோவுக்குத்தான். குழந்தைகள் கண்ணாடி மாதிரி. நாம என்ன பண்றோமோ, அதைத்தான் பிரதிபலிப்பாங்கனு பார்த்துப் பார்த்து வளர்க்கிறாங்க. பொண்ணுக்கு ஜிம்னாஸ்டிக் பிடிச்சிருக்கு. ஸ்விம்மிங், பாட்டனி, குழந்தைகளுக்கான தியேட்டர் பயிற்சினு நிறைய கிளாஸ் போயிட்டு இருக்காங்க. பையன், எங்க அப்பா மாதிரி. அவனுக்கும் ஓவியம் வரையப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு 100 படங்கள்கூட வரையுறார். அதுக்குள்ள வீடு முழுக்க அவங்களோட கிரியேட்டிவிட்டி நிறைஞ்சிருக்கு. ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். ஒரு அப்பாவுக்கு இவ்ளோ சந்தோஷம் கிடைக்குமாங்கிற ஆச்சர்யத்தோடவே அதை அனுபவிச்சிட்டு இருக்கேன்!”

சதுரங்க வேட்டை – சினிமா விமர்சனம்

”பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’ என்று திட்டமிடும் ஒருவனின் ‘சதுரங்க வேட்டை’ வியூகங்கள்!
சமூகத்தால் விரட்டப்படும் சிறுவன், அதே சமூகத்தை ஏமாற்றும் கிரிமினலாக உருவாகும் ஒன்ஸ்மோர் ஒன்லைன்தான். ஆனால், அதில் தமிழகத்தின் ‘வொயிட் காலர் ஃப்ராடு’களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கும் டீட்டெய்லிங்… அசத்தல்!

மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் கோபுரம்… என்று செய்திகளில் கடந்துபோன சம்பவங்கள்தான். அந்த மோசடிகளையே கதைக் களமாக்கி, செஸ் காய் நகர்த்தல் ட்ரீட்மென்ட்டில் திரைக்கதை அமைத்து, இறுதியில் அன்பின் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹெச்.வினோத். ஒரு மனிதனின் பணத் தேவை எப்படி ஒருவனை ஏமாற்றுபவனாகவும், மற்றவனை ஏமாறுபவனாகவும் மாற்றுகிறது, பேராசைப் பேர்வழிகளை மோசடி மன்னர்கள் எப்படி சைக்காலஜி தூண்டில் வீசி கவிழ்க்கிறார்கள், ஏமாற்றி அபகரித்த பணம் எப்படி நிம்மதியை ஆக்கிரமிக்கிறது என்று ‘கேண்டிட் சினிமா’வாக சொன்ன விதம்… பளீர் பொளேர்!
ஹீரோ நட்ராஜுக்கு பணமே பிரதானம். மண்ணுள்ளிப் பாம்பை மருத்துவக் குணம்கொண்டது என்று சொல்லி விற்பது, கேன்சரைக் குணப்படுத்தும் ‘அமெரிக்க ஏரி’ நீரை விற்பது, ஈமு கோழி மூலம் கோடிகள் அள்ளலாம் என்று வலை விரிப்பது எனத் தில்லுமுல்லு தகிடுதத்தங்கள் செய்கிறார். எதிர்பாராத ஒரு திருப்பத்தில், தன்னால் ஏமாற்றப்பட்டவர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக்கொள்கிறார் நட்ராஜ். தன் கர்ப்பிணி மனைவி பிணையில் இருக்க, அதுவரையிலான ஃப்ராடுத்தனங்களை மிஞ்சும் மெகா மோசடியைத் திட்டமிடுகிறார். அதில் திடீர் சிக்கல். வில்லன்களிடம் இருந்து நட்ராஜ் மீண்டாரா… மனைவியின் நிலை என்ன… திக்திக் செக்மேட்!
மது, சூது, கள்ளம், கபடம்… என சதா சர்வகாலமும் நெகட்டிவ் வைப்ரேஷன்களுக்கு இடையே, பாசிட்டிவ் அணுகுமுறையோடு நீந்தும் காந்தி பாபு கேரக்டருக்கு, நட்டி செம ஃபிட். கரன்சிகளைப் பார்த்ததும் படபடக்கும் கண்கள், வெளுக்கும் போலீஸிடம் கள்ள மௌனம், பாசம் காட்டும் போலீஸிடம் துள்ளல் வன்மம், காதலின் பிரியம், பிரிவின் துயரம்… என வளமான வார்ப்பு. அதிலும் பதமாக ஆரம்பித்து படபடவென அதிர்வு கூட்டி பாயும் புலியின் சீற்றம் சேர்த்து எதிராளியைச் சிலிர்க்கச்செய்யும் அந்த ஆன்மிக லெக்சர்… செமத்தியான சிக்ஸர். கணக்கில் இதுதான் உங்கள் முதல் சினிமா நட்டி!
படத்தின் பெரும் பலமும் பெரும் பங்குக் கைதட்டலும் குவிப்பவை… வசனங்களே! ‘உலகத்துல எல்லாமே இருந்தும், உங்களுக்குனு எதுவுமே இல்லைனு இருந்திருக்கீங்களா?’, ‘நாளைக்குச் சம்பாதிக்க முடியாதுனு நினைக்கிறவன்தான் சேர்த்துவைப்பான். நான் ஏன் சேர்த்துவைக்கணும்?’, ‘குற்றவுணர்ச்சி இல்லாம செய்யுற எதுவுமே தப்பில்லை’, ‘நான் யாரையும் ஏமாத்தலை, ஏமாறத் தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்’, ‘உன்னை ஒருத்தன் ஏமாத்தினா, அவனை எதிரியா நினைக்காதே… ஏன்னா, ஒரு வகையில அவன் உனக்கு குரு’, ‘அஞ்சு வருஷத்துல தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாத்திடுவேன்னு சொல்லி ஓட்டு வாங்குறாங்க. ஆனா, தமிழ்நாடு தமிழ்நாடாதான் அப்படியே இருக்கு. இது ஏமாத்து இல்லையா?’, ‘ஒவ்வொரு பொய்லயும் கொஞ்சம் உண்மை கலந்திருக்கணும்’, ‘நாமல்லாம் முதலாளி ஆக விரும்புற கம்யூனிஸ்ட்’, ‘உனக்கு மட்டும் புரிஞ்சிட்டா, நான் வேற ஐடியா யோசிக்கணும்?’… படீர் படீர் என வெடிக்கிறது ஒவ்வொரு துண்டு வசனமும். ஒவ்வொன்றிலும் அவ்வளவு அரசியல்! இடையிடையே, ‘பாம்புக்கு 200 மொழி தெரியும்’, ‘இளைய தளபதி விஜய்னு பேர் வைப்போமா?’, ‘மதுரைக்காரன் என்னைக்குடா கட்டிங்கோட நிறுத்தியிருக்கான்?’ என்று எளிய இனிய நகைச்சுவையும் உண்டு.
கிடைத்த கொஞ்சூண்டு இடத்திலும் அழுத்த முத்திரை பதிக்கிறார் இஷாரா. பெரிய விழிகள், பெரிய கன்னம், மருண்ட பார்வை… என்று முகமொழியிலேயே உணர்வுகளைக் கடத்திவிடுகிறார். தமிழ்த் திரைக்கு ஒரு புது ராணி!
‘மொழிப் பற்றோடு’ கட்டப்பஞ்சாயத்து செய்யும் ‘சுத்தத் தமிழ்’ வில்லன், ‘சிவப்பு நாடா’ நீதிமன்ற நிலுவைகள் ஒரு குற்றத்தைப் பிசுபிசுக்கச் செய்யும் உண்மை, அரசாங்க வளத்தை சூறையாடும் அசகாயத் தொழிலதிபர்கள், பாம்புக்காக மௌன விரதம் இருக்கும் பணத்தாசை வியாபாரி, ‘பாதி விலையில் தங்கம்’ என்றதும் ‘ஜோஜோ’வெனக் கிளம்பிவரும் ‘மாட்டு மந்தை’ மக்கள் என… படத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கதாபாத்திரத்திலும் அத்தனை அசல்… அத்தனை அசத்தல்!
அறிமுகத் தோரணைகளுக்குப் பிறகு நட்ராஜிடம் ஒவ்வொரு கேரக்டரும் எப்படியும் ஏமாந்துவிடுவார்கள் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும், அது எப்படி என்பதில் கடைசித் திருப்பம் வரை சுவாரஸ்யம் சேர்த்து ‘லப்டப்’ எகிறவைத்திருக்கிறது ஸ்மார்ட் ஸ்கிரீன்ப்ளே! பிரமாண்ட செட் இல்லை, அசத்தல் லொகேஷன்கள் இல்லை, பழகிய முகங்கள் இல்லை… ஆனாலும் விதவித ஆங்கிள்களில், வித்தியாச வியூக்களில் கண்களை நிறைக்கிறது K.G.வெங்கடேஷின் ஒளிப்பதிவு.
மூளையை மழுங்கடிக்கும் எம்.எல்.எம் பாலீஷ் பேச்சுகள், ஆன்மிக மந்திரங்களின் போலித்தனம், கும்பலாக ஏமாற ஆள் சேர்ப்பது அல்லது கும்பல் இருந்தால் ஏமாறத் தயாராக இருப்பது, மதுரை கிரானைட்ஸ் அதிபரின் ஆட்டம்… எனச் செய்திகளும் சைக்காலஜியுமாகப் படம் நெடுக உண்மையின் அரசியல்.
ஷான் ரால்டனின் பின்னணி இசை… சேஸிங் ரேஸிங். படத்தின் பின்பாதியைப் பெருமளவு நிரப்பும் நட்டி – இஷாரா காதல் காட்சிகள், ஈரமும் ஈர்ப்புமாகப் பதிவாக்கி இருக்கலாம்.
ஏமாறியவனைப் போலவே, ஏமாற்றுபவனும் நிம்மதியாக இருக்க மாட்டான் என்று புரிய வைத்த, ‘அன்பே சிறந்த ஆயுதம்’ என வலியுறுத்திய, ‘மோசடிகளில் இருந்து உஷாரா இருங்கப்பா’ என்று விழிப்பு உணர்வு ஏற்படுத்திய… பல தளங்களில் இயங்கியிருக்கும் இந்த சினிமா, தமிழ்ச் சூழலுக்கு மிக முக்கியமான பதிவு.
சினிமாவின் பேசுபொருளை அடுத்த தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கும் செம வேட்டை!
– விகடன் விமர்சனக் குழு

விருதுக்கு அலையும் ஹீரோக்கள்!

தேசிய விருது முதல் அமிஞ்சிக்கரை அண்ணாச்சி நினைவு விருது வரை இந்தியாவில் எந்த விருதுகளிலும் 100 சதவிகிதம் உண்மை, நேர்மை இல்லை என்பது சராசரி இந்தியனுக்கும் தெரிந்த ஒன்றுதான். பாரத ரத்னா முதல் பல்லாவரம் கலை விருது வரை இதற்கு விதிவிலக்கல்ல.

எத்தனை சதவிகிதம் நேர்மை என்ற கணக்கைத்தான் பார்க்க வேண்டியது இருக்கிறது. மற்ற விருதுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலும், ஊழலும் அதைச் சுற்றி இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் சினிமா விருதுகளின் நிலை சின்னமனூர் சின்னச்சாமி வரைக்கும் தெரியும். அண்மையில் நடந்த இரு நிகழ்வுகள் அந்த சின்னச்சாமியையும் சின்னதாக அதிர்ச்சி அடைய வைத்தது.

திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை அண்மையில் பிரமாண்டமாக நடத்தினார்கள். வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் அந்த விருது வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது. யார் யாருக்கு என்ன விருது என்பது அங்கு வந்திருக்கும் யாருக்கும் தெரியாதாம். ஒரு வி.ஐ.பி வந்து விருதை அறிவிப்பார்;

இன்னொரு வி.ஐ.பி வந்து விருதை வழங்குவார் என்பது விழாவின் நெறிமுறை. சிறந்த காமெடி நடிகர் என்று அறிவித்த வி.ஐ.பி அது யார் என்று சொல்வதற்கு முன்பாகவே ஒரு காமெடி நடிகர் விருதை வாங்க மேடைக்கு எழுந்து போனார்.

விருதை வாங்கிவிட்டு மேடையில் பேசிய சிலர், “நான்கு நாளைக்கு முன்னாடி தான் எனக்கு இந்த விருது கிடைத்திருக்கும் தகவலே தெரியும்” என்று சொன்னார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், விருது பட்டியல் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.

அதோடு ‘விழாவுக்கு வருகிறவர்களுக்கு விருது’-இதுதான் பாலிசி. அஜீத்துக்கும், ரஜினிக்கும் கடைசி வரை விருதே கிடைக்காது. காரணம் இருவரும் இது போன்ற விழாக்களுக்குச் செல்வதில்லை. இதிலிருக்கும் வியாபாரத் தந்திரங்களும், முறைகேடுகளும் அவர்களுக்குத் தெரியும்.

அடுத்த நிகழ்வு…

ரஜினிக்கு அடுத்து அவர் இடத்தை யார் பிடிப்பார் என்று அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பொதுத் தேர்தல் போன்று லட்சக்கணக்கில் வாக்கு கணக்குகளைச் சொல்லி இவர்தான் ரஜினி இடத்தை பிடிப்பவர் என்று ஒரு நடிகரை அடையாளம் காட்டினார்கள். விடுவார்களா எதிர் நடிகரின் ஆட்கள்? சமூக வலைத்தளங்களில் அந்த கருத்துக் கணிப்பைப் பற்றி கழுவிக் கழுவி ஊற்றினார்கள். அதன் பிறகு அந்த எதிர் நடிகர்தான் கடையேழு வள்ளல்களில் கடைசி வள்ளல் என்று சொல்லி சமாதானப்படுத்த வேண்டியதாகிவிட்டது.

ஹீரோக்களுக்கு இருக்கும் விருது அரிப்புதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். தேசிய விருதுகளுக்கு நடுவர்களாகச் சென்று வந்தவர்களுக்குத் தெரியும், அங்கு நடக்கும் பாலிட்டிக்ஸ். விருது கமிட்டியில் மலையாளிகள் அதிகம் இருந்தால் அதிக மலையாள சினிமாக்களுக்கு விருது கிடைக்கும், பெங்காலிகள் இருந்தால் அவர்கள் படத்துக்கு கிடைக்கும். ஒருமுறை தமிழ்நாட்டுக்காரர்கள் அதிகமாக இருக்க 12 விருதுகள் வரை தமிழுக்குக் கிடைத்து.

தேசிய விருதே இந்த லட்சணத்தில் இருக்கும்போது வியாபார விருதுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. நல்ல படங்களைத் தரும்போது மக்கள் தருகிற கைதட்டல்தான் மிக உயரிய விருது என்பதை ஹீரோக்கள் உணரும்போது இந்த விருது களேபரங்கள் மறைந்து போகும்.

-மீரான்
– See more at: http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=4128&id1=40&issue=20140721#sthash.lvEh3tsj.dpuf

Dir AR Murugadoss Interview about Kaththi

கதிர்… ஜீவா – டபுள் ரகசியம் சொல்லும் முருகதாஸ்
ம.கா.செந்தில்குமார்
 

”தமிழனுக்கு எதிரானவர்கள் எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் சரி, எங்க உழைப்பில் இருந்து அஞ்சு பைசாகூட அவங்களுக்குப் போகாது. தமிழர்களுக்கு எதிரானவங்களோட எந்தக் காரணம்கொண்டும் நானும் விஜய் சாரும் கைகோக்கவே மாட்டோம். தமிழுக்கும் தமிழினத் துக்கும் யார் எதிரிகளோ… அவங்க எங்க எதிரிகள்!”

– ‘நீங்கள் இயக்கும் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்கள் சிங்களர்கள் என்கிறார்களே..?’ என்ற டென்ஷன் கேள்விக்கு இப்படிப் பதில் அளிக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘துப்பாக்கி’யின் இந்தி ரீமேக் ‘ஹாலிடே’ பட வசூல் 100 கோடி களைத் தாண்டிய உற்சாகத்தை, மில்லி மீட்டர் புன்னகையில் மட்டுமே காட்டிவிட்டு, ‘கத்தி’ பிடித்தார் முருகதாஸ்.

”விஜய் சார்கூட பண்ண ‘துப்பாக்கி’ ஹிட். அதனால் அடுத்த படத்துக்கு தலைப்பு ‘கத்தி’னு போறபோக்குல தலைப்பு வைக்கலை. ‘கத்தி’க்கும் இந்தக் கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. மனித இனம் கண்டுபிடித்த முதல் கருவி ‘கத்தி’னு சொல்வாங்க. அந்த விஷயத்தை கதையில் ஜஸ்டிஃபை பண்ணுவோம்.

படத்தில் விஜய் சாருக்கு ரெண்டு கேரக்டர்கள்… கதிரேசன், ஜீவானந்தம்! ஆனா, அப்பா-மகன் கிடையாது. இது கேங்ஸ்டர் கதையும் கிடையாது. சென்னையில் தொடங்கி சென்னையிலேயே முடியும். இதுக்கு மேல படம் பத்தி பேசினா, இன்னும் நிறையக் கதைகள் கிளப்பிடுவாங்க.

”துப்பாக்கி’க்கு அடுத்த படம் கமிட் பண்றதுக்கு முன்னாடி, கண்டிப்பா உங்ககிட்ட கதை சொல்லிடுவேன்’னு விஜய் சார்ட்ட சொன்னேன். ‘தேவை இல்லை. இப்பவே நாம கமிட் பண்ணிக்குவோம்’னு சொன்னார். ‘இல்லை சார்… என்ன படம் பண்றோம்னு உங்களுக்குத் தெரியணும்’னேன். ‘இந்த மாதிரியான படம்தான் பண்ணப்போறோம்’னு மொத்தக் கதையையும் சொல்லிட்டு வெளியே வந்தேன். அவர்கிட்ட இருந்து ஒரு மெசேஜ்… ‘சூப்பர்ண்ணா’! ‘துப்பாக்கி’க்குக்கூட அவர் அப்படிச் சொல்லலை. ஏன்னா, ‘கத்தி’ விஜய் சார் இதுவரை பண்ணாத வித்தியாசமான முயற்சி!”

”விஜய் தவிர எல்லாருமே ‘கத்தி’ டீம்ல புது ஆட்களோ?”

”மொழி தெரியாத இடத்தில்கூட நான் வேலை பார்த்திருவேன். ஆனா, மொழி தெரியாதவங்ககூட வேலை பார்க்கிறது எனக்கு சிரமம். அதனால், என் ஹீரோயின்கள் தமிழ் புரிஞ்சுக்கணும், தமிழ் சாயல் இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். இந்த எதிர்பார்ப்புகளுக்கு மேலயும் ‘அங்கீதா’ கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்காங்க சமந்தா. சிரிச்ச முகம், எப்பவும் எனர்ஜினு ஒவ்வொரு சீன்லயும் நல்ல ஃப்ளேவர் சேர்த்திருக்காங்க. மியூசிக் அனிருத். படம் பண்றோம்னு முடிவு பண்ண நாலாவது நாள்ல, தீம் மியூசிக் போட்டுட்டார். ‘இன்னும் கதையே சொல்லலை, அதுக்குள்ள தீம் மியூசிக் எப்படி?’னு கேட்டா, ‘எப்படி இருந்தாலும் படத்துல ஹீரோவுக்குனு ஒரு தீம் இருக்கும்ல’னு சிரிக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ். நிறங்களை அவ்வளவு பிரமாதமாக் கையாள்கிறார். கலை இயக்கத்துக்கு தேசிய விருது வாங்கின இளையராஜா, ஆக்ஷனுக்கு அனல் அரசுனு பல நம்பிக்கைத் தூண்கள் இருக்காங்க படத்துல!”

”சம்பளம், மாஸ் ஹீரோ கால்ஷீட், 100 கோடி வசூல்னு தமிழ் இயக்குநர்களில் ஷங்கருக்கும் உங்களுக்கும்தான் இப்ப கடுமையான போட்டினு சொல்றாங்களே..?”

”நான் ஷங்கர் சாரின் ரசிகன். அவரோட அணுகுமுறை, கடின உழைப்பு… இதெல்லாம் சீனியர், ஜூனியர் எல்லாருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷன். நான் எப்பவுமே அண்ணாந்து பார்க்கும் நபர் அவர். அவரை மாதிரினு சொன்னாலே, எனக்குப் பெருமைதான். ஆனா, அவரைத் தாண்டிப் போகணும்னு நான் எதையும் பண்றது இல்லை. மத்தபடி எங்களுக்குள்ள போட்டி எதுவும் கிடையாது. அப்படி ஒண்ணு இருக்குனு நீங்க நினைச்சா, சந்தேகமே வேண்டாம்… எங்க ரெண்டு பேர்ல அவர்தான் பெரிய ஆள்!”

”உங்க முதல் பட ஹீரோ அஜித்கூட அடுத்து எப்போ படம் பண்ணப்போறீங்க?”

”நான் காத்துக்கிட்டே இருக்கேன். ‘துப்பாக்கி’ முடிஞ்சதும் மூணு தடவை அவரைச் சந்திச்சேன். ஆனா, ஏன்னு தெரியலை… புராஜெக்ட் தள்ளிப்போயிட்டே இருக்கு. ‘அடுத்த மாசம் ஷூட்டிங் போகலாம்’னு சொன்னாக்கூட, ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை அவருக்காக ஒரு ஸ்கிரிப்ட் என்கிட்ட இப்பவும் தயாரா இருக்கு!”

”விஜய்-அஜித் ரெண்டு பேரையும் இயக்கியிருக்கீங்க. ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் பண்ணலாமே?”

”அது அவ்வளவு ஈஸியான புராஜெக்ட்டா இருக்காது. ஆனா, அப்படி அவங்க வந்தாங்கனா, நான் ரெடி. ‘ஓ.கே.’ சொன்ன ரெண்டு மாசத்துல என்னால கதை ரெடி பண்ண முடியும். அப்படி நடந்தா, அது தமிழ் சினிமாவுல ரொம்பப் பெரிய விஷயமா இருக்கும்!”

”சமீபத்தில் பார்த்த தமிழ் சினிமாக்களில் பிடிச்ச படங்கள்?”

”நான் பார்த்ததே கொஞ்சம் படங்கள்தான். அதில் பிடிச்ச ரெண்டு படங்கள்… ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பண்ணையாரும் பத்மினி’யும். அம்மா, அப்பா, தங்கை, குழந்தைனு ஏகப்பட்ட சென்டிமென்ட் படங்கள் பார்த்திருப்போம். ஆனா, ஒரு காரை கேரக்டரா வெச்சு சினிமா பண்ணலாம்னு ஒரு டைரக்டருக்குத் தைரியம் வந்ததே பெரிய ஆச்சர்யம். அதை ‘பண்ணையாரும் பத்மினி’யும் படத்துல அழகா பிரசன்ட் பண்ணியிருந்தாங்க. வேற எந்த மொழியிலும் எந்த இயக்குநரும் நினைச்சே பார்க்க முடியாத கான்செப்ட் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. இந்த வருஷத்துல நான் பார்த்த பெஸ்ட் படம் அதுதான். ஆனா, தமிழ் ரசிகர்கள் அந்தப் படத்துக்குச் சரியான மரியாதை தரலைங்கிற ஆதங்கம் எனக்கும் இருக்கு!”

”நிறைய புது ஹீரோக்கள் வந்துட்டாங்க. ‘இவங்களோட சேர்ந்து பண்ணலாம்’னு உங்களுக்குத் தோணும் ஹீரோ யார்?”

”தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி. இவங்களால இன்னும் நிறைய வெரைட்டி பண்ண முடியும்னு தோணுது. அதிலும் விஜய் சேதுபதியின் டயலாக் டெலிவரி, சினிமா பார்த்துட்டு இருக்கோம்கிற நினைப்பே கொடுக்காம, யாரோ ஒருத்தரோட பெர்சனலாப் பேசிட்டு இருக்கிற மாதிரி நினைக்கவைக்குது. எதிர்காலத்துல இவங்களை வைச்சு நிச்சயம் படங்கள் பண்ணுவேன்!”

” ‘கத்தி’ படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு சிங்கள நிறுவனம்னு எதிர்ப்பு கிளம்பியதே… எது உண்மை?”

”அது உண்மை இல்லை. நாங்க முதல்ல ஐங்கரன் நிறுவனத்தோட ஒப்பந்தம் போட்டோம். அவங்கதான் லைகா புரொடக்ஷன்ஸோட டை-அப் பண்ணிக்கிட்டாங்க. ‘ஏதோ இலங்கையைச் சேர்ந்தவங்க’னு சொல்றாங்களேனு விசாரிச்சா, அவங்க ஈழத் தமிழர்கள்னு தெரியவந்தது. மத்ததெல்லாம் பரபரப்புக்காகக் கிளப்பிவிடப்பட்ட வதந்திகள்!”

”இந்திய அளவில் பிரபலமான உங்களைப் போன்ற இயக்குநர்கள் ஏன் ஈழத் தமிழர்களின் வலிகுறித்து ஒரு சினிமா இயக்கக் கூடாது?”

”ஈழத் தமிழர்களின் உண்மையான எதிரிகள் யார், அங்கே இறுதிக் கட்டப் போர்ல என்ன நடந்துச்சுனு கடந்த ஆட்சியில் சொல்ல முடியாத சூழல். ஆனா, இப்ப அதைப் பத்தி பேசக்கூடிய சுதந்திரம் இருக்குனு நினைக்கிறேன். ஈழத் தமிழர்களின் வலியை உண்மையும் நேர்மையுமா உலகத்துக்குப் புரியவைக்கணும்னு எனக்கும் ஆசை.

சினிமாவுல நடிக்க வெளிநாட்டுல இருந்து ஒரு ஃபைட்டரை வரவழைக்கிறோம். அவரைப் பத்திரமா ஊருக்குத் திருப்பி அனுப்புற வரை அவ்வளவு பயம், பதற்றமா இருக்கும். அவர் டிராஃபிக்ல சிக்கிட்டு தாமதமாச்சுனாகூட, ‘என்னாச்சு?’னு தூதரகங்கள்ல இருந்து கேள்வி, விசாரணைனு பிரிச்சு மேய்ஞ்சிருவாங்க.

ஆனா, நம்ம மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டே கொன்னாலும் ‘வழக்கமான செய்தி’னு கடந்து போயிடுறாங்க. இதே இந்தியாவில் கேரள மீனவர்களை வேற நாட்டு ராணுவம் சுட்டப்ப, அவங்களைக் கைது பண்ணாங்களா, இல்லையா? அந்த மாதிரி ஒரு சிங்கள ராணுவ வீரராவது இதுவரை கைதுசெய்யப்பட்டு இருக்கிறாரா? இது பத்தியெல்லாம் தமிழ் சூழல் புரிந்த இயக்குநர்கள் படமெடுத்து, நம்ம நிலைமையை உலகத்துக்கு எடுத்துச் சொல்லணும். என் பங்குக்கு என்ன பண்ண முடியுமோ, நிச்சயம் நானும் அதை செய்வேன்!”

மனித வாழ்க்கையில் துன்பம் என்பது இருந்துகொண்டே இருக்கிறது!

மனித வாழ்க்கையில் துன்பம் என்பது இருந்துகொண்டே இருக்கிறது!

 Print Bookmark My Bookmark List

 

 

வசந்தபாலன்

‘‘எனக்கு இயக்குநர் கே.விஸ்வநாத்தைப் பிடிக்கும். ‘சங்கராபரணம்’, ‘சலங்கை ஒலி’ என கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அதன் பூரண அழகோடும், தெளிவோடும், நேர்த்தியாக எடுத்து வைத்தவர். எப்படியாவது கலைஞர்களின் வாழ்க்கையை நாமும் பதிவு செய்ய வேண்டும் என்பது விருப்பமாக மாறிவிட்டது. ஒருமுறை ஜெயமோகனோடு ஒரு இரவு பேசிக் கழிக்க நேர்ந்தது. 

அவர் பேச்சு அவ்வை சண்முகத்தின் நாடக வாழ்க்கை பற்றியிருந்தது. அதிலிருந்த ரத்தமும் சதையுமான பதிவுகள்தான் என்னை ‘காவியத்தலைவ’னுக்குக் கொண்டு சென்றன’’ – நினைப்பதை நிதானமாகப் பகிர்கிறார் இயக்குநர் வசந்தபாலன். நமக்கு வசந்தபாலனைப் புரிந்துகொள்வதில் எந்த சிரமமுமில்லை. பாலனின் பார்வை சமூகம், வாழ்க்கை, மனித இயல்புகள், மன நுட்பங்கள் என ஆழங்களில் விரிவதுதான்.


‘‘சில காட்சிகளைப் பார்க்கும்போதே, ‘காவியத்தலைவன்’ வேறொரு தளத்தில் இயங்குவது புரிகிறது. எப்படியிருந்தது அதன் தயாரிப்பு?’’‘‘நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை சொல்லணும் என பிரியப்பட்டது உண்மைதான். அதற்கான முயற்சிகள் கைகூட சிரமப்பட வேண்டியிருந்தது. உண்மைத்தன்மைக்கும், சம்பவங்களுக்கும், கதைக்கோர்வைக்கும் நிறைய மெனக்கெட்டேன். ஏராளமான தரவுகளைக் கைக்கொள்ள நேரம் பிடித்தது. 

கிட்டப்பா, கே.பி.சுந்தராம் பாளின் குறிப்புகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. ஆனால், அதை எடுத்துக்கொள்ள தயக்கம் இருந்தது. அவர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள். அவர்களின் வாழ்க்கையை சொல்லப் போய், சிறிது பிசகினாலும் அசிங்கமாகிவிடும். படத்தின் மொத்தத் தன்மையும் வேறு மாதிரியாகிவிடும். அதனால் படித்தறிந்த, கேட்டறிந்ததை வைத்து புதிதாக ஒரு ஸ்கிரிப்ட் எழுதினேன். அதை வசனத்துக்காக ஜெயமோகனிடம் ஒப்படைத்தபோது, ‘உங்களது அருமையான ஸ்கிரிப்ட்டில் எனது வசனங்கள் மிளிரும்’ என்றார். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது. 
இதில் ஒருபோதும் நாடகக்காரர்களின் வாழ்க்கையை தரம் குறைந்ததாக சித்தரிக்கவில்லை. நாடகங்களில் ஒரு ராத்திரி முழுக்க கத்தி, கூப்பாடு போட்டு, வசனம் பேசி, ஆடிப் பாடுகிறவர்களின் வாழ்க்கையில் சொல்ல நிறைய இருந்தது. 

அவர்கள் நம்மை மகிழ்வித்ததற்குக் கீழே… அடிமட்டத்தில்… அங்கு தீராத துக்கம் இருந்தது. அவர்களுக்குள்ளும், அவர்கள் வாழ்க்கையிலும் பொறாமை, ஏமாற்று, வஞ்சனை, தவறுகள் என கறுத்த பக்கங்கள் இருந்தன. நான் நியாயத்தின் பக்கமாக செயல்பட்டேன். தர்மம் வெல்லும் என்ற மாதிரியான எளிய நியாயமல்ல அது. அபூர்வமாக சுடர் விடும் ஒளியையும், மனசாட்சியின் வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கிறேன். வித்தியாசப்பட்ட நல்ல சினிமாவை நம்புகிறவர்களுக்கு, வேண்டுபவர்களுக்கு ‘காவியத்தலைவன்’ வரப்பிரசாதம். தெரிந்தோ தெரியாமலோ மாற்று சினிமாவின் பாதையில் போய்க்கொண்டு இருப்பது எனக்கு சந்தோஷமளிக்கவே செய்கிறது.’’

‘‘சித்தார்த், பிரிதிவிராஜ் வேடங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன…’’‘‘கிட்டப்பாவின் சின்ன வயது போட்டோ ஒன்றைப் பார்த்தபோது, அதில் சித்தார்த்தின் முகச்சாயல் தெரிந்தது. அவர் தமிழுக்குக் கிடைத்திருக்கிற அக்கறையுள்ள கலைஞன். அவர் கதையைக் கேட்டபோது உற்சாகத்தோடு முன்வந்தார். பிரிதிவிராஜ் கொஞ்சமும் யோசிக்காமல் ‘சரி’யென் றார். இதற்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால்தான் மிகச்சரியாக இருக்கும் என நினைத்தேன்.

ரஹ்மான் இதற்கு இசையமைக்க முன்வந்தால் பெரும் எழுச்சி இருக்கும் என நினைத்துபோது, சித்தார்த் தானே அந்த முயற்சியைத் தொடங்கினார். சொல்லும்போதே கதை ரஹ்மானுக்குப் பிடித்திருந்தது அவரது முகபாவத்தில் தெரிந்தது. ‘இரண்டு வாரங்கள் கழித்து சொல்கிறேன்’ என்றவர், சீக்கிரம் சித்தார்த் செல்லுக்கு ‘கிட்டப்பா ரெடி’ என எஸ்.எம்.எஸ் செய்தார். கதைத்தன்மைக்கு மிகவும் பொருத்தமான டியூன்கள். வேறு சினிமாக்களுக்கு பயன்படுத்தவே இயலாத பிரத்யேகமான பாடல்கள். ‘சங்கமம்’ படத்திற்குப் பிறகு இது மாதிரி அவர் செய்ததேயில்லை. ழுழு பாய்ச்சலோடும், உயர்ந்த தளத்திலும் வந்திருக்கிறது. ரஹ்மானைக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது சும்மா இல்லை. 

பிரிதிவிராஜ் ஏராளமான திறமைகளை புதைத்து வைத்திருக்கிற மனுஷன். சித்தார்த், பிரிதிவி இரண்டு பேருக்கும் ஸ்கிரிப்ட் தெரியும், காட்சி நுணுக்கம் புரியும், டயலாக் கூட எழுத முடியும். எவ்வளவு தூரம் அழுத்தம் கொடுக்கலாம்னு தெரிஞ்சவங்க… இதுக்கு மேலே நாசர், பொன்வண்ணன், சிங்கம்புலி, தம்பி ராமய்யா எல்லாருமே டைரக்ஷன் தெரிஞ்சவங்க. இவங்களை ஏமாத்தவே முடியாது. நீங்கள் இந்த ஸ்டில்களை பார்க்கும்போது கிடைக்கும் மனச்சித்திரத்தை விட, பல மடங்கு செறிவுள்ளதா இருக்கும் இந்த சினிமா. கதையம்சம் நிறைந்த தெளிவான வாழ்க்கையின் பதிவிற்கு தயாராக இருக்க நான் தமிழ்மக்களை அழைக்கிறேன்…’’

‘‘நீங்கள் ஹீரோயின்களை வெறும் கவர்ச்சிக்காக பயன்படுத்துவதில்லை…’’‘‘இதிலும் அதே நடைமுறைதான். ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா 2’ டிரெய்லர் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. அதன் ஹீரோயின் அனய்காவைத் தேடிப் பார்த்தபோது, அவரை எவ்வழியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியில் ராம்கோபால் வர்மாவின் அலைபேசிக்கு என்னைப் பற்றி சிறு குறிப்பு சொல்லிவிட்டு, அனய்காவின் எண்ணைக் கேட்டு எஸ்.எம்.எஸ் செய்தேன். 

அடுத்த 10 நிமிஷத்தில் பதில் வந்தது… ‘நாளை அனய்கா உங்களோடு பேசுவாள்’. அனய்கா அதே போல பேசிவிட்டு, ஷூட்டிங் வந்து சேர்ந்தார். வேதிகாவே என் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அவரே சில போட்டோக்களை கதைத் தன்மையோடு எடுத்து அனுப்பி வைத்தார். மிகவும் பொருத்தமாக இருந்தது. இவர்கள் என் கதைக்கு நியாயம் செய்திருக்கிறார்கள் என நம்பகமாகச் சொல்வேன்!’’‘‘ஒரு படத்தை எடுக்க எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?’’

‘‘நான் எப்பவும் அடர்த்தியாக கதை சொல்றதை விரும்புவேன். ஒரு சினிமா உங்களை எமோஷனலாக தொட வேண்டும். ‘வெயில்’ படத்தில் 20 வருஷம் கழிச்சு வீட்டுக்குத் திரும்பியவனின் வலி அவ்வளவு பெரிசா இருந்தது. எத்தனை பேர் கலர்ஃபுல்லாக லைஃப்பை பார்க்கிறாங்க? மனித வாழ்க்கையில் துன்பம்ங்கிறது இருந்துக்கிட்டே இருக்கிறது… ஏதோ ரெண்டு பர்சென்ட் சந்தோஷமா இருக்கிறதை கணக்கில் சேர்க்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை புதுசா, நேர்மையா, விறுவிறுப்பா, ஏமாற்றம் இல்லாமல், பொய் இல்லாமல் படம் செய்யணும்னு நினைக்கிகீறேன்!’’

– நா.கதிர்வேலன்

கிளாமர் நடிப்பு ஓகே!

மலையாளத்தில் வெளிவந்த ‘டிராகுலா’ படம் மூலம் அறிமுகமானவர் மோனல் கஜார். அவர் தற்போது ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் அழகான நகைச்சுவை ராட்சசியாக நடித்திருக்கிறார். அவரிடம் தமிழ்ப்படம் அனுபவம் குறித்துக் கேட்டோம்:

வானவராயன் வல்லவராயன்’ படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே நடந்தது. படத்தில் என் பேரு அஞ்சலி. என் அம்மாவா மீரா கிருஷ்ணன், அப்பாவா ஜெயபிரகாஷ், அண்ணனா எஸ்.பி.பி. சரண் என்று ஒரு குடும்பத்தோடு 50 நாட்கள் வாழ்ந்தது போல் இருந்தது இந்தப் படத்தில் நடித்த அனுபவம். கிராம மக்கள் காட்டிய அன்பை மறக்க முடியலே. அவ்வளவு அன்பாய் பழகினாங்க. நான் குஜராத்தைச் சேர்ந்தவள். தமிழகக் கலாசாரம் ரொம்பப் பிடிக்கும். படத்தில் நானும் கிருஷ்ணாவும் ஒரு கல்யாண வீட்டில் சந்திப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. காமெடியான வேடம் எனக்கு. கொங்குநாட்டுத் தமிழ்ப் பெண்ணா நடிச்சாலும் கோவைத் தமிழ் இப்போ சர்வ சாதாரணமா பேசுவேன்.”

ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி?

கோவை சரளா ரொம்பக் கலகலப்பா சிரிக்க வைப்பாங்க. அப்புறம் சௌகார் ஜானகி. எவ்வளவு வருஷமாக நடிச்சிட்டிருக்காங்க. அவங்ககிட்டே எல்லாம் பழகி பேசினதே என் வாழ்வில் ஒரு அபூர்வம். கிருஷ்ணா நல்லா நடிப்புச் சொல்லித் தருவாரு. அவரு தம்பியா வர்ற மா.கா.பா.ஆனந்த் ‘அது இது எது’வில் நடக்கும் காமெடியைச் சொல்லிச் சொல்லி யூனிட்டையே கலகலப்பாக்குவார். மொத்தத்தில் படம் முடியறதுக்குள்ளே நானும் கொங்குத் தமிழ் பெண்ணாவே மாறிட்டேன்.”

நீங்க யாருக்குச் செல்லம், உங்களுடைய பொழுதுபோக்கு?

அம்மாவுக்கு நான் ஆல் டைம் ஃபேவரைட். வீட்டில் தனியாக இருக்கும் போது டி.வி. பார்ப்பேன். எனக்கு நடனம், ஸ்விம்மிங், பேஸ்கட்பால் பிடிக்கும்.”

கதை உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?

ஆக்சுவலா இயக்குநர் ராஜமோகன் நல்ல நகைச்சுவையானவர். அவர் காட்சி அமைப்பை விளக்கும்போதே, எனக்குச் சிரிப்பு வந்திடும். கிருஷ்ணாவும் நானும் காதலிப்போம். அவரு 30 தடவை காதல்லே தோத்துப்போனவர். ஒரு கல்யாண வீட்டில் என்னைச் சந்திச்சு, அதுக்குப் பிறகு லவ் பண்ணுவோம். அவருடைய தம்பி, மா.கா.பா.ஆனந்த் எங்க காதலைப் பிரிக்க நெனைச்சு அவரு பண்றது எல்லாம் காமெடிதான். விழுந்து விழுந்து சிரித்தேன்.”

கிளாமர் பண்ணுவீங்களா?

கிளாமர் மட்டுமல்லாமல் நடிக்கறதுக்கு வாய்ப்புள்ள ஒரு கேரக்டர் கிடைத்தால் என் திறமையைக் காட்டுவேன்.”

நரேந்திரமோடி உங்க ஊருதானே. அவரு வெற்றியை எப்படி பார்க்கிறீங்க? காதலைப் பற்றி உங்க ஐடியா?

நான் ரொம்ப சின்னப் பொண்ணு. அரசியல், காதல் இரண்டும் இப்போது வேண்டாம். யாரு வந்தாலும் சந்தோஷம்தான். நான் குஜராத் பொண்ணு என்பதால் நரேந்திரமோடி பிரதமர் ஆனா எங்க ஊருக்குத்தானே பெருமை.”