Skip to content

சினிமா விமர்சனம் – ஜில்லா

January 16, 2014

ரௌடி வளர்ப்பு மகன் போலீஸாக மாறி, ரௌடி அப்பாவைத் திருத்தினால்… அதுவே ஜில்லா!  

மோகன்லால் – விஜய் என மாஸ் ஆக்ஷன் மசாலா ட்ரீட் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நேசன். மோகன்லாலைக் கொல்ல நடக்கும் முயற்சிகளைச் சொல்லிவிட்டு, பின்பாதியில் அத்தனை விஷயங்களையும் ஒன்றாகக் கோக்கும் இடத்தில் மட்டும் சுவாரஸ்யம். மற்றபடி பன்ச், பில்டப் என்று மசாலாவைக் ‘காட்டு காட்டென்று’ காட்டியதில் கண்ணைக் கட்டுகிறது!

கம்பீர ரௌடி சிவனாக மோகன்லால்… அசத்தல்! நரை தாடி, அகல பாடி எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் வசீகரிக்கிறார். ஆனால், ‘இந்தச் சிவனை…’, ‘இந்தச் சிவனுக்கு…’ என ஆரம்பித்து மதுரையில் உட்கார்ந்துகொண்டு அவர் அடிக்கும் பன்ச்களில்… மலையாள வாடை தூக்கல்!

ஆக்ஷன் கதைக்கு விஜய்யின் எக்ஸ்பிரஷன் களும், பாடிலாங்குவேஜும் பக்கா. தீ விபத்தில் பலியான குழந்தைகளைப்  பார்த்துக் கலங்குவதும், அப்பா பாசத்தில் உருகுவதுமாக செம. ஆனால், ஒரு பக்கமாகச் சாய்ந்து சாய்ந்து நடக்கும் ஸ்டைல்… வேணாம் ப்ரோ!  

லேடி போலீஸ் காஜல் அகர்வால். கண்களைச் சுருக்கிக் கோபப்படுவதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. சம்பத் கோபம், நக்கல், நையாண்டி, வெறி… என எல்லாம் கலந்துகட்டி அடிக்கிறார்.  செம சீரியஸ் கதையில் கொஞ்சம் சிரிப்பு மாவு பிசைவது ‘பரோட்டா’ சூரிதான். ”என்னாது ‘சாந்தி’ங்கிறது மாடர்ன் பேரா..? காந்தி காலத்திலேயே தடை பண்ணின பேருடா அது…” என்று விஜய் காதலுக்கு லந்து கொடுக்கும் இடங்களில் கிச்சுக்கிச்சு!

மிரட்டல் அப்பா – அவரது ப்ளஸ் மைனஸ் எல்லாம் அறிந்த செம ஷார்ப் மகன்… இவர்களுக்கு இடையிலான மோதல் தூள் கிளப்ப வேண்டாமா? ஆனால், ஏதோ செல்லச் சண்டை போட்டுக்கொள்வது போல, ‘திருந்து – திருந்த முடியாது’ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஜாலி கேலி முன்பாதி ரசிக்கவைத்தாலும் இரண்டாம் பாதியில் அவ்வளவு நீள ஃப்ளாஷ்பேக்குகள்… சலிப்பு. ‘நாம ரௌடியா இருக்கோம்… போலீஸாவும் இருந்தா என்ன?’ என்ற எண்ணமும், திருந்திய விஜய்க்கு சீனியர் பதவி உயர்வு வழங்கும் இடமும்… ப்பா£.!

இமான் இசையில் ‘கண்டாங்கி…’, ‘மாமா எப்போ ட்ரீட்டு?’ பாடல்கள் ரண்டக்க ரண்டக்க ரகம். ஆக்ஷன் படத்துக்கான ஃபுல் டெம்போவையும் கடத்துகிறது கணேஷ் ராஜவேலுவின் ஒளிப்பதிவு.

ரொம்ப நேரம் ஜில்லாவைச் சுற்றிக் காட்டிக்கொண்டே இருந்தால்,  கண்ணு வேர்க்காதா பாஸ்?

– விகடன் விமர்சனக்குழு

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: